தமிழகத்தில் அரசின் செயல்பாடுகளால் கால்நடைகள் எண்ணிக்கை உயர்வு.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2012-ஆம் ஆண்டில் சென்னையில் சுமார் 12ஆயிரத்த 771 பசுக்கள், எருமைகள் இருந்துள்ளதாகவும், தற்போது உள்ள கணக்கீட்டின்படி அது 46ஆயிரமாக அதிகரித்துள்ளதாக கால்நடை வளா்ப்புத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம், மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்து 19 ஆயிரம் மாடுகள் இருந்து வந்தநிலையில் தற்போது 7லட்சத்து 98ஆயிரமாக அதிகரித்துள்தாகவும் கூறினார்.
அதேபோல் திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு 5லட்சத்து 33ஆயிரம் பசுக்கள் மற்றும் எருமைமாடுகளே இருந்துள்ளது.
ஆனால் தற்போது உள்ள கணக்கீட்டின்படி 6லட்சத்து 45ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும், அதிகாரி கூறினார்.
மேலும் இந்த மாவட்டங்களில் பால் பொருட்கள் மற்றும் இறைச்சியின் தேவைகள் அதிகரித்திருப்பதாலும் கால்நடைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்புக்கு ஏற்ப கால்நடைகளை வளா்ப்போர் அதிகரித்ததே அவற்றின் எண்ணிக்கை உயரக் காரணமாக உள்ளது.
இது தவிர தமிழக அரசு வழங்கி வரும் விலைஇல்லா ஆடு, மாடுகள் மூலமாகவும் தற்போது இந்த மூன்று மாவட்டங்களில் கால்நடை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.