வைரமுத்து – சின்மயி பாலியல் அழைப்பு கருத்து யுத்த விவகாரத்தில் திமுக.,வின் அதிகாரபூர்வ ஆஸ்தான அவைக்கவிஞர் என்பதாலும், கலைஞர் கருணாநிதிக்காக கால்பிடித்த கவிஞர் என்பதாலும் திமுக.,வின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தீப்பொறிக் குஞ்சுகள் இப்போது கவிஞருக்காக வரிந்து கட்டி இறங்கியிருக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துச் சுதந்திரம் வெளிப்பட்டு வருகிறது.
இந்தக் கருத்துச் சுதந்திரத்தை அடியொற்றி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஒரு கருத்தை தனது பேஸ்புக்கில் பதிவு செய்தார். அந்தக் கருத்து பலத்த எதிர்ப்பைக் கிளப்பியதை அடுத்து, சுப.வீ., யோசித்து அந்தப் பதிவை நீக்கிவிட்டுள்ளார். அதைவிட, அந்தக் கருத்து ஓரினச் சேர்க்கையை வெளிப்படுத்துவது போல் அமைந்ததால், அவருக்கே அது புரிந்து விட்டதால், அந்தப் பதிவை நீக்கியதாகக் கிசுகிசுக்கிறார்கள்!
இதனிடையே, சுப.வீ.,யின் நெருங்கிய தோழர், ஒரே இயக்கத்தில் ஒன்றாய் அமர்ந்து பெண்ணியம் பேசித் திரிந்த தோழர் தியாகு குறித்து, அவரது மனைவி கவிஞர் தாமரை தனது வாழ்க்கைப் போராட்டங்களை வெளிப்படுத்திய காலத்தில் கூறியிருக்கிறார். அந்தச் செய்திகள் இணைய உலகை அப்போதும் ஆக்கிரமித்திருந்தது. (காண்க … கவிஞர் தாமரை தாமரை கவிஞர் தாமரை )
பாதிக்கப் பட்ட பெண்ணாக தன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திய கவிஞர் தாமரை, இந்த நேரத்தில் வாய் திறந்து சுப.வீ.,க்கு பதில் சொல்வது போல் ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது! அது இதுதான்….
இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் ?????..
தியாகுவும் சுபவீயும் தமிழ்தமிழர் இயக்கத்தில் பொ.செயலாளர், தலைவர் என ஒன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார்தான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இரண்டு பேருக்கும்…
இயக்கத்தின் பெயரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாட்டியங்களுக்கெல்லாம் நானே வாழும்சாட்சி…