ஆன்மிகம் "எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு...

“எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!”

-

- Advertisment -

சினிமா:

தலைவி பட போஸ்டர்: ஜெயலலிதாவாக மாறிய கங்கனா!

தலைவி படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத்தின் இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் வலிமை: வெளியான விஷயங்கள்!

அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்

சிவராத்திரி: ஸ்ரீரெட்டி வெளியிட்ட வீடியோ! வைரல்!

சில காட்சிகளில் உடல் முழுவதும் திருநீறு அணிந்து அகோரி போலவும் காட்சி அளிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

த்ரிஷாவிற்கு மட்டும் எச்சரிக்கையா?

இதை இப்படியே விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க முடியாது. இது மற்றவர்களுக்கும் பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் என்றார்.
-Advertisement-

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..! – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்!

நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.

மாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை!

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்!

2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து !

பைக் திருட்டு பார்ட்டி சந்தோஷ் மாட்டியது எப்படி தெரியுமா? ரொம்பவே ஆச்சரியப் படுவீங்க!

சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!

அதிதி தேவோ பவ: டிரம்பின் ஹிந்தி ட்வீட்டுக்கு மோடியின் பதில்!

பாரதத்தின் பண்டைய வேத ஞானக் கருத்து இது என்பதும், அதனை பிரதமர் மோடி குறிப்பிட்டு, நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை வெளிப்படுத்தியிருப்பதும் பலரது பாராட்டுகளையும் பெற்றது.

தங்கம் விலை உச்சம்; சவரண் ரூ.33 ஆயிரத்தைத் தாண்டியது!

வெள்ளி ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.53,300க்கு விற்பனையாகிறது.

கோவையில் கள்ள நோட்டு தயாரிப்பு: 3 பேர் கைது!

கிதர் முஹம்மது, மகேந்திரன் ஆகிய அவர்கள் இருவரிடமும் விசாரித்ததில் தடாகம் சாலையைச்சேர்ந்த சூரியகுமார் என்பவர் தயாரித்துக் கொடுத்ததாக அவர்களிருவரும் தெரிவித்தனர்.

ஆதின நிலங்களை ஆட்டைய போடும் திமுக: நெல்லை எம்.பி.யின் அராஜகத்துக்கு எதிராக… விஹெச்பி!

திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் தி மு க நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் பட்டது.

எச்சரிக்கை! இன்று முதல்… பத்திரப்பதிவுக்கு சாட்சியா போனீங்கன்னா… மாட்டிக்குவீங்க!

ஆவணத்தில் சாட்சியாக வருபவர்கள் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் புகைத்தால் கூடுதல் அபராதம்: அரசின் முடிவை வரவேற்கும் ராமதாஸ்!

பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும் என்று கூறியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

பயங்கரவாதிகளின் களமாகிவிட்ட தமிழகம்! சென்னையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் நடத்தப் பட்ட சோதனையைத் தொடர்ந்து சென்னை நெற்குன்றத்தில் அன்பரசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மர்மதேசமான எஸ்.ஆர்.எம்., பல்கலை! மீண்டும் ஒரு மாணவி தூக்கில்! என்ன நடக்கிறது?!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது எஸ்.ஆர். எம். பல்கலை ஒரு மர்ம தேசமாக மாறியுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி! மலைக்குச் செல்ல எளிய வழி!

திருமலையில் இருந்து திருப்பதிக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக இருந்து வருகிறது. திருமலைக்கு ரயில் கெண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை திருமலா திருப்பதி தேவஸ்தானம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

சந்திரனால் சூரியனுக்கு ஆன தாமதம்! ஆதித்யா குறித்து மயில்சாமி அண்ணாத்துரை!

சந்திரயான்-2 தோல்வியால் சூரியனை ஆராயும் 'ஆதித்யா' செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
- Advertisement -
- Advertisement -

“எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!”

(பாமர ஆசாமியிடம் பரமாசார்யா)

(துவாதசி பாரணையும் நெல்லிக்காயும்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-10-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)

மகாபெரியவா எந்த விரதமானாலும் சரி,துளிக்கூட நியம நிஷ்டை தவறாம அனுஷ்டிப்பார்.சில விரதங்கள் இருக்கிற சமயத்துல கூடவே மௌன விரதத்தையும் சேர்ந்து அனுஷ்டிப்பார் . ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்துட்டு, மறுநாள் துவாதசி அன்னிக்கு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் பரமாசார்யா.

வழக்கமா துவாதசி அன்னிக்கு மகா பெரியவாளைப் பார்க்க வர்றவா பலரும் நிறைய கனிவர்க்கங்களைத்தான் வாங்கிண்டு வருவா. ஏன்னா, முதல்நாள் உபவாசமிருந்த பெரியவா மறுநாள் பாரணை பண்றச்சே அந்தப்பழங்கள்ல ஒரு விள்ளலையாவது எடுத்துண்டா பெரும் புண்ணியம் கிடைக்குமேன்னுதான்.

அதே மாதிரி அந்த துவாதசியிலயும் நிறையபேர் வகைவகையான பழங்களை எடுத்துண்டு வந்து பெரியவாளுக்கு சமர்ப்பிச்சிருந்தா.அந்த சமயத்துல சாதாரணமா இருந்த பக்தர் ஒருத்தர், பெரியவா முன்னால் வந்து நின்னு நமஸ்காரம் பண்ணினார்.அவர் கையில் மஞ்சள் பை ஒண்ணு இருந்தது.

நமஸ்காரம் செஞ்சவருக்கு குங்குமமும் கல்கண்டும் குடுத்தார் மகாபெரியவா. அதை வாங்கிண்டு நகர ஆரம்பிச்சார். அப்போ மகாபெரியவா, “கொஞ்சம் நில்லு” அப்படின்னு உரத்த குரல்ல சொல்ல, அந்த ஆசாமி சட்டென்னு நின்னு திரும்பிப் பார்த்தார்.

“என்ன நீ இப்படிப் பண்றே? எனக்குக் குடுக்கறதுக்குன்னு கொண்டு வந்ததை என் கிட்டே சேர்ப்பிக்காம நீயே எடுத்துண்டு போறியே,குடு அதை!” அப்படின்னார் பெரியவா.

தன் கையில் இருந்த மஞ்சள்பையைக் கொஞ்சம் தயக்கத்தோட பார்த்த அந்த ஆசாமி,”இல்ல,சாமீ அது வந்து….!” வார்த்தைகளை முடிக்காம இழுத்தார்.

“என்ன…இங்கே ஆப்பிள், ஆரஞ்சுன்னு குவிஞ்சு இருக்கே. இதுல நாம எடுத்துண்டு வந்ததுக்கு என்ன மதிப்பு இருக்கப்போறதுன்னு நினைக்கறியா? இதெல்லாத்தையும்விட அதுதான் ஒசந்தது. அதுவும் துவாதசி அன்னிக்குக் கொண்டு வந்திருக்கே.குடு அதை” என்று சொன்னார் பரமாசார்யா.

தன்கையில இருந்த பையை பவ்யமா பெரியவா கிட்டே நீட்டினார் அந்த ஆசாமி.பக்கத்துல இருந்த சீடரைப்பார்த்தார் மகாபெரியவா. அதைப் புரிஞ்சுண்ட சீடர் மூங்கில் தட்டு ஒண்ணை எடுத்து அந்த ஆசாமி பக்கமா நீட்டி அதுல அந்தப் பையில இருந்த வஸ்துவை கொட்டச் சொன்னார்.

மஞ்சள் பையை மூங்கில் தட்டுல கவிழ்த்துக் கொட்டினார் அந்த ஆசாமி. அதுலேர்ந்து குண்டு குண்டான நெல்லிக் காய்கள் அழகா கொட்டி, தட்டை நிரப்பித்து.

இன்னிக்கு பிக்ஷைல இதை அவசியம் சேர்க்கணும்னு சொல்லிடு” சீடரிடம் சொன்னார் பெரியவா.

எத்தனையோ பணக்காரா எடுத்துண்டு வந்து குவிச்சிருந்தரகம்ரகமான கனிவர்க்கம் எல்லாம்,’இந்த நெல்லிக்காய்க்குக் கிடைச்ச பாக்யம், தங்களுக்குக் கிடைச்சுலையே!’ன்னு தோணித்து அங்கே இருந்தவா எல்லாருக்குமே.

அற்பமா தான் நினைச்சதை ஏத்துண்டு அற்புதமா ஆக்கிட்ட ஆசார்யாளை மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுட்டுப் புறப்பட்டார் அந்த ஆசாமி.

துவாதசி அன்னிக்கு நெல்லிக்காய் கொண்டு வந்து குடுக்கணும்னு அந்தப் பாமர ஆசாமிக்கு எப்படித் தோணித்து? அவர் நெல்லிக்காய் கொண்டு வந்துட்டு தராமாப் போறார்னு பரமாசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுது.எல்லாம் அந்தப் பரந்தாமனுக்கே வெளிச்சம்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,977FansLike
215FollowersFollow
773FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

பலாக்கொட்டை துவையல்!

மோர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம் சாதத்தில் போட்டு பிசசைந்தும் சாப்பிடலாம்.

வேணாம்னு சொல்றவங்களும் வேணும்னு சொல்ற சேனை பிரட்டி!

வெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும்.

கேரள சமையல்: பலாப்பழ பஜ்ஜி!

கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து, சுவையான பலாப்பழ பஜ்ஜியைப் பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |