Picture : Anupam Kher’s twitter page
இந்தி நடிகர் அனுபம் கெர் நியூ யார்க் சென்றிருக்கிறார். தான் பயணம் செய்யும் வரையிலும் பொழுது போக வேண்டுமே என்று டிவிட்டரில் தனது ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். #askanupam
அப்போது பல கேள்விகள் அவரது இணையதள ரசிகர்களால் எழுப்பப் பட்டுள்ளனர். அதற்கு சுவையாகவும் சலிக்காமலும் பதில் கூறியுள்ளார் அனுபம் கெர். அப்போதுதான், பிரதமர் நரேந்திர மோடி தன் முயற்சியால் முன்னேறிய தலைவர் என அவர் பாராட்டியுள்ளார்.
I am on a flight from Houston to New York. Let’s do a brief Q&A. Please use hashtag #AskAnupam. Go for it.:) pic.twitter.com/HLE9JKmHPJ
— Anupam Kher (@AnupamPKher) August 27, 2018
ட்விட்டரில் அவரிடம் அவி டாடியா என்பவர் ஒரு கேள்வி எழுப்பினார். நரேந்திர மோடியையும் ராகுல் காந்தியையும் ஒப்பிட்டு விளக்குங்கள் என்று கேட்க, அதற்கு அனுபம் கெர், “பிரதமர் மோடி தன் முயற்சியால் முன்னேறியவர். இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரிடம் தெளிவான வரைபடம் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்திக்கு ஆரம்பத்திலிருந்தே எல்லா சலுகைகளும் கையில் பறிமாறப்பட்டது. தலைவர் பதவியும்கூட. அதனால், அவருக்கு இந்தியாவின் எதிர்காலம் குறித்து எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை” என பதில் அளித்திருக்கிறார்.
Mr. Modi is a self made man. He seems to have kind of a road map for the development of India. Mr. Gandhi has so far got things on a platter so he is yet to tell us what is his vision for the future of India?:) https://t.co/AQXIqdG5uj
— Anupam Kher (@AnupamPKher) August 27, 2018
அண்மைக் காலமாக ராகுல் ஜெர்மணி, லண்டன் என வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பேசியவை, வேலை வெட்டி இல்லாதவர்கள்தான் மோடி, டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் என பேசியது, டோக்லாம் உள்ளிட்ட விவகாரங்களில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு, அது குறித்து விமர்சிப்பது, உள்நாட்டு விவகாரங்கள் குறித்து புரிதலற்ற பதில்களை அளிப்பது, உள்ளிட்டவை அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தூண்டியுள்ளன.