
திருவாரூர் இடைத்தேர்தல் நடக்குமா? இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரியவரும்.
தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. எனவே புயல் நிவாரண பணிகள் தேக்கம் அடைந்து விடும் என்பதே முக்கிய வாதம். அதுபோக புயலால் பாதிக்கப் பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை இழந்துவிட்டார்கள்.
தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு நீதிமன்றங்கள் தலையிடுவது கிடையாது. எனக்கு தெரிந்து 2016 உள்ளாட்சி தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அது தனி நீதிபதி அமர்வு. இது இரட்டை நீதிபதிகள் அமர்வு.
ஒருவேளை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டால் திருவாரூர் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது. திருவாரூர் கிளை தேர்தல் வழக்கை விசாரிக்கும் சத்தியநாராயணா அமர்வு அப்படி செய்யுமா? சந்தேகம் தான்.
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் திருவாரூருக்கு மட்டும் என்ன அவசரம் என்ற கேள்வி இன்று எழும்பும். ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இதற்கான விடை ஏற்கனவே கூறப்பட்டுவிட்டது.
18 தொகுதிகளுக்கு இன்னமும் மேல்முறையீடு கால அவகாசம் இருக்கிறது. திமுக வழக்கால் எழுந்த திருப்பரங்குன்றம் தொகுதி நீதிமன்ற தீர்ப்பு இன்னமும் வெளி வரவில்லை.
எனவே திருவாரூரில் மட்டும் தான் இடைத் தேர்தல் நடத்த முடியும்
அதே நேரத்தில் கஜா நிவாரணத்தில் சுணக்கம் ஏற்படக் கூடாது என்கிற ஆணையை நீதிமன்றம் பிறப்பிக்கலாம்.எதிர்க்கட்சிகளுக்கு அது பின்னடைவு.
நேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் போய் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.
நேற்று சத்யநாராயணா அமர்வு முன்பு அவசர வழக்காக வந்தபோது இதை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று இரண்டு நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள். பிறகு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று இன்று விசாரணை நடக்கிறது.
எனவே திருவாரூர் இடைத்தேர்தலை பொறுத்தவரைஇன்றைய விசாரணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
திருவாரூர் இடைத்தேர்தல் என்ற அக்னிப்பரிட்சைக்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.
- தராசு ‘ஷ்யாம்’