நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க! இது மக்களின் கேள்வி..! நேற்று ஓர் ஆசிரியை கொலையில் 5 மணி நேரத்தில் நவீன தொழில்நுட்பமான செல்போன் டவர், கால்ஸ், சிசிடி கேமரா பதிவை கொண்டு கொலையாளி கைது செய்யபட்டான்.
2 மணி நேரத்தில் காணாமல் போன குழந்தையை காவல்துறை அதிகாரி ரோந்து பணியின் போது கண்காணித்து கண்டுபிடித்து கொடுத்துள்ளார்.
சந்தேகத்திடமான நபரை பிடிக்கும் போது ஆபத்தானவன் என புரிந்து அவனை தந்திரமாக பிடித்தபோது பயங்கரமான திருடன் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் 59 நிமிடங்களில் ஒரு கோடி வரை கடன் பெற திட்டம் அறிவித்துள்ளார். புரோஸஸ் தாமதமாகக்கூடாது என்பதுதான் இதில் விசேஷம்..
ஆனால், கொலைக்குற்றவாளியை 5 மணி நேரத்தில் பிடித்தபோதும், அவனுக்கு தண்டனை இன்னும் ஐந்தாண்டுகளாளிவாது வழங்கப்படுமா? 1991 கொலை குற்றவாளிக்கே, (85 வயதில்) கடந்த வாரம் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.. ஜட்ஜ் சார்!
ப.சி. முதல் நக்ஸல் வரை உடனடியாக ஜாமீன், ரத்து, விசாரணைக்குத் தடை, தள்ளுபடி செய்ய உடனடியாக உத்திரவுகளை தர முன் வரும் நீதி மன்றம்.. வழக்கை தடுப்பது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவை முன்னேற்றுகிறது..
சமாதிக்கும், சட்டசபை விவகாரத்திற்கும் நள்ளிரவில் கூடும் நீதிமன்றம், ஜல்லிக்கட்டிற்கும், தீபாவளிக்கும், ஐயப்பன் வழிபாடு விவகாரத்திற்கும் உங்கள் அவசரத்திற்கு விசாரிக்க முடியாது என பல கோடி மக்களின் மனங்களை காயப்படுத்தி, சில அரசியல்வாதிகளின் மனங்களைக் குளிர வைக்கும் இரட்டை நிலைப்பாட்டை எப்போ கைவிடப் போறீங்க.. மை லார்ட்!
போலி வழக்குரைஞர்களை கண்டுபிடிக்கவே நீதிமன்றத்தால் முடியல.. ஆதார் கார்டை கேட்காதே.. என கூச்சல் போடும்போதே.. சந்தேகம் குற்றவாளிகள் மீது வரவில்லை.. குற்றவாளிகளை தப்பிக்க வைக்க காட்டும் விசுவாசத்தின் மீதுதான் வருகிறது!
என்னமோ போங்க.. மக்கள் இப்போலாம்.. நீதி மன்றத்தின் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் நடக்கும் லஞ்சம், லாவண்யம், அரசியல் பாசம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, மத விசுவாசம்.. இதற்கிடையில் தங்களுக்கும் நீதியை தேடுவதற்கு பயப்படுகிறார்கள்..
நீதி பாதியாகி.. மீதி நீதிக்கு எதிராக இருப்பது…. ஜனநாயகத்தின் நாலாவது தூண் சீழ் பிடித்திருப்பதையே காட்டுகிறது..
சின்னகவுண்டர் படத்தில் வரும் சீன் போல, ஜவ்வு மிட்டாய் போல, வழக்கை இழுக்கும் நடைமுறையை எப்போ மாற்றபோறீங்க..? எப்போ திருந்துவீங்க?!
நாடு முன்னேறிவிட்டது! நீங்கள் எப்ப திருந்துவீங்க?
- பசுத்தாய் கணேசன்