உத்தரப் பிரதேச முதல்வர் யோகிஆதித்யநாத் அலகாபாத் நகரின் பெயரை பிரக்யாராஜ் என்று மாற்றியுள்ளார். மொகலாய அரசன் அக்பர், 1575 ஆம் ஆண்டில் இந்த நகரின் பெயரை பிரயாகை என்று இருந்ததை அலகாபாத் என்று மாற்றினார். இப்போது அலகாபாத் மறுபடியும் “பிரயாக்ராஜ்” ஆக மாறியுள்ளது.
இதை அடுத்து, நமது வேதங்கள் மற்றும் பல புராணங்களிலும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு பெரிய புனித நகரங்களின் பெயர்களும் பழையபடி மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து ஒரு பெரிய பட்டியலையே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பட்டியலைப் படித்து கொஞ்சம் சிரிப்பு வந்தால், அதற்கு மார்கண்டேய கட்ஜுவே பொறுப்பு! காரணம் குசும்பு கேலி கிண்டல் இவற்றை எல்லாம் சேர்த்தே கருத்தை விதைப்பவர் மார்க்கண்டேய கட்ஜு. அவற்றில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் இருக்கும். ஆனால் குசும்பு கூடவே இருக்கும்!
மார்க்கண்டேய கட்ஜு பரிந்துரைக்கும் பெயர் மாற்ற நகரங்களின் பட்டியல் இதுதான்…
1. அஹமதாபாத் – அஷ்டவக்ராநகர்
2. அஹ்மத் நகர் – ஆங்கீரஸ்புர்
3. அடிலாபாத் – அவந்திபுர்
4. ஔரங்காபாத் – அலக்னிரஞ்சன்புர்
5. ஆக்ரா – அகஸ்த்யநகர்
6. அலிகார் – அருண்ஜெட்லேநகர்
7. பெஹ்ராம்புர் – பங்கேபிஹரிநகர்
8. போபால் – ராஜபோஜ்பால்
9. புலண்ட்ஷாஹ்ர்- பஜ்ரங்க்பலிபுர்
10. ஃபரிதாபாத் – யோகிஆதித்யநாத் நகர்
11. பிரோஸாபாத் – அமித்ஷா நகர்
12. ஃபரூகாபாத் – நரேந்திரமோடிநகர்
13. பதேபூர் – ராம் மாதவபுர்
14. காஜியாபுர் – கனேஷ்புர்
15. காஜியாபாத் – கடோட்கஜ் நகர்
16. ஹாஜிபுர்- ஹஸ்தினாபுர்
17. ஹமீர்புர் – ஹரேகிருஷ்ணாநகர்
18. ஹைதராபாத்- ஹிரன்யகசிபுவத்நகர்
19. ஹாசரிபாக் – ஹண்டியா பாப நகர்
20. ஜமல்புர் – ஜெய்மினிபுர்
21. கரீம்நகர் – க்ரிஷ்ணகனையாநகர்
22. மஹ்பூப்நகர் – மீராபாய் நகர்
23. மிர்ஸாபுர் – முரளிமனோகர் நகர்
24. மொரதாபாத் – மன்கிபாத் நகர்
25. முஸாபர்புர் – மண்தட்பதரிதர்சன்கோநகர்
26. முஸாபர்நகர் – மாதவாசார்யநகர்
27. நிஜாமாபாத் – நாரதமுனி நகர்
28. ஓஸ்மனாபாத் – ஓம் மணிபத்மே ஹம் நகர்
29. பதான்கோட் – பரீக்ஷித்புர்
30. செகந்தராபாத் – சதிசாவித்ரிநகர்
இப்படி மார்கண்டேய கட்ஜு எந்த எந்த நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என 30 நகரங்களின் பட்டியலைக் கொடுத்துள்ளார். ஆனால், அவற்றின் புராதன பெயர்களை மீட்டெடுத்து அவற்றுக்குச் சூட்ட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்பது மட்டும் உண்மை. கேலி கிண்டலுக்காக, ஆட்சியாளர்களின் பெயர்களைச் சூட்டச் சொல்லி இவர் பரிந்துரைத்தாலும், இந்த 30 நகரங்களின் பட்டியலை பரிசீலிக்க வேண்டியது அரசுகளின் கடமைதான்!
I recommend to the Central and State Governments to change the names of all Indian cities named after Babur ki Aulads.
Hari Om pic.twitter.com/wMOM9wmmRK
— Markandey Katju (@mkatju) October 16, 2018