08/07/2020 4:47 AM
29 C
Chennai

செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

சற்றுமுன்...

இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .

கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.

கொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்! குவிந்த பாராட்டுகள்!

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.

சேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி!

காவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!

தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது
sengottai sundarrajaperumal kalyanam2 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

செங்கோட்டை அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவில் திருக்கல்யாணம்

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அழகிய மணவாளப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் நாளான நேற்று திருக்கல்யாண மகோத்ஸவம் விமர்சையாக நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam7 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவில் அறநிலையத்துறையின் கீழ், சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

sengottai sundarrajaperumal kalyanam6 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

இக்கோவிலில் திருக்கல்யாண வைபவம், கடந்த 1996 ஆம் ஆண்டு முதலில் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தத் திருக்கல்யாண வைபவம் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வருடம் 23 ஆவது வருட கல்யாண வைபமாக புரட்டாசி முதல் நாள் நேற்று (செப்.18) புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam5 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் ஸ்ரீபூமி, நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒரு பக்கத்தில் பெருமாளும் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழுந்தருளச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam3 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜப் பெருமாளை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து பாலும் பழமும் நிவேதித்து, திருக்கல்யாண சடங்கும் ஊஞ்சல் வைபவமும் சிறப்பும் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப் பட்ட மணமேடை மண்டபத்தில் மூவரையும் எழுந்தருளச் செய்து, வேள்வி வளர்த்து, காப்பிடுதல், பூணூல் மாற்றுதல், கோத்திரம் மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன.

sengottai sundarrajaperumal kalyanam1 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

திருக்கல்யாண வைபவத்தின் முக்கிய நிகழ்வான ஸ்ரீபூமி நீளா தேவியருக்கு சுந்தராஜப் பெருமாள் திருக்கரங்களால் திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சப்த அடி, பொரியிடுதல் போன்ற வைபவங்களும் நடைபெற்றன. தொடர்ந்து திவ்யதம்பதிகளுக்கு ஆரத்தி காட்டி மகாதீபாராதனை நடைபெற்றது.

sengottai sundarrajaperumal kalyanam8 செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

நிறைவாக ஸ்ரீபூமி நீளாதேவி சமேதராய் அழகிய மணவாளப் பெருமாள் திருவீதி புறப்பாடு கண்டருளினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை மட்டுமல்லாமல் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் அருளைப் பெற்றனர்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

பின் தொடர்க

17,868FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...