Home அடடே... அப்படியா? ஆட்சியரே… ‘தில்’ இருந்தா… கட்சிப் பிரமுகரிடம் மல்லுக்கட்டுங்க.. பார்ப்போம்!

ஆட்சியரே… ‘தில்’ இருந்தா… கட்சிப் பிரமுகரிடம் மல்லுக்கட்டுங்க.. பார்ப்போம்!

காஞ்சி அத்தி வரதா் பாதுகாப்பு பணியிலிருந்த காவல் ஆய்வாளா், விஐபி வரிசையில் பொது மக்களை அனுமதித்த காரணத்திற்காக மாவட்ட ஆட்சியா் அவர்கள் பணியில் உள்ள அரசு அலுவலரான காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது மக்கள் மத்தியில் ஒருமையிலும் அநாகரிமான வார்த்தையாலும் திட்டி தீர்த்துள்ளாா். இது சட்டப்படி தவறில்லையா…?

சரி… அது என்ன காவல்துறை அதிகாரியை கலெக்டா் திட்டி கொண்டிருக்கும் வேளையில் மூஞ்சிக்கு முன்னாடி வீடியோ எடுத்து கொண்டிருக்கிறாா். அவர் யார் உங்க செட்டப்பா…? நான்கு வார்த்தை திட்டியவுடன் அந்த போனை பார்ப்பதும் மீண்டும் நான்கு வார்த்தை திட்டுவதும் கககக போ… (விளம்பரமாே)

கலெக்டா் அவர்கள் பகல் இரவு பாராமல் சோறு தண்ணி உண்ணாமல் பணி செய்வதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஔிபரப்புகிறது. (சத்திய சோதனை)

காஞ்சி அத்திவரதா் பாதுகாப்பு பணியை திறம்பட செயலாற்றி வரும் காவல்துறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த புகைச்சலே இச்சம்பவத்திற்கு காரணம் என அமெரிக்க நிபுணா் குழு கருத்து தெரிவித்துள்ளனா்.

உங்கள் பணியை கடைநிலை காவலரும் செய்ய முடியும்.. ஆனால் ஒரு கடைநிலை காவலர் செய்யும் பணியை ஒரு நாள் கூட உங்களால் செய்ய முடியாது.

டிப் டாப்பா சொக்கா போட்டுகிட்டு பஞ்சாயத்து பேசிட்டு இருக்கும் போது கூட்டத்திலிருந்து கல் வந்தால் சிதறி ஓடுபவா்கள் நாங்கள் அல்ல எதிர்த்து நின்று விரட்டி அடிப்பவா்கள்.

இந்த ஆளு மாவட்டத்துல எல்லாமே சரியா கடமை கட்டுப்பாடோட நடக்குதா?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நேர்மையாத்தான் வேலை செய்ராங்களா.?

இவருடைய மாவட்டத்தில் இவருடைய ஆட்சியின் கீழ் மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் வருமையின்றி வாழ்கிறார்களா..

அன்று ரவுடி வந்த போது ஊ…ஊருக்கு போய்ட்டாரா?

ஒரு கட்சிக்காரன பாத்து கேட்க துணிவு இருக்கா..?

பாவம் இரவும் பகலும் ஓய்வின்றி உழைக்கும் ஒரு அப்பாவி காவலர்தான் கெடச்சாரா?

ஒரு கட்சிப் பிரமுகரிடம் மோதி விளம்பரம் தேடச்சொல்லுங்க.
துணிவே துணை!

– காவலன் (சமூகத் தளங்களில் வைரலாகிவரும் புகார்)

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version