Home அடடே... அப்படியா? யாரைக் கேட்கிறாய் ராகுல்? உன் கட்சிக்காரர்களைப் போல் உனக்கும் ’செலக்டிவ் அம்னீஷியா’வா?!

யாரைக் கேட்கிறாய் ராகுல்? உன் கட்சிக்காரர்களைப் போல் உனக்கும் ’செலக்டிவ் அம்னீஷியா’வா?!

rahulgandhi

யாரை கேட்கிறாய்? மறந்து விட்டதா ராகுல்? யாரை கேட்கிறாய் ராகுல்?

நேபாளத்தின் மன்னர் 1950 இல் நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து கொள்ள கேட்டு கடிதம் எழுதினார்.

அந்த காலகட்டத்தில் திபேத் தனி நாடாக இருந்தது. நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்திருந்தால் நேபாளத்திற்கும் சைனாவுக்கும் நடுவில் இருந்த Buffer state திபேத் காப்பற்ற பட்டிருக்கலாம்.

ஆனால் தனது அதீத “இந்தி சீனி பாயி பாயி” மோகத்தினால் நேபாள மன்னரின் கோரிக்கையை எவருடனும் கலந்தாலோசிக்காமல் முடியாதுஎன்ற தன்னிச்சை (autocratic) முடிவு எடுத்தது உன் முப்பாட்டன் நேரு.

இது மறந்து விட்டதா ராகுல்? யாரை கேட்கிறாய் ராகுல்?

1962 இல் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி இந்தியா அணு ஆயுத சோதனை ( Detonation of Nuclear device). செய்ய முன்வந்தார்.

அன்று அதை செய்திருந்தால் அன்றே ஆசியாவில் சைனா வுக்கும் முன்பே முதல் அணு ஆயுத நாடாக இந்தியா மாறி இருக்கும்.. இன்னும் சொல்லப்போனால் நாம் அணு ஆயுத நாடுகள் குழுவின் (Nuclear Supply Group – NSG)ஸ்தாபன மெம்பர் ஆகியிருப்போம். இதைத் தவிர சைனாவும் (1962) பாகிஸ்தானும் (1965) நம்மிடம் வாலாட்டி இருக்காது.

ஆனால் மற்றவர்களை துச்சமாக எண்ணி எதிர் கட்சிகளுடன் விவாதிக்காமல் தன்னிச்சையாக அமெரிக்காவின் உதவியை மறுத்தவர் உன் முப்பாட்டன் நேரு.
இதை மறந்து விட்டாயா ராகுல்?

யாரை கேட்கிறாய் ராகுல்?

07/07/1974.. தமிழ் நாட்டின் மானம் கப்பலேறிய நாள். அன்றுதான் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார். இந்த இமாலய தவறால் இன்று வரை தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப் படுகின்றனர்.

கச்சத்தீவு இராமநாதபுரம் அரசை சேர்ந்தது. இந்து மகா சமுத்தித்தில் மூலோபாயமானது ( strategic).

கச்சத்தீவை தமிழ்நாட்டை கேட்காமல், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் ஒரு ஒப்பந்தம் (இது நீதிமன்றத்தில் இன்றும் செல்லாது) மூலம் இலங்கைக்கு வழங்கியவர் உன் பாட்டி இந்திரா காந்தி.
மறந்து விட்டாயா ராகுல்?

அன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக இன்று மானங்கெட்டு நிர்வாணமாக காங்கிசுக்கு சொம்பு தூக்குகிறது!

யாரை கேட்கிறாய் ராகுல்?

ஜூன் 25, 1975 ஞாபகம் வருதா ராகுல்? ஆமாம்.. உன் பாட்டி இந்திரா தன் பிரதமர் பதவியை சட்ட விரோதமாக தக்க வைத்துக் கொள்ள அரசியல் சட்ட Article 352 இன் கீழ் உள்நாட்டு அவசரநிலை (internal emergency) அறிவித்த நாள்.

இன்று உன் பின்னால் நின்று கொண்டு ஊளையிடும் வாலறுந்த நரிகள் ( திமுக உட்பட்ட எதிர் கட்சிகள்) சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தினம்.

அன்று இந்திராவின் மந்திரி சபையில் நிதி ராஜ்ய மந்திரி பிரணாப் முகர்ஜி என்ன கூறியுள்ளார் தெரியுமா ராகுல்?

அவரது புத்கம் “The Dramatic Decade” அத்தியாயம் ” Midnight Drama” படி தம்பி ராகுல் பாட்டியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்.

படிக்க வேண்டாம், விடு, உனக்குதான் மண்டையில் ஏறாதே. நானே சொல்கிறேன்.

“அரசியல் சட்டத்தில் உள்நாட்டு எமர்ஜென்சி அறிவிக்க வழி உண்டு என்பது இந்திரா காந்திக்கும் ஜனாதிபதி ஃபக்ருதீன் அகமதுக்கும் தெரியாது. அதை அவர்களுக்கு கூறியவர் வங்காள காங்கிரஸ் முதலமைச்சர் சித்தார்த் சங்கர் ரே.”

“இந்திராவும் சித்தார்த் ரே வும் 20 நிமிடங்களில், ஆமாம் வெறும் 20 நிமிடங்களில் ஜனாதிபதியை அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட வைத்தார்கள்.”

இதற்கு மந்திரி சபை ஒப்புதல் எங்கே என்று கேட்ட ஜனாதிபதிக்கு இந்திரா கடிதத்தில் என்ன சொன்னார் தெரியுமா ராகுல்?

” அவசரநிலை முடிவு நான் தனி ஒருவராக எடுத்த முடிவு.
எனவே இதற்கு தேவையான மந்திரி சபை தீர்மானம் என்னிடம் இல்லை. மந்திரி சபையிடம் கேட்கவில்லை. நாளை காலை அவர்களிடம் சொல்வேன்” என்றார்.

உன் பாட்டி உடைத்தால் அது மண்குடம் இல்லையா ராகுல்?
இதை மறந்து விட்டாயா ராகுல்?

யாரை கேட்கிறாய் ராகுல்?

முப்பாட்டன், பாட்டி கதைக்கு பிறகு உன் அப்பன் ராஜீவ் காந்தி கதை சொல்கிறேன் கேள் ராகுல்.

இந்திய அமைதி காப்பு சேனையை (Indian Peace Keeping Force- IPKF) இலங்கைக்கு உன் அப்பா எப்படி அனுப்பினார் தெரியுமா?

எதிர் கட்சிகளை விடு.. அவங்களை கலந்து ஆலோசனை செய்வது உங்க பரம்பரைக்கே கிடையாதே.

உன் அப்பா தன் மந்திரி சபை, வெளிவிகார துறை மந்திரி, நரசிம்ம ராவ், வெளி விவகார மந்திராலய செக்ரட்டரி.. ம்ஹூம்.. யாரையைம் கேட்கவில்லை..

ஏன் என்று கேட்டதற்கு உன் அப்பா என்ன சொன்னார் தெரியுமா தம்பி ராகுல்?
” நான் ஏற்கனவே ஒரு டிவிஷன் படைகளை (23000 வீரர்கள்) இலங்கை செல்ல ஆணை(order) செய்து விட்டேன்”

இதெல்லாம் நான் சொல்லவில்லை தம்பி ராகுல். அப்போது உன் தகப்பன் மந்திரி சபையில வெளிவிவகார துறை ராஜ்ய மந்திரி, நட்வர் சிங் அவரோட புத்தகம் ” One Life is Not Enough ” இல் வண்டவாளம் ஏற்றியுள்ளார்.

உன் அப்பாவின் தவறான முடிவின் விலை தெரியுமா ராகுல்?

1200 இந்திய ராணுவ வீரர்களின் விலைமதிப்பற்ற உயிர்.

நேற்று மோதி ராணுவ தியாகிகள் மெமோரியல் (Martyrs Memorial) திறந்தது அரசியல் என்று வாய் கூசாமல் ஏசிய உனக்கு உன் அப்பா அந்த உயிர்தியாகம் செய்த 1200 IPKF வீரர்களுக்கு ஒரு மெமோரியல்கூட கட்டி அஞ்சலி செலுத்தவில்லை என்பதாவது தெரியுமா மேதாவி ராகுல் காந்தி?

இதைவிட கேவலம் 1989 ஆம் ஆண்டு IPKF இலங்கையிலிருந்து திருப்பியபோது தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சி. அந்த IPKF வீரர்களை வரவேற்க கருணாநிதி ஒரு அரசு அதிகாரியை கூட அனுப்பவில்லை. அனாதைகள், அகதிகள் போல் தனித்து நின்றனர் நம் ராணுவ வீரர்கள்

இப்படிப்பட்ட பாரம்பர்யம் (முப்பாட்டன், பாட்டி, அப்பன்) உள்ள குடும்பத்து குலக் கொழுந்து நீ மோதி எங்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கிறார் என்று சொல்லலாமா தம்பி ராகுல்?

இத்தனை நடந்திருக்கு மறந்து விட்டதா ராகுல்?

இவ்வளவு துர்நாற்றத்தை உன் வீட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு மோதியை குறை சொல்லக் கூடாது செல்லம். வீட்டு சரித்திரத்தை படிச்சிட்டு திருந்து தம்பி ராகுல்.

ராகுல்… ” உன்னை சொல்லி குற்றமில்லை, உன் தாயை சொல்லி குற்றமில்லை.. குடும்ப ஒழுக்கம் செய்துள்ள குற்றமடா.. ராகுல் குற்றமடா…”

– யாரோ ஒரு பாமரன்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version