அதனால் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் எந்நேரமும் பாதுகாப்பிலேயே விழிப்புடன் இருந்து வருகிறார்கள். அதேபோல, சமூக வலைதளங்களிலும் போலீசார் ஒரு கண் வைத்து வருகிறார்கள்.
நேற்று மாலை கிருஷ்ணகுமார் என்ற ஃபேஸ்புக்கில் ஒரு மிரட்டல் போட்டோ வெளியாகி இருந்தது, அதில், “குண்டு ஒன்னு வச்சிருக்கேன். ஆம்பூருக்கு வெடிகுண்டு ஒன்னு வச்சு இருக்கேன் என கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு, இணையத்திலும் வேகமாக பரவியது.
இறுதியில், இது ஒரு புரளி என்றும், பதிவிடப்பட்டிருந்த அந்த முகநூல் பக்கம் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. வேண்டுமென்றே பீதியை ஏற்படுத்த முயன்ற நபர் யார் என்று சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறது