
விரைவில் வெளியாகவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் 1 முதல் துவங்க உள்ளது.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைவரும் இத்தேர்வினை எழுத முடியும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகவும். மேலும் விபரம் அறிய 0462 2500103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
வாய்ப்புகளை மிஸ் பண்ணாதிங்க இளைஞர்களே! – என்று தகவல் கொடுத்துள்ளார் திருநெல்வேலி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ச.சரவணன்!