Homeஅடடே... அப்படியா?நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

letter to president - Dhinasari Tamil

“பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் (நகர்ப்புற நக்சல்களுக்கு) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா?“ – திரு ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னாள் உள்துறை அதிகாரி “நீதித்துறையில் முறைகேடுகள்” பற்றி ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் அதிரடி கடிதம்!

இம்மாதிரி ஒரு கடிதம் எழுத தைரியம் வேண்டும். இவர் மீது நீதிபதிகள் அவதூறு வழக்கு தொடுக்காமல் இருக்க வேண்டும். இந்தக்கடிதத்தை ஏற்று ஜனாதிபதி தலையிட்டால் முதலில் முன்னுரிமை வழங்குவது நிறுத்தப்படும். பின், அவதூறு வழக்கு சட்டம் நீக்கப்படலாம் அல்லது திருத்தப்படலாம்.

வாட்டிகன் சோனியா மற்றும் பக்கோடா சிதம்பரத்தின் “ஹிந்து தீவிரவாத” ஜோடிப்பு (மலேகான்) வழக்குகளில் ஒத்துழைக்காத இந்த ஆர்.வி.எஸ் மணியை சிகரெட் துண்டுகளால் சுட்டார்கள் ப.சி ஆட்கள். பல கொடுமைகளுக்கு உட்படுத்தியும் அவர் இசையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு,

நாட்டின் பாதுகாப்பு, பிரதம மந்திரியின் பாதுகாப்பு மட்டுமன்றி இந்திய சட்டத்தை மதிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு கருதி இந்த மிக முக்கியமான விஷயத்தில் நீங்கள் தலையிட கோருகிறோம். நாட்டின் நலனுக்கு எதிரான சில சக்திகள் நீதித்துறையில் மீண்டும் மீண்டும் தலையிடுகின்றன. நம் நாட்டின் பிரதமரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கூட்டத்தை பற்றி புலனாய்வு அமைப்புகள் அதிக கவனத்துடன் ஆதாரங்கள் சேகரித்தும், அந்த கூட்டத்திற்கு கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

2) புலனாய்வு அமைப்புகள் இந்த ஐவரை காவலில் எடுக்க தேவையான தேடுதல் வேட்டைகள் நடத்தும் போதே, மனித உரிமை குழுக்கள் என்று கூறிக்கொள்ளும் சிலரின் மனுவை விசாரணைக்கு எடுத்து, உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறையினர் அந்த ஐவரையும் கைது செய்யவிடாமல் தடுத்திருக்கிறார்கள். டில்லி நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்க சொல்லியிருக்கிறது. இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் எப்படி நீதித்துறையினர் பாதுகாப்பு அளிக்க முடிவெடுத்தார்கள் என்பது புரியாத புதிர். 50 ஆயிரம் வழக்குகள் நிலுவையிலிருக்கும் உச்சநீதிமன்றத்தில் எப்படி இந்த மனுவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதும் புதிர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா என்பதே கேள்வி.

3) சதிகாரர்களின் முந்தைய செயல்கள்.

2008இல் பாராளுமன்றத்தில் இந்த மனித உரிமை குழுக்களின் இந்தியா விரோத போக்கை அரசு (யுபிஏ) ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு “பாதுகாப்பு அச்சுறுத்தல் இவர்கள்” என காஷ்மிர் மாநிலத்தில் 2011இல் நுழைய விடாமல் தடுத்தது அரசு (யுபிஏ). இவர்களில் சிலர் ஏற்கனவே சிறைத்தண்டனையும் அனுபவித்தவர்கள். இந்த தேசவிரோதிகள் மற்றும் குற்றவாளிகளின் கடந்தகால இந்த செயல்கள் (இவர்களுக்கு எப்படி உச்சநீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது என்பதை) ஆதரிக்கும்படியாக இல்லை.

4) இந்தியா விரோத சக்திகள் இந்த சதியின் பின்னணியில்.

இந்த ஒரு வழக்கு மட்டும் இல்லாமல் பல வழக்குகளிலும் இந்த நிலை தொடர்கிறது. கிரிமினல் குற்றவாளிகள், சதிகாரர்கள், பயங்கரவாதிகள், நக்சல்கள், மற்றும் தேசத்தின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் நீதிமன்றத்தால் பல வழக்குகளிலும் பாதுகாக்கப்படுவது பொதுமக்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ-யிடமிருந்து பணம் பெறும் கைக்கூலி ஸ்லீப்பர் செல்கள் இந்த வேலைகளில் ஈடுபடுவதை பற்றி அரசு சமர்ப்பித்துள்ளது. இந்த ஸ்லீப்பர் செல்கள் நீதிபதிகளையும் ஊடுருவி விட்டனரா, அதனால் தான் இம்மாதிரியான தவறான தீர்ப்புகள் மீண்டும் மீண்டும் வருகின்றனவா என்பதே கேள்வி.

5) முந்தைய வழக்குகள்.

மற்ற வழக்குகளை விசாரிக்காமல், இம்மாதிரி கிரிமினல்களுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது முன்னரும் நடந்திருக்கின்றன. கருணை மனு நிராகரிக்கப்பட்ட தீவிரவாதி யாகூப் மேமனை தூக்கு தண்டனையிலிருந்து காக்க நடு இரவில் விசாரித்தது உச்சநீதிமன்றம். இம்மாதிரி முன்னுரிமை பலன்கள் சாமானியருக்கு கிடைப்பதில்லை.

“பாரதத்தை துண்டாக்குவோம்” என்று கோஷமிட்ட மாணவர்களுக்கும் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது. அவர்கள் இன்னும் வெளியில் சுற்றித்திரிகிறார்கள். தங்களது நாட்டை உடைக்கும் சித்தாந்தம் பற்றி பேசிவருகிறார்கள்.

இம்மாதிரி வழக்குகளிலிருந்து தெரியவருவது, நம் நீதிபதிகளில் சிலர் வீழ்ந்துவிட்டனர் (have been compromised ), ஐ.எஸ்.ஐ உள்ளிட்ட இந்தியா விரோத சக்திகளின் வேலைகளை செய்கிறார்கள் என தோன்றுகிறது / நம்ப முடிகிறது.

6) பரிகாரத்துக்கு இடமில்லை…

சாதாரண குடிமக்கள் நாங்கள். நீதித்துறையை நாங்கள் விமர்சித்தாலோ அல்லது அதன் குற்றங்களை எடுத்து கூறினாலோ நீதிமன்ற அவமதிப்பு (Contempt of Court) என்ற கொடிய சட்டம் எங்கள் மீது பாய்ச்சப்படுகிறது. இந்த சட்டம் நீதியை பரிகசிக்கிறது .

நீதி வேண்டி நீதிமன்றம் செல்லுவோர் அந்த நீதிமன்றத்தில் நடுநிலையான தீர்ப்பு கிடைக்காததை விமர்சித்தாலோ, கருத்து தெரிவித்தாலோ, அதே நீதிமன்றம் அவர்களை நீதிமன்ற அவமதிப்பு என்ற கொடிய சட்டத்தை கொண்டு தண்டிப்பது நீதியை பரிகாசம் செய்யும் செயல்.

இந்த நீதிபதிகளை அம்பலப்படுத்தவோ அல்லது தகுதிநீக்கம் செய்யவோ அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. சாமானியர்கள் தங்கள் குறைகளை இம்முறையில் தீர்த்துக்கொள்ள முடியாது.

மேலும், சம்பந்தப்பட்ட நீதித்துறையினரை நீக்க தகுதிநீக்கம் உதவுகிறது. அப்படி தகுதிநீக்கம் செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட நீதிபதி தன் கையாட்களை (handler) உபயோகித்து தீர்மானம் கொண்டுவந்தவரை பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்.

7) உங்கள் கனிவான தலையீடு தேவை…

எனவே, எங்களுக்கு நாட்டின் தலைவரான உங்களை அணுகுவதை தவிர வேறு வழியில்லை. மேலும் உச்சநீதிமன்றமும் இதர நீதித்துறையும் உங்கள் மேற்பார்வையில் இருப்பதால், நீங்கள் தலையிட்டு, நிலைமை மேலும் மோசமாகமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். அதுமட்டுமன்றி, நாட்டின் எந்த நீதிமன்றத்திலும், விசாரணையில் எவருக்கும் முன்னுரிமை வழங்க கூடாது என்பதற்கேற்ற வரைமுறைகளையும் வரையறுக்க கேட்டுக் கொள்கிறேன்.

Explosive letter to the President of India by an ex-Home Ministry Official

Explosive letter by RVS Mani, former Under-Secretary in the Ministry of Home Affairs who was tortured and harassed by the CBI during the UPA rule

https://www.pgurus.com/explosive-letter-to-the-president-of-india-by-an-ex-home-ministry-official/

நகர்ப்புற நக்சல்கள் / #Urban_Naxals

– செல்வம் நாயகம்!

 

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,848FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version