ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் வெப்ப அனல் காற்றால் பெரிதும் தவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தின் மேற்கு மத்திய வடகிழக்கில் உள்ள நாடுகள் கடும் வெப்பத்தின் தாக்கத்தில் சிக்கி உள்ளது.
இதில் குறிப்பாக இங்கிலாந்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை உயரும் என்றும் பகல்நேர வெப்பநிலை 102.2 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த 2003ம் ஆண்டு பிரவர்சேம் நகரில் பதிவான 101.3 பாரன்ஹீட் மிக அதிகமான பகல்நேர வெப்பநிலை என்று இருந்த நிலையில் இப்போது அதையும் தாண்டி வெப்பம் உயர்வதால் இங்கிலாந்து மக்கள் கடும் வெப்ப தவிப்பிற்கு ஆளாகினர்.
இதை தொடர்ந்து கொளுத்தும் வெயிலின் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பிரிட்டன் மக்கள் கடலில் குதித்து உடலில் ஏற்படும் சூட்டை தணித்து குளிர்ச்சியாக்கிக் கொள்கின்றனர்.
இதை அடுத்து வெப்பம் தாங்காமல் லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இருவரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் வெப்பநிலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப அனல் காற்று வீசும் என்றும் பகல்நேர வெப்பநிலை 107.6 டிகிரியாக உயரும் என்றும் பிரான்ஸ் நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதை அடுத்து அனல் காற்றால் பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் மட்டும் 40 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.