spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?‘ராகுல்’ சின்ன பசங்ககிட்ட பல்பு வாங்கிய இன்னொரு ‘தரமான’ சம்பவம்!

‘ராகுல்’ சின்ன பசங்ககிட்ட பல்பு வாங்கிய இன்னொரு ‘தரமான’ சம்பவம்!

- Advertisement -

துபாயில் பல்பு வாங்கினார் பப்பு என்று ஒரு தரப்பும், இல்லை அது உண்மைக்கு மாறான செய்தி என்று மற்றொரு தரப்பும் வாதப் பிரதிவாதங்களைச் செய்து கொண்டு இருக்க , நமது தேடலில் பள்ளிச் சிறுவர்களிடம் பல்பு வாங்கிய பப்பு பற்றிய ருசிகர சம்பவம் கிடைத்தது … அது என்னவென்றால்….

நிகழ்ச்சியைப் படம் பிடிக்க வந்த இந்த செய்தியாளர், மாணவர்களிடம், இங்கே நடந்த ராகுலின் நேர்காணலில் 
காந்தியின் பதில்களை நீங்கள் புரிந்து கொண்டீர்களா எனக் கேட்டபோது,
அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் ‘இல்லை’ என்று சொன்னார்கள்.
When this reporter asked the students whether they understood the replies of Gandhi, almost all of them said ‘No’.

மாணவர்கள் சொன்ன பதில் :
கேள்வியை கேட்டோம் , பதிலும் வந்தது… ஆனால் ஒன்றுமே புரியவில்லை, ராகுலின் பதில்களால் நாங்கள் ஏமாற்றமடைந்தோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுதான் பப்பு வாங்கிய சிறப்பு பல்பு…!

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் மைதூர் என்னும் கிராமத்தில் பப்பு மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி ..(இவரு நாடாளுமன்றத்தில் பேசவே பிட்டு எடுத்து போகிறவர்)

இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்களிடம் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.  பள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திருவிழாவுக்கு 5 நாட்களாக ஆங்கிலத்தில் பயிற்சி எடுத்து, வருங்கால பிரதமர் என்னும் ராகுல் காந்தியிடம் சில ‘கடுமையான’ கேள்விகள் கேட்க தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்த வாய்ப்பு மாணவர்களுக்கு ஒரு வாழ்கையில் ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இருக்கும்.

அவற்றில் சில கேள்விகள் , பப்புவின் பதில்கள் 6ஆம் வகுப்பு மாணவன் விநாயக் கிரியா கேள்வி:

நீங்கள் இந்திய பிரதம மந்திரி, இருந்தால் கிராமப்புற பகுதிகளில் மேம்படுத்த என்ன மாதரியான நடவடிக்கை எடுத்து இருப்பீர்கள் ?
ராகுல் காந்தி பதில்: அதற்கான காலம் வரும்போது , அதைப்பற்றி சிந்திப்போம் .

“Let us think about it, when time comes.”

அடுத்து சித்ரா ,என்னும் மாணவியின் கேள்வி:

“நீங்கள் இந்தியாவில் கல்வி முறையை மேம்படுத்த என்ன செய்வீர்கள் ” என்ற கடினாமான கேள்விக்கு

ராகுல் காந்தி பதில் :குழந்தைகள் ,மற்றும் பெற்றோர்கள் கனவு முக்கியமானது, அரசு அவற்றை நிறைவேற்ற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.”இந்த கனவுகளை நிறைவேற்ற, கல்வி மிகவும் முக்கியமானது. அதற்கான தகவல்களை மாணவர்களுக்கு நான் தருவேன் ..

அடுத்தாததாக சுமா என்னும் மாணவியின் கேள்வி : கிராமப்புற மின்சார தேவைக்கு , இப்போது சந்திக்கும் நெருக்கடிகளுக்கு உங்களின் தொலைநோக்கு , புதுமையான திட்டங்கள் எப்படி இருக்கும் ?

ராகுல் பதில் : மக்களே நாட்டின் உண்மையான வளங்கள் ..
“தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த, நெருக்கடிக்கு தீர்வு கண்டு கொள்ள வேண்டும். என்று அவர் கூறினார்.

ஐயோ ஸாமி (விசுவை மிஞ்சிய ராகுல் ) இவர்தான் அடுத்த பிரதமராம் ..என்ன கொடுமை இது .!

  • பாலாஜி வெங்கட்ராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe