நரேந்திர மோடி ஜிந்தாபாத் என்று காங்கிரஸ் தொண்டர்கள்முழங்கிய உற்சாக முழக்கம் கொண்ட வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு பெண்மணி அடிவயிற்றில் இருந்து பெருங்குரல் எடுத்து, காங்கிரஸ் என்று கத்த, சுற்றியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஜிந்தாபாத் என்று முழங்குகின்றனர். திடீரென அந்தப் பெண், நரேந்திர மோடி என்று சொன்னதும், அதற்கும் ஜிந்தாபாத் என்று முழங்குகின்றனர்.
உடனே அந்தப் பெண், கையைக் காட்டி… இன்னாப்பா கோஷத்தை உள்வாங்குறீங்க.. நீங்கள்லாம் என்று உதட்டைப் பிதுக்குகிறார்.
ஏற்கெனவே, ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னுக்குப் பின் முரணாகவும், புரிந்துணர்வற்ற தன்மையிலும் பேசி வருகிறார். அது குறித்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த காங்கிரஸ் தொண்டர்களிடம், ரபேல் விமானம் குறித்து கேட்கப் பட்டது. அதற்கு தொண்டர்கள் பலரும் தவறான தகவலையே தந்தனர். குறிப்பாக, ரபேல் ஒப்பந்தம் ஜெர்மனியுடனானது, அமெரிக்காவுடனானது என்றெல்லாம் பதில் அளித்தனர்.
இந்நிலையில், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், எந்த வார்த்தையையும் உள்வாங்காமல், இயந்திரத்தனமாக ஜிந்தாபாத் கோஷம் போடும் காங்கிரஸாரின் இந்த வீடியோ சிரிப்பை வரவழைத்துள்ளது பலருக்கும்!
அந்த வைரல் வீடியோ….