
சபரிமலையில் இன்று காலை இரண்டு பெண்கள் சன்னிதானத்தில் வந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இத்தனை பக்தர்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்த நிலையில் எப்படி இந்த இரு பெண்களால் சபரிமலைக்கு வர முடிந்தது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் சபரிமலைக்கு இரண்டு பெண்களை அழைத்து வர கம்யூனிச கேரள அரசு எப்படிப்பட்ட தந்திரங்களை கையாண்டு என்பது குறித்து பல தகவல்கள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
இன்று அதிகாலை 1 மணி அளவில் பெண்கள் இருவரும் போலீசாரின் பாதுகாப்புடன் சாதாரண உடையில் ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்டார்கள்! போலீசார் வாகனங்களில் அல்ல ஆம்புலன்ஸ் மூலம்!
ஆம்புலன்ஸ் மூலம் இவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப் பட்டா; பக்தர்கள் யாரும் தடுக்க மாட்டார்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள் கம்யூனிஸ்ட்கள்! எனவே மருத்துவ அவசரம் என்ற பெயரில் ஆம்புலன்ஸ் மூலம் இரு பெண்களையும் பம்பையில் இருந்து அழைத்து வந்தார்கள்
ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்ட போதும் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதித்தனர். அப்போது இந்த இரு பெண்களும் தாங்கள் பெண்கள் அல்ல என்றும் திருநங்கைகள் என்றும் கூறியுள்ளனர்.
தாங்கள் திருநங்கைகள் என்று கூறியதால் சபரிமலையில் இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள்! இருவரும் திருநங்கையர் என்று கூறியதால் அந்தப் பகுதிக்கு தந்திரியும் அனுமதித்துள்ளார்
ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட அந்த இரு பெண்களும் இரண்டு முறை நிறுத்தப்பட்டார்கள். ஒன்று பம்பையில் அடுத்து மரக்கூட்டத்தில்! இரண்டு முறையும் அந்த பெண்கள் இருவரும் தாங்கள் திருநங்கையர் என்றே கூறியுள்ளனர். எனவே அங்கிருந்து கடப்பதற்கு இருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சன்னிதானத்தை அடைவதற்கு முன்பு போலீசார் சாதாரண உடையில் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அளித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஆலயத்தின் விஐபிக்கள் செல்லும் வழியில் பக்கவாட்டு படிகளில் ஏறி சன்னிதானத்தின் முன் உள்ள கொடிமரம் அருகில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இருவருமே சாதாரண நுழைவாயில் வழியாக வந்தால் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்படுவர் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்! இவை எல்லாமே அதிகாலை ஒரு மணி முதல் 3 மணி வரை நடந்துள்ளது! அந்த நேரத்தில் கோவில் நடை மூடப்பட்டிருந்தது! எனவே அவர்கள் இந்த இடத்திற்கு வருவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை
பெரும்பாலான பக்தர்கள் உறக்கத்தில் இருந்தார்கள்! எனவே அங்கே பக்தர்கள் போராட்டக்காரர்கள் அதிகம் இல்லை! சபரிமலைக்கு முன்னுள்ள கதவை பாதுகாத்துக் கொண்டிருந்த பக்தர்களும் அந்த நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்!
சாதாரண உடையில் வந்த போலீஸார் அந்த இரு பெண்களையும் சன்னிதானத்தின் அருகில் அழைத்து வந்தார்கள்! ஆனால் அந்த இடத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே அவர்கள் அங்கே நின்றிருந்தார்கள். அந்த நேரத்தில் இரண்டு பெண்களும் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் தாங்கள் இருப்பதற்கான அத்தாட்சியாக போட்டோக்களை எடுத்துள்ளனர்
அங்கிருந்து அவர்கள் இருவரும் வெளியேறும் முன்னால் குர்கா என்ற வாகனம் ஆலயத்தின் பின்னால் காத்திருப்பதாக போலீசார் கூறியுள்ளனர்! இது போலீசாரின் அவசர வாகனம்!
போலீசாரின் குர்கா என்ற பெயரில் இருந்த வாகனத்தில் அவர்கள் இருவரையும் அங்கிருந்து வேகவேகமாக அழைத்துச் சென்றுள்ளனர் போலீஸார். அவ்வாறு விடிவதற்கு முன்பே சபரிமலையிலிருந்து வெகுதூரம் அவர்கள் கடந்துவிட்டனர்
இப்படி இருவரும் சபரிமலை சன்னிதானத்திற்கு வருவதற்காக கையாண்ட வழிமுறைகள் மிக மிக கீழ்த்தரமானதாகவும் நரித்தந்திரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது
ஆம்புலன்ஸ் வாகனத்தை தேர்ந்தெடுத்தார்கள். இருவரும் தாங்கள் திருநங்கைகள் என்று கூறிக் கொண்டார்கள்! மேலும் அதிகாலை ஒரு மணி முதல் 3 மணி வரை அதாவது நள்ளிரவு நேரத்தில் தேர்ந்தெடுத்தார்கள்! அப்போது திருடர்களைப் போன்று யாரும் அறியாத வண்ணம் அவர்கள் அங்கே நுழைந்தார்கள்
போலீசாரும் தங்களது வழக்கமான சீருடையில் இல்லாமல் சாதாரண மனிதர்களைப் போன்று சாதாரண உடை உடுத்தி இருந்தார்கள்
இத்தகைய வழிமுறைகள் மூலம், சபரிமலையின் புனிதத்துவத்தைக் கெடுப்பதற்கான வழிவகைகளை அவர்கள் மேற்கொண்டார்கள். இவர்கள் எத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது நம்பிக்கையை சிதைப்பார்கள் என்பதை பக்தர்கள் உணர்ந்திருக்கவில்லை!