Homeஅடடே... அப்படியா?துப்புரவுப் பணியாளருக்கு மோடி ஏன் பாதபூஜை செய்தார் தெரியுமா?

துப்புரவுப் பணியாளருக்கு மோடி ஏன் பாதபூஜை செய்தார் தெரியுமா?

Modi Pathapooja sweepers - Dhinasari Tamil

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்த மோடி, கங்கையில் ஸ்நானம் செய்து, கும்பமேளா இடத்தை மிகவும் தூய்மையாகப் பராமரித்த இரு பெண்கள் உள்ளிட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்தார். இது பலராலும் பாராட்டப் பட்டது.

ஹிந்துக்கள் எல்லோரும் சகோதரர்கள், ஹிந்து எவரும் தாழ்ந்தவர் ஆகார்! சரி சமானம் எனது லட்சியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்தில்  வளர்ந்தவர் மோடி. பொதுவாக குருவாக இருப்பவர்களுக்கு பாதங்களைக் கழுவி பாதபூஜை செய்தல் மரபு. பண்டைய பாரதத்தில் விருந்தினருக்கு பாத பூஜை செய்து வரவேற்று உபசரித்தல் மரபு. அந்த மரபின் அடிப்படையில், துப்புரவுப் பணியாளரையும் சமூகத்தின் உயர் பிரிவினராகப் போற்றி, அவர்களின் செயல்களுக்கு உயர்ந்த நோக்கம் கற்பித்து இந்த பாத பூஜையை செய்தார் மோடி.

இருப்பினும், அரசியல் ரீதியாக தாக்குதல் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர், இது தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஸ்டண்ட் என்று கூறி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதே நேரம், மோடி ஏன் துப்புரவுப் பணியாளருக்கு பாத பூஜை செய்தார் என்பதற்கு, ஜோதிடர்கள் தங்கள் போக்கில் சில கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு வைரலான கருத்து, ஜோதிட ரீதியாக அலசி ஆராய்ந்து அறிவித்த கருத்து.. இது..!

*** மோடியின் நட்சத்திரம் அனுஷம் ஆகும். இதன் அதிபதி சனியாகும். அவருக்கு ஏழரை சனியின் கடைசி பகுதியான பாத சனி நடக்கிறது. சனியின் பிரதிநிதிகளாக அறியப்படுபவர் துப்புரவு தொழில் செய்பவர்கள் ஆகும்.

கால புருஷ தத்துவத்தில் சனியின் வீடுகள் முறையே மகரம் மற்றும் கும்பம் ஆகும். இதில் கடின உழைப்பாளிகளை குறிக்கும் வீடு மகரம் ஆகும். மகரம் என்பது கர்ம வீடு ஆகும். அங்கே செவ்வாய் உச்சம் மற்றும் சனி ஆட்சி ஆகும். எனவே அந்த வீடு கடின உழைப்பாளிகளான துப்புரவு தொழிலார்களை குறிக்கிறது. அவர்களின் பாதம் என்பது 12 பாவம் ஆகும். ஆதாவது 10 பாவத்தின் 12ம் பாவம் என்பது 9 பாவம் ஆகும். ஒன்பதாம் பாவம் என்பது தர்ம மற்றும் தெய்வ அருளை குறிக்கும்.

மோடிஜி அவர்கள் தனது ஏழரை சனி முடியும் காலத்தில், தர்ம சிந்தனை பெருகவும், கர்ம பலன்கள் குறையவும் இந்த பாத பூஜை செய்கிறார். கர்ம பலனை விரையம் செய்ய தர்மம் உதவும். ஆதாவது மகரத்தில் விரைய பாவம் தனுசு ஆகும். தனுசு என்பது தெய்வ அருள் தரும் குருவின் மூல திரிகோண வீடு ஆகும்.

பாத சனி காலத்தில் மக்கள் சேவை செய்யும் ஊழியர்களின் பாதம் கழுவி பூஜை செய்தல், தெய்வ பலத்தை அதிகரிக்கும்.

சனாதன தர்மம் போதிக்கும் முக்கிய போதனை கர்மத்தை குறைக்க தர்மத்தை பிடி என்பதே. அதை சரியாக பின்பற்றுகிறார் மோடிஜி.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,120FansLike
376FollowersFollow
68FollowersFollow
74FollowersFollow
3,211FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...

Exit mobile version