spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்விநாயகரின் வடிவமும்,வகைகளும்.,!

விநாயகரின் வடிவமும்,வகைகளும்.,!

- Advertisement -
vinayakar

லட்சுமி கணபதி

எட்டு கைகள் கிளி மாதுளம்பழம் கலசம் அங்குசம் பாசம் கற்பகக்கொடி கட்கம் வரதம் இவற்றை உடையவர் அமுதம் போன்ற வெண்மை நிறத்தை உடையவர் நீல நிறத் தாமரை பூ ஏந்திய சித்திபுத்தி எனும் இரு பெரும் தேவியருடன் காட்சி தருபவர்.

பாலகணபதி

நான்கு திருக்கரங்கள் யானை முகம் இளம் சூரியன் போன்ற நிறம் குழந்தை திருமேனி வாழை மா பலா கரும்பு இவற்றை நான்கு திருக்கரங்களில் தாங்கிய நிலையோடு துதிக்கையில் மோதகம் இருக்கும்.

தருண கணபதி

எட்டுத் திருக்கரங்கள் யானை முகம் கைகளில் பாசம் அங்குசம் மோதகம் விளாம்பழம் நாவற்பழம் ஒடிந்த ஒரு கொம்பு நெற்கதிர் கரும்பின் ஒரு துண்டு இவற்றோடு காணமுடியும் நல்ல சிவந்த திருமேனி உடையவர்.

ஸ்ரீ பக்தி கணபதி

தேங்காய் மாம்பழம் வாழைப்பழம் பாத்திரம் இவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தி யானை முகத்தோடு வெண்ணிறத்தில் காட்சிதருபவர்

வீர கணபதி

வேதாளம் வேல் அம்பு வில் சக்கரம்்அங்குசம் கத்தி கேடயம் சம்மட்டி கதை நாகம் பாசம் சூலம் குந்தாலி மழு கொடி ஆகிய 16ம் தாங்கிய 16 திருக்கரங்கள் சிவந்த திருஉருவம் மற்றும் சினந்த முகம் உடையவர்.

சக்தி கணபதி

பச்சைநிற தேவியை தழுவி கொண்டிருப்பவர் ஒருவருக்கு ஒருவர் இடுப்பில் கை கொடுத்து கழுவிக் கொண்டிருப்பது தனிப்பட்ட அமைந்ததாகும் பாசம் பூமாலை தாங்கிய தோடு அஞ்சேல் என கூறும் அபயக்கரம் உடையவர்

துவிஜ கணபதி

நான்கு திருக்கரங்களும் புத்தகம் அட்சமாலை தண்டம் கமண்டலம் கொண்டிருப்பவர் 4 யானை முகங்களுடன் சந்திரன் போன்ற வெண்மையானவர்.

சித்தி கணபதி

மாம்பழம் பூங்கொத்து கரும்புத் துண்டு எள்ளுருண்டை பழசு இவற்றை துதிக்கை உட்பட கைகளில் வைத்திருப்பவர் பொன் கலந்த பசுமை நிறம் உடையவர்

உத்திஷ்ட கணபதி

மாதுளம்பழம் வீணை அட்சமாலை யுடன் காட்சி தருபவர் நீலநிற திருமேனி கொண்ட நிலை

விக்ன கணபதி

சங்கு கரும்பு வில் புஷ்ப பாணம் கோடாரி பாசம் சக்கரம் கொம்பு மாலை பூங்கொத்து வானம் கைகளில் கொண்டவர் ஆபரணங்களை நிரம்பதரித்தவர் பொன்னிற மேனியர்.

ஷிப்ர கணபதி

தந்தம் கற்பகக்கொடி பாசம் ரத்தின கும்பம் அங்குசம் ஆகியன தாங்கியவர் செந்நிறமானவர் நிறமானவர்.

ஹேரம்ப கணபதி

அவரது கைகள் பாசம் தந்தம் அட்சமாலை சம்மட்டி மோதகம் பழம் இவைகளை தாங்கியவர் சிங்கவாகனம் யானைமுகம் கொண்டவர் பசுமை கலந்த கருமை நிற மேனி யாளர்

மகாகணபதி

மாதுளம்பழம் கதை கரும்பு வில் சக்கரம் தாமரை பாசம் நீலோற்பலம் நெற்கதிர் தந்தம் ரத்ன கவசம் இவை திருக்கரங்களில் அமைந்திருக்கும் செங்கதிர் போன்ற நிறம் கொண்டவர் எழுந்தருளியிருக்கும் தாமரை ஏந்திய தேவியார் சுவையோடு தழுவப் பெற்றவர்

விஜய கணபதி

அங்குசம் பாசம் தந்தம் மாம்பழம் கைகளில் தரித்தவர் பெருச்சாளி வாகனத்தில் ஏறி இருப்பவர் நிறத்தவர் நிருத்த கணபதி கூத்தாடும் நிலையில் இருப்பவர் மோதிரங்களை அணிந்து விரல்கள் கொண்டவர் கைகளில் பாசம் அங்குசம் கோடரி தந்தம் ஏந்தியவர் பொன் நிறத்தவர் கற்பக மரத்தடியில் இருப்பவர்

ஊர்த்துவ கணபதி

நீலமலர் நெற்கதிர் தாமரை கரும்பு வில் பாணம் தந்தம் கொண்டு காட்சிதருபவர் பச்சை நிற மேனி கொண்ட தேவை தழுவியவர் தேவியை தழுவியவர்

ஏகாட்சர கணபதி

செம்மலர் மாலையும் அணிந்து காட்சி தருபவர் குறுகிய கைகள் மாதுளம்பழம் பாசம் அங்குசம் வரதம் இவைகளை தாங்கிய கைகள் உடையவர் யானை மதத்தவர் பத்மாசனத்தில் இருக்க பெருச்சாளி வாகனம் கொண்டவர்

ராஜ கணபதி

ஆனைமுகன் செவ்வண்ண மேனி அங்கங்கள் தரித்தவர் தேன் நிறைந்த மண்டையை உடையவர்.

திரயாக்ஷரகணபதி

அசைகின்ற செவிகளில் தாமரை அணிந்தவர் நாற்கரங்கள் கொண்டவர் பாசம் அங்குசம் தந்தம் மாம்பழம் கரங்களில் கொண்டு துதிக்கை நுனியில் மோதகம் வைத்திருப்பவர் பொன்னிற மேனியர்

க்ஷிப்ரப்பிரசாதர்

பாசம் அங்குசம் கற்பகக்கொடி மாதுளம்பழம் தாமரை தருப்பை விக்ரம் இவற்றை தரித்தவர் ஆபரணங்கள் அணிந்தவர் பேழை வயிறுடையவர்.

ஹரித்ரா கணபதி

மஞ்சள் நிறம் உடையவர் நான்கு கரத்தில் பாசம் அங்குசம் தந்தம் மோதகம் வைத்திருப்பவர் ஏகதந்தர் பேழை வயிறோடு நீலமேனியர் கோடரி அட்சமாலை லட்டு தந்தம் இவற்றை வைத்திருப்பவர்

திருஷ்டி கணபதி

சிவந்த மேனியை பாசம் அங்குசம் தந்தம் மாம்பழம் இவை கரங்களில் இருக்க பெருசாளிவாகனர்

உத்தண்ட கணபதி

பத்லத் திருக்கரங்கள் கொண்டவர் அவற்றில் நீலம் தாமரை மாதுளம்பழம் கதை கரும்பு வில் ரத்தின கலசம் பாசம் நெற்கதிர் மாலை ஏந்தியவர் அழகிய தாமரை மலரை ஏந்திய பச்சை நிற தேவியால் தழுவப்பட்டவர்.

ருணமோசன கணபதி

பளிங்கு போன்ற மேனியர் சென்னிற பட்டாடை உடுத்தி அவர் அங்குசம் தந்தம் நாவற்பழம் கைகளில் கொண்டவர் துண்டி விநாயகர் அட்சமாலை கோடாரி ரத்தம் தந்தம் இவற்றை கரங்களில் ஏந்தியவர்

துவிமுக கணபதி

தந்தம் பாசம் அங்குசம் ரத்ன பாத்திரம் இவைகளை கைகள் இவைகளை கைகளில் ஏந்தியவர் பசுமை கலந்த நீலமேனி அடையும் ரத்ன கிரீடமும் அணிந்தவர் மும்முக பிள்ளையார் பொற்றாமரை ஆசனத்தில் நடுப்பொகுட்டில் மூன்று முகங்களோடு காட்சிதருபவர் இவர் வலது கையில் அங்குசம் வரதம் உடையவர் இடது கையில் பாசம் அமுத கலசம் இவற்றை உடையவர்

சிங்க கணபதி

வெண்ணிற மேனியர் சிங்கவாகனம் வீணை கற்பகக்கொடி சிங்கம் வரதம் இவற்றை வலது கரங்களில் தாமரை ரத்தின கலசம் பூங்கொத்து அபயம் இவைகளை இடது கைகளிலும் கொண்டவர்

யோக கணபதி

யோகநிலையில் சூரிய நிறத்தில் இந்திர நீலம் போன்ற ஆடையுடுத்தி பாசம் அட்சமாலை யோக தண்டம் கரும்பு இவற்றை ஏன் இருப்பவர்

துர்கா கணபதி

பசும்பொன் நிறத்தவர் எட்டு கைகள் பெரிய மேனி அங்குசம் வானம் அட்சமாலை தந்தம் இவை வலது கைகளிலும் பாசம் வெல்கொடி நாவற்பழம் இடது கைகளிலும் ஏந்தியவர் செந்நிற ஆடை அணிந்தவர்

சங்கடஹரர்

இளம் சூரியன் போன்ற நிறத்தோடு இடையில் அம்மையை உடையவர் அம்மை பசுமையாக நீலம் மலரை ஏந்தி இருப்பார் வலது கைகளில் அங்குசம் வரதம் உடையவர் இடது கையில் பாத்திரம் ஏந்தியவர் செந்தாமரைப் இடத்தில் இருப்பவர் நீலநிற ஆடை அணிந்தவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe