தெலுங்கில்: ஜயந்தி வேங்கட சுப்பாராவு
(Source: ருஷிபீடம் மாத இதழ் டிசம்பர் 2018)
தமிழில்: ராஜி ரகுநாதன்.
2019 ல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்தத் தேர்தல்கள் இந்தியாவின் அதிலும் ஹிந்துக்களின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானவை. ஓட்டுப் போடும் முன் ஹிந்துக்கள் யோசிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களைத்தான் இங்கே நாம் விவாதிக்கிறோம்…
ஹிந்துக்கள் ஏன் ஓட்டு போட வேண்டும்?
நவீன ஜனநாயக நாடுகளில் ஓட்டு என்பது சாமானிய மனிதனின் பலமான ஆயுதம். இந்த உண்மையை உணராமல் பல நாடுகளிலும் உள்ள இந்துக்கள் சுறுசுறுப்பான நடை முறை அரசியலில் பங்கு பெறாமல் செயலற்றவர்களாக இருக்கிறார்கள். அதன் காரணமாக அரசியல் கட்சிகள் ஹிந்துக்களின் பிரச்சனைகளையும் அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ள முடிவதில்லை.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஏறக்குறைய எண்ணிக்கையில் சமமாகவே இருந்தாலும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் முஸ்லீம் ஓட்டுக்காக அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகிறார்கள். ஹிந்துக்களின் ஓட்டுகளைப் பெற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஏனென்றால் முஸ்லீம்கள் மைனாரிட்டியாக இருக்கும் நாடுகளில் நடைமுறை அரசியலில் (Politically active) மிகவும் சுறுசுறுப்பாக பங்கு பெறுகிறார்கள்.
அதனால் ஹிந்து மதத்திற்கு எதிரான கட்சிகளும் தலைவர்களும் எளிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஹிந்துக்களின் நலன்களும் உரிமைகளும் கிடைக்காமல் செய்கிறார்கள்.
இந்தியாவில் வாழும் ஹிந்துக்களில் அதிலும் நடுத்தர வகுப்பு மக்களில் கல்வி கற்றவர்கள் வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு ‘எல்லா கட்சித் தலைவர்களும் திருடர்களே! எந்தக் கட்சி வந்தாலும் ஒன்றுதான்’ என்ற எண்ணத்தில் ஓட்டு போடுவதில்லை.
அதற்கு மாறாக ஹிந்து அல்லாத பிற வர்க்கங்கள் தம் கட்சி வேட்பாளர்களை தமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவர்களுக்கே ஓட்டு போடுகிறார்கள். இந்துக்கள் இப்போதாவது விழித்தெழுந்து இந்த விஷயங்களை உணர வேண்டும்.
அடுத்த கேள்வி …
ஹிந்துக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?
தம் மதத்தையும் தம் நலன்களையும் காப்பாற்றுபவர்களுக்கே ஓட்டு போட வேண்டுமென்பது தெளிவு. ஆனால் ஹிந்துக்கள் அவ்வாறு போடுவதில்லை. ஏனென்றால் கடந்த 70 ஆண்டு காலமாக அரசியல் கட்சிகள் அவர்களை குலங்கள் இனங்கள் என்று பல பிரிவுகளாகத் துண்டு போட்டு விட்டன. அதன் பலனாக ஹிந்து மதத்திற்கெதிரான கட்சிகள் வெற்றி பெற்று ஹிந்து மதத்தையும் பாரத கலாசாரத்தையும் களங்கப்படுத்தி விட்டன.
80 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள இந்துக்களை அலட்சியம் செய்துவிட்டு பத்து பதினைந்து சதவிகிதம் உள்ள மைனாரிடி ஓட்டுகளுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அலைகின்றன. ஹிந்துக்களுக்காக பேசக் கூடிய அரசியல் கட்சிகள் ஒன்றிரண்டே உள்ளன. மீதி உள்ள செக்யூலர் கட்சிகளனைத்தும் ஹிந்துக்களுக்கெதிரான கட்சிகளே.
நேருவின் காலத்திலிருந்தே செக்யூலரிசம் என்றால் ஹிந்து மதத்தையும் இந்துக்களையும் ஒடுக்க வேண்டும் என்பதே பொருளாக மாறியுள்ளது.
2014 ல் முதன் முதலாக மத்தியில் மோடிஜி தலைமையில் ஒரு அனுகூலமான கட்சி முழு மெஜாரிட்டியை சாதித்தது. 70 ஆண்டுகளாக அநீதி, ஊழல் போன்றவற்றால் அழுகிப் போயிருந்த சிஸ்டத்தை தூய்மைப்படுத்த அவர் உறுதி கொண்டார். பயங்கரமான அலட்சியத்திற்கு ஆளான நாட்டின் பாதுகாப்புத் துறையை ஒழுங்குபடுத்தி வருகிறார்.
பொருளாதாரத் துறையில் செய்த செயலாக்கத்தால் நம் நாடு சர்வ தேச அளவில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. வெளி நாடுகளில் நம் மதிப்பு அதிகரித்துள்ளது.
ஹிந்துக்களில் சிலர் மோடி அரசு ஹிந்துக்களுக்கு எதுவும் நன்மை செய்யவில்லை என்றும் அதனால் அந்தக் கட்சிக்கு ஓட்டு போடக் கூடாது என்றும் நினைக்கிறார்கள். ஆனால் மோடி அரசு எப்படிப்பட்ட சூழலில் வேலை செய்து வருகிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக உள்ளன. அரசாங்க அதிகாரிகளும் (Bureaucuracy), நீதித் துறையும் (Judiciary) சோனியாகாந்தி நியமித்தவை. அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யாததோடு ஒவ்வொரு முயற்சியிலும் தடையை உண்டாக்குகிறார்கள். அனைத்து ஊடகங்களும் அரசுக்கும் இந்துக்களுக்கும் எதிராக இருபத்திநான்கு மணி நேரமும் விஷத்தைப் பரப்புகின்றன.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மோடி பத்ம வியூகத்தில் சிக்கிய அபிமன்யு போல துணிவோடு போராடி வருகிறார். நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தி வருகிறார். மேலும் எழுபது ஆண்டுகளாக ஊழலில் மூழ்கிய அரசாங்க அமைப்பையும் மக்களின் எண்ண ஓட்டத்தையும் நான்கு ஆண்டுகளில் முற்றிலும் மாற்றுவது என்பது நடக்கக் கூடிய செயலா?
இந்நாட்டு மக்கள் அநீதியாளர்களுக்கும் ஹிந்துக்களுக்கு எதிரான கட்சிகளுக்கும் எழுபது ஆண்டு காலம் இடம் கொடுத்தார்கள்.
அப்படியிருக்கையில் நாட்டுக்காக ஓய்வு ஒழிவின்றி பாடுபடும் களங்கமற்ற தேச பக்தனுக்கு ஓர் ஆண்டு கூட ஆகும் முன்பே ‘மோடி எதுவும் செய்யவில்லை’ என்று புலம்புவது எந்த வகையில் சரி என்று அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்.
சரியாக இது போன்ற விபரீதமான, தற்கொலைக்கு நிகரான எண்ண ஓட்டத்தால் தான் 2004 ல் எத்தனையோ நேர்மையாக நடந்து வந்த வாஜ்பேயி அரசினைத் தோற்கடித்து ஐ.மு.கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள் மக்கள்.
ஒரு ரோபோட்டை பிரதம மந்திரியாகச் செய்து மத்தியிலும் ஆந்திரப் பிரதேஷிலும் செய்த அக்கிரமங்களை ஹிந்துக்கள் ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த பத்தாண்டுகளில் அநீதியும் ஊழலும் நாட்டை ஆண்டன.
ஆதர்ஷ் சொசைட்டி, 2ஜி, கோல் ஸ்கேம், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள், அகஸ்டா ஹெலிகாப்டர்கள் இப்படி அனைத்திலும் ஊழல்களே.
நாட்டின் பாதுகாப்பு முழுமையான அலட்சியத்திற்கு ஆளானது. பாகிஸ்தான், இந்திய வீரர்களின் தலைகளை வெட்டி சித்திரவதை செய்த போது கையைக் கட்டிக் கொண்டு சும்மாயிருந்தர்கள்.
காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் செக்யூலர் கட்சிகள், கிறிஸ்தவ மிஷினரிகள் எல்லாம் என்று கூடி ஒரு திட்டத்தோடு ஹிந்து மதத்தையும் பாராத கலாசாரத்தையும் இந்துக்களையும் கூண்டோடு அழிக்க முயற்சித்தார்கள்.
சில உதாரணங்களைப் பார்ப்போம்.
UPA கூட்டணி மதக் கலவரத் தடைச் சட்டத்தை (Communal Voilence Bill) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. அதன்படி நாட்டில் யார் எங்கு மதக் கலகங்களை உருவாக்கினாலும் அதற்கு ஹிந்துக்களே பொறுப்பாளிகள். மைனாரிட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் யாராயினும் ஒரு ஹிந்துவின் மீது புகார் கொடுத்தால் அந்த ஹிந்துவை உடனே கைது செய்து விடலாம். குற்றம் சாட்டப்பட்டவரே, தான் குற்றமற்றவன் என்று நிரூபித்துக் கொள்ள வேண்டும்.
தற்போதுள்ள பொதுச் சட்டத்தின்படி புகார் கொடுத்தவன் குற்றத்தை நிரூபிக்க வேண்டும்
சிறுபான்மை வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஹிந்துக்களுக்கு எதிராக தவறான சாட்சியளித்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதன் பலனாக ஹிந்துக்கள் தம் சொந்த நாட்டிலேயே எப்போதும் பயந்து கொண்டு அஞ்சி வாழ வேண்டிய நிலை. இத்தனை கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டத்தை அலாவுதீன் கில்ஜி, அவுரங்கசீப் போன்ற துஷ்டர்கள் கூட கொண்டு வரவில்லை. பின்னர் அந்த மசோதாவை ரத்து செய்தார்கள்.
ஹிந்துக்களுக்கு மிகவும் புனிதமான ராம சேதுவை உடைத்து தூர்த்து விடுவதற்கு முயற்சித்த போது பாஜக., தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். அந்த வழக்கில் ஐமுகூட்டணி., மத்திய அரசு ‘ராமன் ஒரு கட்டுக்கதை. ராமாயணம் ஒரு கட்டுக்கதை’ என்று வாக்குமூலம் தாக்கல் செய்தது.
குரானையோ பைபிளையோ ஏசு கிறிஸ்துவையோ கட்டுக்கதை என்று கூறி விடக் கூடிய துணிச்சல் எந்தக் கட்சிக்காவது உண்டா?
ஐமுகூ., ஆட்சியில் மும்பை சம்பவம் போன்ற பல தீவிரவாத தாக்குதல்கள் நடந்தேறின. அவற்றைத் தடுக்க முயலா விட்டாலும் அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ‘ஹிந்து டெரரிசம்’ என்ற புதிய சொல்லை உருவாக்கினார். அதாவது சுமார் நூறு கோடி ஹிந்துக்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பது நிகழ்ந்தது.
இனி, ஆந்திரப் பிரதேசட்தில் காங்கிரஸ் அரசு செய்த கொடுமைகள் விவரிக்க இயலாதவை. வர்ணனைக்கு அப்பாற்பட்டவை.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக ஒரு கிறிஸ்தவரை நியமித்தார்கள்.
திருப்பதியில் உள்ள பத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயத்தின் துணைவேந்தராக பணியிலிருந்த ஒரு கிறிஸ்தவ பெண்மணி கல்லூரி மாணவிகளை பலவந்தமாக மதமாற்றம் செய்தார். அதனைப் பொறுக்க இயலாத சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
ஏழுமலைவாசனின் ஏழு மலைகளில் ஐந்தை கபளீகரம் செய்து விட்டு அவனை இரண்டு மலைவாசனாகச் செய்வதற்கு ஒரு கொடூரமான உத்தரவு இடப்பட்டது.
அந்த பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு கோடி பேருக்கும் மேலாக ஹிந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்கள்.
தமிழ்நாடு முதல்வரும் ஆந்திரப் பிரதேச முதல்வரும் கூட்டு சேர்ந்து ஹிந்துக்கள் தெய்வமாகப் போற்றும் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தீபாவளி அன்று அவர் பூஜை செய்து கொண்டிருக்கையில் பூட்ஸு காலோடு பூஜையறையில் நுழைந்து கைது செய்தார்கள். இதை விட மனிதத் தன்மையற்ற செயல் வேறொன்று இருக்க முடியாது.
வரப் போகும் சட்டமன்ற, நாடாளூமன்றத் தேர்தல்களில் ஓட்டுப் போடும் முன் ஹிந்துக்கள் 2004இல் வாஜ்பேயி அரசினை தோல்வியடையச் செய்த போது நிகழ்ந்த பரிணாமங்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
2019ல் மோடியை எவ்வாறாயினும் வீழ்த்த வேண்டுமென்று சோனியா காந்தி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
காங்கிரஸ், இதர ‘மதசார்பற்ற’ கட்சிகள், இடதுசாரிகள், ஊடகங்கள், கிறிஸ்துவ மிஷனரிகள், அயல் நாட்டு சக்திகள், இந்தியாவை துண்டு துண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகள் (Break India Forces) – அனைத்தும் இப்போது ஒன்று சேர்ந்துள்ளன.
2019ல் இந்தியாவின் மீது தேச பக்தியற்ற அரசு ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை மக்கள் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.
மத’சார்பற்ற’ கட்சிகள் உடனடியாக மத வன்முறைச் சட்டம் – Communal Voilence Bill ஐ சட்டமாக்குவார்கள். அப்போது ஹிந்துக்கள் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழ வேண்டி வரும். மத மாற்றங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது. ஹிந்து கோவில்கள் முழுமையாக சூறையாடப்பட்டு நாசமாகிவிடும்.
“இந்திய நாட்டின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கே முதலுரிமை” (Muslims have the first claim on National Assets) என்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அளித்த வாக்குறுதி உண்மையாகி விடும்.
பாரத நாட்டு கலாசாரம் முற்றிலும் உருமாற்றம் செய்யப்படும்.
தற்போது சபரிமலை ஐயப்ப சுவாமி ஆலயத்தையும் அதன் சம்பிரதாயங்களையும் அழிப்பதற்கு நடக்கும் முயற்சிகளை கவனித்துப் பாருங்கள்.
கேரள முதல்வர் ஓணம் பண்டிகை கொண்டாடக் கூடாதென்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் யக்யங்கள் நடத்தக் கூடாது. சூரியனுக்கு அர்க்கியம் விடக் கூடாது. சம்ஸ்கிருதம் கற்கக் கூடாது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையும் ஸ்ரீராமநவமியும் நடத்தக்கூடாது.
கர்நாடகாவில் கோபூஜை செய்யக் கூடாது.
ஆந்திரப் பிரதேஷ் குண்டூரில் பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ள ‘கோட்டப்ப கொண்ட’ என்ற மலை மேல் சிலுவை ஊன்றப்பட்டுள்ளது.
எஸ்ஸி, எஸ்டிக்கள் மதம் மாறினாலும் அவர்களுக்கான ரிசர்வேஷன்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டுமென்று ஆந்திர பிரதேச முதல்வர் கூறிக் கொண்டிருக்கிறார்.
இவை நாடு முழுவதும் செயக்யூலர் கட்சிகள் செய்து வரும் செய்கைகளுக்கு சில உதாரணங்கள் மட்டுமே. அது மட்டுமின்றி தற்போதையை மத்திய அரசு முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்தங்கள், முன்னேற்றத் திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு நாடு மீண்டும் அதோகதிக்கு ஆளாகி விடும்.
இத்தகைய எதிர்கால விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்கள் அனைவரும் தம் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து தவறாமல் ஓட்டு போட்டு தற்போதைய மத்திய அரசு வெற்றி பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும்.
நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்தும் வழியைத் தொடருவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஹிந்துக்கள் ஓட்டு வங்கியாக ஒன்று சேர வேண்டும்,. அப்போது அனைத்து மதசார்பற்ற என்று கூறிக் கொள்ளும் கட்சிகளும் காலைப் பிடித்து பேரம் பேச வருவார்கள்.
இந்த தர்ம யுத்தத்தில் ஹிந்துக்களின் அறிவை நல்லவிதமாக செயல்படத் தூண்டி, அவர்களுக்கு நல்ல புத்தியை அருளும்படி இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!
இறைவா.. என் நாட்டைக் காப்பாற்று!