September 28, 2021, 12:29 pm
More

  ARTICLE - SECTIONS

  கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டரால் பரபரப்பு

  08-06-16 Karur Mp photo 01 08-06-16 Karur Mp Against Notice News Photo 05 08-06-16 Karur Mp Against Notice News Photo 04 08-06-16 Karur Mp Against Notice News Photo 03 08-06-16 Karur Mp Against Notice News Photo 02 08-06-16 Karur Mp Against Notice News Photo 01

  கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரைக்கு இன்று காலை அ.தி.மு.க சார்பில் ஒரு பெரிய ஷாக் கொடுப்பது போல், மீண்டும் அ.தி.மு.க கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்து அவருக்கு ஒரு பெரிய ஷாக் கொடுத்தது என்றால், கரூர் மக்கள் ஒரு பெரிய ஷாக் கொடுத்துள்ளனர். கரூர் தம்பித்துரையை காணவில்லை என்ற போஸ்டர் தான் அந்த பெரிய ஷாக்.

  தமிழகத்தில் குறிப்பாக கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் மு.தம்பித்துரை, இவர் கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய இரு மக்களவை தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களாக அதாவது அ.தி.மு.க மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை தூக்கிய பிறகு, தம்பித்துரையோ, புதிய டெக்னிக் திட்டத்தை கையாண்டார். எப்படி என்றால், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே திட்டத்திற்கு பதிலடி கொடுத்தாரோ ? இல்லையோ ? கரூர் மக்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டுமென்று கரூர் நகராட்சி பகுதி மக்களை நேரிடையாக சந்திக்கும் மக்களைத்தேடி என்ற திட்டத்தை வகுத்து பொதுமக்களின் குறைகளை அதுவும் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களை மட்டும் சந்தித்து கட்சியை வலுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் அ.தி.மு.க கரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை நியமித்ததோடு, அவரை கொண்டு கட்சியை பலப்படுத்த பல திட்டங்களை தீட்டியதோடு, அவர் பெயரை வைத்தே கரூருக்கு வர இருந்த அதுவும், முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விதி எண் 110 கீழ் கரூருக்கு புதிய அரசு மருத்துவகல்லூரி நியமித்ததை வேறு இடத்திற்கு அதாவது கால நேரம் நீடிக்க ? மற்றொரு இடத்திற்கு மாற்றினார். மேலும் பல பல வேலைகளை பார்த்து தன்னை கட்சியில் ஒரு முக்கிய பிரமுகராக கையாளும் விதத்தை தெரிந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பித்துரை,  ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நன்கு அதாவது வார்ந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை தேடி என்ற நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் புகழ் சேர திட்டமிட்டார். ஆனால் இத்தனை நாளாக எங்கே இருந்தீர்கள். தற்போது மட்டும் சட்டசபை தேர்தல் வருவதையடுத்து மட்டும் நீங்கள் வருகிறீர்கள் என்று ஆங்காங்கே முற்றுகையிட்டு அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் ஆங்காங்கே திட்டத்தை கைவிட்ட அவர் மேலும் பல முயற்சிகளில் கால் வைத்தார். அதற்குள் கரூர் மாவட்ட செயலாளராக டாக்டர் மு.தம்பித்துரையின் சிபாரிசில் போடப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கட்சி பதவியில் இருந்து விலக்கினார். ஆனால் இன்று (08-06-16) மீண்டும் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். ஆனால் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை மீண்டும் அ.தி.மு.க கட்சி அவருக்கே கொடுத்து ஒரு பெரிய ஷாக்கை ஏற்படுத்திய நிலையில், கரூர் மக்கள் அவரை காணவில்லை என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளனர். கரூர் வெங்கமேடு, வெண்ணமலை, பசுபதிபாளையம், சணப்பிரட்டி உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் தம்பித்துரையின் புகைப்படம் போட்டு,. காணாமல் போனவர் எங்கே என்று கேள்விக்குறி எழுப்பிய நிலையில்., கரூர் மக்களவை உறுப்பினரும், இந்திய மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பித்துரை அவர்களே ! நீங்கள் ஊர் பெயர் தெரியாதவர்களாக இருந்திருக்கலாம், அம்மாவாலும், கட்சியாலும், வாக்குகள் பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று இந்திய மக்களவை துணை சபாநாயகராகவும், இருந்து வருகிறீர்கள். தங்களுக்கு வாக்குகள் போட்ட நாங்கள், நீங்கள் சொல்லும் வேட்பாளருக்கு வாக்குகள் போடவில்லை. அ.தி.மு.க மற்றும் அம்மாவின் வேட்பாளர் என்பதால் தான் வாக்குகள் போட்டோம். எங்கே தற்போது தங்களது நடைபயணம் காணோம், என்றும், மக்களின் குறைகளை கேட்டு பயணம் காணோம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தங்களது செயல் உள்ளது. கரூர் நகருக்கு நீங்கள் வருகிறீர்கள், நீங்களே சென்று விடுகிறீர்கள், வாக்குகள் பெறுவதற்கு தானா ? உங்களது நடிப்பு, வன்மையாக கண்டிக்கிறோம். காலையில் எழுந்தவுடன் அரசு அதிகாரிகளையும் தூங்க விடாமல் மக்களின் குறைகளை கேட்டு நடித்தீர்களே தற்போது எங்கே சென்றது உங்களது நடிப்பு என்ற போஸ்டரும், மற்றொரு போஸ்டரில் தம்பித்துரையின் இரு புகைப்படங்களை அச்சிட்டு கருப்பு வெள்ளைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஒரு சில பத்திரிக்கை அலுவலகத்திற்கும் மர்மமான முறையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரு முறை அம்மா என்று கூறுவதால் எப்படியாக இருந்தாலும் அ.தி.மு.க வினர் தான் என்று தெரியவருகின்றது. மேலும் அரசு அதிகாரிகளை கூட்டிக் கொண்டு என்ற வார்த்தையில் அரசு துறையில் பணிபுரிந்தவரா ? இல்லை பணிபுரிந்து வருகிறவரா ? என்பது தான் தெரியவில்லை. கடைசியில் இவன் கரூர் பெருநகராட்சி பொதுமக்கள் கரூர் என்று  அச்சிட்டுள்ளதால் ஒருவேளை கரூர் பெரு நகராட்சிக்குட்பட்ட எழுத படிக்க தெரிந்த ஒருவரோ (ஆணோ, பெண்ணோ) இதை அச்சிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த திடீர் போஸ்டர் அ.தி.மு.க வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-