பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கியதில் பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக கடுமையான இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.
இந்நிலையில், பீகாரில் இடி, மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் காயமடைந்து உள்ளனர் என பீகார் பேரிடர் மேலாண் துறை தெரிவித்து உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பீகார் அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படும். என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி 12 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வடைந்து உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.