அக்டோபர் 4ம் தேதியில் இருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீஸல் விலையில் ரூபாய் 2னை தனது வரியில் இருந்து குறைத்தது மத்திய பாஜக அரசு. மாநில அரசுகளும் அவர்களுடைய VAT வரியைக் குறைக்குமாறு பாஜக அரசு வேண்டிக் கொண்டது.
பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மஹாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் ப்ரதேஷ் மாநிலங்கள் தனது VAT வரியினைக் குறைத்துக் கொண்டன.
பாஜகவிற்கு எதிரான மற்றும் பாஜக-அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த VAT வரியினைக் குறைக்க மறுத்துவருகின்றன.
கர்நாடகாவின் முதலமைச்சரான குமாரசாமி தன் எதிர்ப்பைக் காட்ட, மற்றக் கட்சிகள் செய்யத் துணியாத ஒன்றையே செய்தார். தனது மாநிலத்தின் VAT வரியை அவர் மிக மிக அதிகமாக உயர்த்தினார்.
VAT எனும் கொள்ளை வரிக்குப் பதிலாக GST எனும் ஓரளவு நியாயமான வரிவிதிப்பை பாஜக அரசு மாநில அரசுகளின்மேல் திணிக்க முயல்கிறது. அதற்காகவே தனது மத்திய அரசு வரியைக் குறைத்துக் கொண்டால், அதற்கு எதிராக பாஜக அல்லாத மாநில அரசுகள் செயல்படும்; வரி குறைக்காத மாநில அரசுகளின்மேல் மக்களின் கோபத்தைத் தூண்டி விடலாம் எனக் கணக்குப் போட்டது பாஜக்.
இந்தச் சதித் திட்டத்தில், வழக்கம்போல, பாஜக கட்சி மற்றும் அரசுகள் தங்களது பலகீனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
பலகீனங்கள்: தகவல் தொடர்பு மற்றும் மக்களின் அறியாமை. விளைவாக, இந்தப் பலகீனங்களால் மக்களின் கோபத்தை பாஜக அரசுகளுக்கு எதிராகத் திருப்பிவிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக் கட்சிகள் மிகப் புத்திசாலித்தனமாக எடுத்த எதிர்வினைதான் இந்த பாரத் பந்த்.
மக்களின் மந்தைக் குணத்தையும், தங்களால் விலைக்கு வாங்க முடிந்த ஊடகங்களின் பொய்யான தகவல்ப் ப்ரச்சாரங்களையும் வைத்துக் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீஸல் விலையேற்றத்திற்கான பழியை, மத்திய அரசுமேல் சுமத்திவிட்டன காங்கிரஸும் மற்ற கட்சிகளும்.
மந்தை மக்களுக்கு இந்தப் பொய்ச் செய்தியைப் பரப்ப அவர்கள் தேர்ந் தெடுத்ததுதான் இன்றைய பாரத் பந்த்.
இந்தியா முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் தலைவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து இந்தக் காரியத்திற்கான வெற்றியைப் பெற காங்கிரஸின் 60 ஆண்டுகால சுரண்டலும், மற்றக் கட்சிகளின் ஊழல்களும் உதவும்.
ஊழல் செய்து பணமும் சம்பாதிக்காமல், ஊடகத் தொடர்புகளுக்குப் பணமும் தராமல் பாஜகவினால் தாக்குப் பிடிப்பது கடினமே.
இருப்பினும், மோதி ஜி எனும் ஆளுமையின்மேலுள்ள நம்பிக்கையால், (அந்த நம்பிக்கையும் மந்தைக் குணமே) பெரும்பாலான பொதுமக்கள் பெட்ரோல் விலையேற்றத்திற்கான பழியை மத்திய அரசின்மேல் சுமத்தத் தயாராக இல்லை.
ஆனால், காங்கிரஸ் மற்றும் எதிரிக் கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரங்கள் மூலம் மக்களின் அறியாமையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், மக்கள் மத்திய அரசின்மேல் எதிர்ப்புணர்வு கொள்வது திண்ணம்.
மத்திய அரசின் மக்கள் ஆதரவுப் போக்கு, மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு பற்றி அறிய, இதைப் படித்துப் பாருங்கள்: தி ஹிந்து கட்டுரை