அடடே... அப்படியா? முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்;   விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்.......!

முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்;   விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்…….!

முளைப்பாரி எனும் விதைநோ்த்தி்;   விஞ்ஞானத்தை தோற்கடிக்கும் மெஞ்ஞானம்.......!

-

- Advertisment -

சினிமா:

“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

கமல் முத்தம் கொடுப்பார் என்று எனக்கு தெரியாது: ரேகா!

முத்தக்காட்சியை படமாக்குவார்கள் என்று எனக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன் என்று ரேகா மேலும் கூறியுள்ளார்.

நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-Advertisement-

ஷஹீன்பாக் பயிற்றுவிக்கும் பாடம்!

இஸ்லாத்திற்கு எதிராக, இந்த ஜிஹாதிப் போக்கிற்கு எதிராக இந்தியாவின் ஹிந்துக்கள் ஒன்றுபடவில்லை என்றால், ஷஹீன்பாகும் அதன் ஜிஹாதிச் செயல்பாடுகளும், தாராளவாத ஹிந்துக்களை ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரால் முட்டாள்களாக்கி, ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வரும். ஹிந்துக்களே, விழித்தெழுங்கள்!! இனி உங்கள் உறக்கம் மீளா உறக்கத்துக்கே வழிவகுக்கும்.

டிரம்ப் வருகையும் டில்லி கலவரங்களும்!

ஒரு மாநில அரசு நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் இருந்தால் அது உலக அளவில் மட்டுமில்லை அண்டை மாநிலத்தில் கூட செய்தியாக வராது. ஆனால் உலகமே உற்று நோக்கும் மத்திய அரசு அப்படி நடந்து கொண்டால் சர்வதேச அளவில் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தில்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்வு! அஜித் தோவல் ஆலோசனை!

#DelhiRiots2020 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு செய்து, சட்டம் ஒழுங்கு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்ஜினியர் படிச்சுட்டு இவர் பண்ற தொழில் என்ன தெரியுமா?

தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கை நிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.

சிவராத்தியில் கீசரிகுட்டா ஸ்ரீராமலிங்கேஸ்வரர் சந்நிதியில் ஆளுநர் தமிழிசை!

ஆளுநர் தமிழிசை கீசரிகுட்டாவிற்கு சிவ தரிசனத்திற்கு வந்து சிவராத்திரியன்று இறை வழிபாடு செய்தார் .தம்பதி சமேதராக வந்திருந்தார். அர்ச்சகர்கள் அவர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்தனர்.

“வடிவேலு சார் ஸோ க்யூட்”: கம்பேர் பண்ணவே முடியாது! நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆச்சர்யம்!

‘என்னை விட வடிவேலு ரொம்ப கியூட்’ என்று மனம் நிறைய சொல்லி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வடிவேலு சார் சோ க்யூட் என்று பதிவிட்டு இருக்கிறார். பலரும் இந்தப் பதிவுக்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

வேலையில் அமர வேண்டுமா..? இந்தியன் ரயில்வே அறிவித்தது ‘புதிய கோர்ஸ்’!

இந்தியன் ரயில்வேயில் நல்ல வேலையில் நிலைபெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இந்தியன் ரயில்வே, மாணவர்களுக்காக புத்தம்புதிய கோர்ஸ் அறிவித்துள்ளது.

வீட்டு உரிமையாளரை தாக்கி… வாடகை கொடுக்காமல் டபாய்த்த… பியூஷ் மானுஷ் கைது!

சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் எடப்பாடி இடம் நேற்று மாலை அவர் புகார் வழங்கினார். இதையடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பியூஸ் மானுஷ் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தில்லி வன்முறைச் செய்திகளை வழங்கும்போது… கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!

தில்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது!

ஐஎஸ்ஐ., மேற்கொண்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் – தில்லி வன்முறை; இந்திய முஸ்லிம்களே பாகிஸ்தானின் ஆயுதங்கள்!

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக உளவு அமைப்புகளிடமிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. தில்லி வன்முறைக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகக் கூறப் படுகிறது.

டிரம்புக்கு… போச்சம்பள்ளி பட்டு சால்வையை பரிசளித்த ‘முதல்வர்’!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மெலானிமா டிரம்புக்கு மட்டுமின்றி அவர்களின் மகள் இவாங்காவுக்கும் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர் காணிக்கைகள் கொடுத்தார். டிரம்புக்கு போச்சம்பல்லி பட்டு சால்வையும் சார்மினார் மெமன்டோ வும் பரிசளித்தார்.

இஸ்லாமிய ‘கல்லெறி’ வன்முறை கும்பலின் தாக்குதலில்… புலனாய்வு பிரிவு காவலர் உயிரிழப்பு!

காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி அன்கித் சர்மா சந்தபாக் பகுதியில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிப்பு. ஏற்கெனவே ஒரு காவலர் இறந்த நிலையில் காவல் துறையை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கமல் முத்தம் கொடுப்பார் என்று எனக்கு தெரியாது: ரேகா!

முத்தக்காட்சியை படமாக்குவார்கள் என்று எனக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டேன் என்று ரேகா மேலும் கூறியுள்ளார்.

தில்லி அசோக் விகாரில் மசூதியை சூறையாடுவதாகக் காட்டும் வீடியோ போலியானது: போலீசார்!

புதுதில்லி: தில்லியின் அசோக் நகர் / அசோக் விஹாரில் ஒரு குழுவினர் ஒரு மசூதியை சூறையாடுவதைக் காட்டும் வீடியோ போலியானது என்று கூறியுள்ளனர் தில்லி போலீஸார்.
- Advertisement -
- Advertisement -

முளைப்பாரி என்னும் அரிய தொழில்நுட்பத்தை இப்போதுள்ள விவசாயிகள் துச்சமாக எண்ணியதன் விளைவுதான் இன்று பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை இழந்துவிட்டோம்.

மரபணுமாற்ற அல்லது மானிய விதை என்று வீரியமில்லா சொத்தை விதைகளை வாங்கி, விதை திணிப்பை ஏற்றுக் கொண்டதின் விளைவே விவசாயம் உச்சி முகர்வதாக இல்லை. வருடாவருடம் விவசாயிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் காரணம் முளைப்பாரி தொழில்நுட்பத்தை நாம் கைவிட்டதுதான். விவசாயிகள் பருவம் பார்த்து விவசாயம் செய்து அறுவடை செய்யும் நேரத்தில் முதலில் அடுத்த போகத்திற்கான தரமான விதைகளை தன்னுடைய நிலத்திலேயே தேர்வு செய்ய காலம்காலமாக கடைபிடித்த தொழில்நுட்பம் முளைப்பாரி.

விதைகளை தேர்வு செய்வதிலேயே பல நுட்பங்களை கடைப்பிடிப்பார்கள்.

நோய்தாக்குதல் இல்லாத தரமான பயிர்களில் இருந்து நன்றாக விளைந்த விதைகளை தேர்வு செய்வார்கள்.

அவ்வாறு தேர்வு செய்த நெல்,தானிய விதைகளை குதிர்களிலும்,கோட்டை கட்டியும்,சணல் அல்லது துணி சாக்குகளிலும் கொட்டி வைத்து பாதுகாப்பார்கள்.

அந்த விதைகளை பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு அமாவாசையன்றும் பனி மற்றும் வெயிலில் காய வைத்து, அவற்றுடன் வேம்பு, மஞ்சள், நொச்சி, வசம்பு மற்றும் பல மூலிகைகள் சேர்த்து பாதுகாப்பார்கள்.

அவ்வாறு பாதுகாத்த விதைகளை அடுத்தப் பருவத்தில் விதைப்பதற்கு முன் விதைகளின் முளைப்புத் திறனை சோதனை செய்த பிறகே விதைப்பது தமிழர்களின் பண்ணெடுங்கால வழக்கமாக இருந்திருக்கிறது.

அப்படி நம் முன்னோர்கள் குழுவாக சேர்ந்து கூட்டு முயற்சியாக செய்ததுதான் முளைப்பாரி திருவிழாவாகும்.

பெரும்பாலும் மாசி,பங்குனி,சித்திரை மாதங்களில் கோடை சாகுபடிக்கான விதைகளை முளைப்பாரி சோதனை செய்து கோடை சாகுபடி மேற்கொள்வார்கள்.

இன்னும் சில பகுதிகளில் விதைக்கும் காலத்திற்கு முன்னர் சோதிப்பார்கள். வளர்பிறை நாட்களில் விதைகளை பாவி, ஒன்பதாம் நாள் ஊர்வலம் எடுத்து சென்று காட்சிப்படுத்துவார்கள்.

பின்னர் 10 ம் நாள் ஓடும் தண்ணீரில் கரைப்பார்கள். அந்த தொழில்நுட்பம்தான் காலப்போக்கில் மக்களின் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக முளைப்பாரி திருவிழாவாகவும், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களின்போது பெண்கள் முளைப்பாரி சட்டிக்களை தூக்கி சுற்றும் நிகழ்வாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது.

கிராமங்களில் உள்ள நாட்டுப்புற பெண் தெய்வங்களுக்கு முளைப்பாரி இட்டு பொங்கல் வைத்து கொண்டாடப்படும்.

பெண்கள் வளமையின் குறியீடாக திகழ்வதால்,விதை முதல் ஜல்லிக்கட்டு காளை, முளைப்பாரி தேர்வு, பாதுகாப்பு வரை பெண்கள் வசம் தமிழர்களால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வளர்பிறை காலங்களில் காப்புக்கட்டி முளைப்பாரிக்கான வேலை தொடங்கப்படும்.

அதற்கு குறியீடாக வீட்டின் நிலைப்பகுதியில் வேப்ப இலை தோரணம் கட்டி ஊருக்கு, ‘இந்த வீட்டில் முளைப்பாரி போட்டுள்ளார்கள்’ என்று அறிவிப்பு செய்யபட்டிருக்கிறது.

முளைப்பாரி போடுவதற்கு மண்பானை,பனை,மூங்கில் கூடைகள் எடுத்து ஆறு அல்லது குளத்தில் வண்டல் மண் எடுத்து வந்து அதனுடன் மக்கிய எடுக்கிலையை சேர்த்து,முளைப்பாரி சட்டி தயார் செய்யப்படும். பின் பாதுகாத்த விதைகளை சாணப்பால் அல்லது பஞ்சகவ்யம் போன்றவற்றில் ஊற வைத்து, விதை நேர்த்தி செய்திருக்கிறார்கள்.

பின் அந்த விதையை சணல் சாக்கில் வைக்கோல் சேர்த்து இரவில் முளைக்கட்டப்படும்.

முளைக்கட்டிய பின் விதைகளை மண் கலவைகள் நிரம்பிய தொட்டியில் விதைப்பார்கள்.

அதிக சூரிய ஒளிப்படாத இடங்களில் வைக்கப்பட்டு காலை,மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பார்கள்.

முளைப்பாரி போட்ட வீடுளில் மாமிசம் சமைப்பதில்லை. அனைவரும் சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள். அந்நாட்களில் வெளிநபர் யாரையும் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை.

மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்கலில் முளைப்பாரியின் அருகில் அனுமதிக்கப்படுவதில்லை.

அந்த நேரங்களில் அவர்களின் உடம்பில் இருந்து அதிகப்படியான வெப்பம் மற்றும் தேவையில்லாத கழிவுகள் வெளியேறுவதால், அது பச்சிளம் குழந்தை போல் உள்ள முளைப்பாரியின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அனுமதிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில்தான் அது பெண்களை இழிவுபடுத்தும் தீட்டு என்று திசைமாறிவிட்டது.

முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள்.

இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள்.

அப்போது ஊரின் அனுபவ விவசாயிகள், யாருடைய விதையின் முளைப்பாரி வீரியமாக வளர்ந்துள்ளதோ, அவருடைய முளைப்பாரியை சுட்டிக்காட்டி அனைவருக்கும் சிறந்த விதையாக அடையாளம் காட்டுவார்கள்.

அந்த விதை அந்த வருடத்தின் ஊரின் செழிப்பை நிர்ணயிக்கும் குறீயீடாக இருக்கும்.

அப்படி செழிப்பான விதை முளைப்பாரியை செய்து காட்ட ஒவ்வொரு விவசாயியும் அடுத்தடுத்த வருடங்களில்

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர்.

இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர்.

அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள்.

பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர்.

இந்த சடங்கினால் கோடை காலங்களில் ஏற்படும் அம்மை போன்ற நோய்கள் தொற்றாமல் தடுக்கப்படும்.

பின்பு பத்தாம் நாளில் இந்த முளைப்பாரியை ஓடும் நீரில் கரைத்து, பயிர் போகும் இடமெல்லாம் செழிக்க பாட்டுடன் வழியனுப்பி வைத்து திருவிழாவை முடித்து வைப்பார்கள்.

இந்த முளைப்பாரி கரைப்பு நிகழ்வானது விவசாயிகளுக்கு துணை புரியும் நீர்நிலைகளின் அவசியத்தை நினைவில் நிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

இப்படி வழிப்பாடு,திருவிழாவில் மட்டுமட்டுமல்லாது முளைப்பாரி அவசியத்தை அனைவரும் அறிந்தே இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் உள்ளிட்ட முக்கிய சுப நிகழ்வுகளிலும் முளைப்பாரி வைபோகத்தை தவறாமல் இடம்பெற செய்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

கோவலன், கண்ணகி திருமணத்தின்போது தானிய முளைப்பாரி கொண்ட குடங்களை பெண்கள் ஏந்தி வந்தததை சிலப்பதிகாரம், ‘விரித்தபாலிகை முளைக்குட நிரையினர்’ என்று சுட்டுகிறது.

இப்படி,விதைநேர்த்தியின் முக்கிய அங்கமாக இருந்த முளைப்பாரி திருவிழாவையும் யாரும் இப்போது நடத்துவதில்லை.

திருமண சுபநிகழ்ச்சிகளிலும் யாரும் முளைப்பாரி சட்டிகளை ஏந்தி சுற்றுவதில்லை.

அதனால்தான்,நமது பாரம்பரிய விதைகளை நாம் இழந்து, இன்று ஹைபிரிட் விதைகளை முளைக்க வைத்து, அதை உண்டு ஹைஸ்பீடில் மேலே போகிறோம்.

நமது முன்னோர்கள் கண்டறிந்த அதிசய அட்சய விதைநேர்த்தி தொழில்நுட்பமான முளைப்பாரி நிகழ்வை மறுபடியும் செயல்படுத்து, பாரம்பரிய விதைகளை மீட்டெடுப்போம். புதையும் நமது விவசாயிகளின் வாழ்வை தெம்பூட்டுவோம் என உறுதிமொழி ஏற்போம்..

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
217FollowersFollow
776FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

கேரள சமையல்: பலாப்பழ பாயாசம்!

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்

கேரள சமையல்: பலாக்காய் பிரியாணி!

வேக வைத்த பலாக்காயை சேர்த்து நன்றாக வதக்கி பின் வறுத்த வெங்காயம் சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து

கேரள சமையல்: நேத்திரங்காய் தோல் கறி!

பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |