- Ads -
Home உரத்த சிந்தனை 200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !


நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.

இந்நிலையில், நான் ஏலியன்.! எனது உடலை சுமார் 200 ஆண்டுகள் இயக்க போகின்றேன். உடலில் பிணி இல்லாமல் என்னால் இயக்க முடியும். குறைந்த பட்சம் 160 ஆண்டுகளை கடந்து வாழ முடியும் என்று பேசியுள்ளார். அதில், பிரபஞ்சம், இயற்கை விதிகள், வை-பை டிரான்ஸ் மீட்டர் போன்றவைகளை குறித்து பேசினார்.

அவர் ஏலியனாக இருப்பதால், பல்வேறு அதீதி சக்திகள் இருக்கின்றன. இதை ஏலியன் வாழ்கையை சன்னியாசிகளுக்கும் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது.

தென்னிந்தியாவின் முக்கிய ஆசிரமங்களாக பெங்களூர், திருவண்ணாமலையும். மேலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு சில நேரங்களில் சமூக வலைதளங்களில் நீங்கள் பேச்சை கேட்டு மிரண்டு இருப்பீர்கள்.சுவாமி நித்தியானந்தா முன்பு ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களைத்தான் மக்களிடம் பேசி வருவார். இவரின் தேன் ஊறிய பேச்சுக்கு மயங்கிய ஏராளமானோர்களும் இவருக்கு சீடராக மாறி பல்வேறு சர்சைகளையும் எழுப்பியுள்ளனர்.

ALSO READ:  ‘தமிழ் வாழ்க’ எழுத்துகளுடன் மாலையிட்டு அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை!

தற்பொழுது, அறிவியல் வாதிகளையும் மிஞ்சம் வகையில் பேசி வருகின்றார். ஐன்ஸ்டீன் விதியும் தவறு: இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அறிவியல் விதிகளை தந்த ஐன்ஸ்டீன் விதியையும் தவறு என்று கூறி சுவாமி நித்தியானந்தா உலகையும் மிரட்டி எடுத்தார். அதாவது ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது எனக் கூறி சமூக வளைத்தில்  சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா விலங்கையும் பேச வைக்கும் தனி சாப்ட்வேர் உருவாக்கியுள்ளதாக கூறிய பெரிய அணு குண்டையே தூக்கி போட்டார். இந்த சம்பவம் உலகம் பூராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்டவைகள் சில ஆண்டுகளில் பேச வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பரிசோதனைகளும் அரங்கேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், கண்டிப்பாக விலங்குகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஏலியன் சுமார் 200 ஆண்டுகள் வாழப்போகின்றேன். ஏலியன்களின் வாழ்கை 1260 ஆண்டுகள் வாழு முடியும் என்று சுவாமி நித்தியானந்தா பேசி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னால் 200 ஆண்டுகளுக்கு நலமாக வாழ முடியும். பிளானெட் எர்த் கட்டுமானம், ஏலியன், வாழ்கை பாதுகாப்பு பிரபஞ்சம் குறித்தும் அவர் பேசி வீடியோ வெளியாகியுள்ளது.

ALSO READ:  சமஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: அக்ஷி பாத்ர நியாய:

இந்து மதத்தில் சைவத்தில் வேத ஆகமசாஸ்திரங்களில் அனைத்து விதமான அறிவியலும் நிறைய இருக்கின்றது. இதில் பல்வேறு விதமான அறிவியல் சார்ந்து இருக்கின்றன. சனாதன இந்து தர்மம் அறிவியலையும் கொண்டுள்ளது என்று சுவாமி நித்தியானந்த பேசியுள்ளார். குறைந்தது 160 ஆண்டு வாழ முடியும்: என்னால் 200 ஆண்டுகள் வாழ முடியும். குறைந்தது 160 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வாழ முடியும். இதுகுறித்த டேட்டாவையும் நான் வைத்துள்ளேன் சுவாமி நித்தியானந்தா பேசினார். மேலும், பிளானெட் எர்த் சையின்ஸ், சமாதியில் இருந்தபடி, இவரின் அதீதக சக்தியை பயன்படுத்தி தன்னால் இயங்க முடியும் என்று பேசியுள்ளார்.

நான் ஏலியன் , எனது உடல் டிஎன்ஏவிலும் இது காணப்படுகின்றது. பிரபஞ்சம் குறித்தும் நிதியானந்தா பேசினார். லட்சக்கணக்கான சன்னியாசிகளுக்கும் ஏலியன் வாழ்கையை அவர்களுக்கு அளிக்க முடியும். டிஎன்ஏ குறித்தும் அவர் விளக்கியுள்ளார்

இந்து கோயில்களில் காணப்படும் டவர்கள் (கோபுரம்) இவைகள் வை-பை போன்று செயல்பட்டு வயர்லெஸ் எலக்ட்ரிக் சிட்டியாகவும் செயல்பட்டுகின்றன. வை-பை, வயர்லெஸ் , சூப்பர் சையின், குண்டலினி சக்தி உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் பேசினார். இந்து கோயில்கள், பேட்டரி, மெர்க்குறி, என்லைட் பயோ எனர்ஜி, டிரான்ஸ் மீட்டர்களால செயல்பட்டு, குண்டலியோக சக்தியை சக்தியை உற்பத்தி செய்கின்றன என்று சுவாமி நித்தியானந்தா பேசினார்.

ALSO READ:  டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

சுவாமி நித்தியானந்தாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதை கலாய்க்கும் விதமாமாக ட்ரோல்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர்களை இதை கண்டு வருகின்றனர்.

சுவாமி நித்தியானந்தா உண்மையிலேயே ஏலியன் தான் என்று மற்றொரு யூடியூப் சேனலிலிலும் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version