“இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்”-பெரியவா

“இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்”-பெரியவா

(பெரியவாளின் விருப்பமான ‘பேத்தி இலையை’ அலைந்து,திரிந்து சேகரித்த ஜெயலக்ஷ்மி அம்மாள்)

சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்
.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

.ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார் ஓர் அடியார். தும்பைப் பூவைப் பார்த்ததும் பெரியவாள் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

அங்கிருந்த பக்தர்களைப் பார்த்து,தும்பைப்பூ வைத்திருந்த இலையைக் காட்டி, “இது என்ன இலை தெரியுமா?”என்று கேட்டார்கள்.

பலரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள்.

“இதன் பேர்- பேத்தி இலை, இதில் தான் சந்நியாசிகள் பிக்ஷை செய்யணும். இது தங்கத்துக்கு சமானம். இந்த இலை கிடைக்கலேன்னா ,துவாதசியன்னிக்குப் பாரணையை இந்த இலையில் வைத்து பிக்ஷை செய்யணும். அவ்வளவு ஒசத்தி! அபூர்வம்! எனக்குக் கூட ஒரு பாட்டி தங்கத்தட்டு பண்ணிக் கொடுத்தாள். ஆனா, நான் அதில் ஒரு தடவைகூட பிக்ஷை பண்ணியதே இல்லை….. இப்போ அது ஸ்டோர் ரூம்லே இருக்கு.”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘பேத்தி’ இலைக்காக பைத்தியமாக அலையத் தொடங்கினேன்.கடைசியில் அதைக் கண்டுபிடித்து, மந்தார இலையை ஈர்க்குச்சியினால் தைத்து போஜனத்திற்காக உபயோகப்படுத்துவதைப் போல, சில இலைகளைத் தைத்துக்கொண்டுகாஞ்சிபுரம் போனேன்.

பெரியவாளிடம், தொண்டர் பாலு என்பவர், பேத்தி இலையைப் பற்றித் தெரிவித்து, “செங்கல்பட்டு ஜெயலக்ஷ்மி,வைஷ்ணவா கொண்டு  வந்திருக்கா” என்றார்.

உடனே பெரியவா, “இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்” என்றார்கள்.

எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை எவ்வாறு சொல்வேன்!

அன்று முதல் ஸ்ரீமடம் சிப்பந்திகள் என்னை ‘ஸ்ரீவைஷ்ணவா’ என்றே அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.

“வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும் எனக்கு.!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :