― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தேசிய விருது : சிறந்த தமிழ்படம்- பாடம்! சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் !

தேசிய விருது : சிறந்த தமிழ்படம்- பாடம்! சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் !

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சிறந்த திரைப்படங்கள் என்று பல்வேறு பிரிவுகளுக்கு மத்திய அரசின் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அப்போது மக்களவை தேர்தல் நடந்ததால், தேசிய விருதுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி, பெங்காலி என்று பல்வேறு மொழிகளில் சிறந்த படங்கள், நடிகர், நடிகர்கள், இயக்குனர்கள் என்று தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. தேசிய தேர்வுக்குழு விருதுக்கான படைப்புகளை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படம் சிறந்த தெலுங்கு படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதே போன்று சிறந்த நடிகருக்கான விருது அந்தாதூன் படத்திற்காக ஆயுஷ்மான் குர்ராவுக்கும், உரி தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்திற்காக விக்கி கௌசலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.தேசிய விருதுப் பட்டியல்:

சிறந்த படம் – எல்லாரு (குஜராதி)
சிறந்த இயக்குநர் – ஆதித்யா தர் (உரி)
சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ் (மகாநடி)
சிறந்த நடிகர் – ஆயுஷ்மா குரானா (அந்தாதுன்), விக்கி கெளசல் (உரி)
சிறந்த அறிமுக இயக்குநர் – சுதாகர் ரெட்டி (நாள்)
நர்கீஸ் தத் விருது – ஒண்டல்லா இரடல்லா (கன்னடம்)
சிறந்த பொழுதுபோக்குப் படம் – பதாய் ஹோ
சமூக நலனுக்கான சிறந்த படம் – பேட்மேன் (ஹிந்தி)
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் – பானி (மராத்தி)
சிறந்த துணை நடிகர் – ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்)
சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி (பதாய் ஹோ)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிவி ரோஹித், சஹிப் சிங், தல்ஹா அர்ஷத் ரேஷி, ஸ்ரீனிவாஸ் போக்லே
சிறந்த பாடகர் – அர்ஜித் சிங் (பத்மாவத்)
சிறந்த பாடகி – பிந்து மாலினி (நதிசரமி)
சிறந்த வசனம் – தரிக் (வங்காளம்)
சிறந்த திரைக்கதை (தழுவல்) – அந்தாதுன்
சிறந்த அசல் திரைக்கதை – சி லா சோ
சிறந்த சவுண்ட் என்ஜினியர் – உரி
சிறந்த படத்தொகுப்பு – நதிசரமி (கன்னடம்)
சிறந்த கலை இயக்கம் – கம்மர சம்பவம் (மலையாளம்)
சிறந்த ஒப்பனை – மகாநடி (தெலுங்கு)
சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)
சிறந்த பாடல் – நதிசரமி (கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ஆவ் (தெலுங்கு), கேஜிஎஃப் (கன்னடம்)
சிறந்த நடனம் – க்ருதி மஹேஷ், ஜோதி டி தொம்மார் (பத்மாவதி பாடம் – கூமார்)
சிறந்த தமிழ்ப்படம் – பாரம்
சிறந்த தெலுங்குப் படம் – மகாநடி
சிறந்த ஹிந்திப் படம் – அந்தாதுன்
திரையுலகுக்கு ஏற்ற மாநிலம் – உத்தராகண்ட்
சிறப்பு விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், சந்திரசூர் ராய், ஜோஜோ ஜார்ஜ், சாவித்ரி

Keerthi Suresh @KeerthyOfficial
bags Best Actress award for #Mahanati#NationalFilmAwards2019 pic.twitter.com/aHTMzJGgKu

— Maneesh Narayanan (@maneeshnarayan) August 9, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version