Home அடடே... அப்படியா? நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?

ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல் உள்ளே கொண்டு வந்ததில் இருந்தே இந்த தொடரின் இயக்குனர் ஓர் கிருப்டோ கிருஸ்தவர் என்ற சந்தேகம் எழுந்தது.

இன்று அது உண்மை ஆகி உள்ளது. கடந்த சனிக்கிழமை பகுதியில், ஓர் தீய சக்தி, அன்னை ஸ்ரீ பாலா வடிவம் எடுத்து ஓர் சிறுமியை துன்புறுத்துவது போல் காண்பித்தனர்.

அன்னை ஸ்ரீ பாலா வை பற்றி பாடாத சித்தர்களே இல்லை. கோரக்கர் சித்தர் இயற்றிய வாலை கும்மி அவள் புகழ் பாடும். அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலையில் ‘வாலை குமரி வருவாய் வருவாய் ‘ என அன்போடு அழைக்கிறார்.

கன்யாகுமரி பகவதி ஸ்ரீ பாலாவே ஆவார். அப்பேர்ப்பட்ட நம் தமிழ் தாயை ஓர் தீய சக்தி போல் காண்பித்தது உள்நோக்கம் கொண்டது. அத்துடன் இன்றைய பகுதியில் அந்த சிறுமியின் ஆவி அம்மா, கர்த்தரிடம் (ஜிசஸ் கிருஸ்ட்) ப்ரார்த்தனை செய்வது போலவும், உடனே அந்த சிறுமி, அடைபட்ட புற்றில் சிலுவை வடிவம் தோன்றி, சிறுமியை காப்பாற்றுவதாகவும் காட்சி வைத்துள்ளனர்.

இதுதான் மதமாற்றிகளின் முதல் வஞ்சகம். வாழையில் ஊசி நுழைப்பது போல் நமது நம்பிக்கை , பழக்க வழக்கங்களில் குழப்பம் விளைவிப்பது, நம்பிக்கை இழக்க வைப்பது, பின் ஜிசஸ் தான் காப்பர் என பதிய வைப்பது.

கொசுறு தகவல்!: இந்த நந்தினி நெடுந்தோடரில் காலச்சக்கரம் என்று ஒன்று காட்டப்படுகிறது. அது அம்பிகையின் ஸ்ரீ சக்கரம் போல் உள்ளது. சமீபத்தில் வெளியான ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.O படத்தில் பக்ஷி ராஜனின் எதிர்மறை சக்தியை ஓர் கருவி மூலம் ஓர் பெட்டியில் சேகரிப்பார். அந்த பெட்டியில் வாலை குமரியின் எந்திரம் பதித்து இருக்கும்.

நந்தினி நெடுந்தொடரில் காட்டப்படும் காலச்சக்கரம் மற்றும் அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (ஸ்ரீ பாலா எந்திரம் – சிவப்பு கல் பதித்த பதக்கம்)

  • மகாதேவ்

1 COMMENT

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version