தேவராட்டம் அடிப்படையில் ஒரு போர்ப் பயிற்சி. சிலம்பாட்டம் எனும் தற்காப்புக் கலையின் அடிப்படையான steps களில் ஆழமான பயிற்சி பெறும் எளிமையான முறை தேவராட்டம். ஆடு – புலி ஆட்டம், பொய்க்கால்க் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கரகாட்டம் போன்றவையும் தற்காப்புப் பயிற்சிகளே. இவற்றைப் பயில்பவர் போர்க்குடிகளைச் சேர்ந்த ஜாதியினராக இருப்பதைக் காணலாம்.
ஆங்கிலேயர் தற்காப்புப் பயிற்சிகளைத் தடை செய்தபோது, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கண்முன்னரே தற்காப்புக் கலைகளைத் தொடரத் தமிழ் இந்துக்கள் செய்த புத்திசாலித்தன வேலை, நடன வடிவில் தற்காப்புக்கலை பயில்வது!
தேவராட்டத்தில் வரும் ஒவ்வொரு stepம் சிலம்பாட்டத்தின் அடிப்படை பாடங்களே. ஆடு புலி ஆட்டம் என்பது ஷேடோ பாக்ஸிங்க்தான் ! தாக்குதல் தப்பித்தலுக்கான ஸ்டெப்கள்தான் ஆடு புலி ஆட்டம்.
எந்த நிலையிலும் பேலன்ஸ் தவறவிடாமல் இருக்கத் தரப்படும் பயிற்சிதான் கரகாட்டம். புதுமையான முறையில் தற்காப்புக் கலையைக் கற்றுத் தரும் Kravmaga Sreeram ஜி போன்றோர் தேவராட்டம், ஆடு புலி ஆட்டம் போன்றவற்றையும் தங்கள் பயிற்சிகளில் பயன்படுத்தலாம்.
நடனத்துடன் உடற்பயிற்சி என்பதைப் பெண்கள் அதிகம் விரும்பும் இக்காலத்தில் நடனத்துடன் தற்காப்புக்கலை தீயாய் பரவும் !
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹிந்து அமைப்புகள் இந்தக் கலைகளைத் தங்கள் நாட்டில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம். பரதநாட்டியம் போல ஒரு நடனம் எனக்காட்டுவதால் பிரச்சினை எழாது. இந்திய ஆண்களை ஒன்றுகூட்டும் ஒரு யுக்தியாகவும் இது இருக்கும்.
தேவராடà¯à®Ÿà®¤à¯à®¤à¯ˆà®ªà¯ பறà¯à®±à®¿ கலà¯à®•ியின௠பொனà¯à®©à®¿à®¯à®¿à®©à¯ செலà¯à®µà®©à®¿à®²à¯ ஒர௠மà¯à®´à¯ அதà¯à®¤à®¿à®¯à®¾à®¯à®®à¯‡ உளà¯à®³à®¤à¯.