December 6, 2021, 8:58 pm
More

  “காமாக்ஷி காமாக்ஷி காமாக்ஷி” (மூன்று முறை உரக்கச் சொல்லி பேர் வைத்த பெரியவா)

  “காமாக்ஷி,காமாக்ஷி,காமாக்ஷி”

  -(மூன்று முறை உரக்கச் சொல்லி பேர் வைத்த பெரியவா)

  (கனவுல மூணு மாசம் கழிச்சு வான்னு சொன்ன மகான் சாயங்காலமா வான்னு சொன்னதை இவா மறந்திருந்தாலும் மகான் மறக்கலை. அதோட இவா அங்கே வரக்கூடிய தினத்துல சாயங்கால வேளைலதான் நல்ல நேரம் அமையும்னு முன்கூட்டியே அவர் தெரிஞ்சுண்டது எப்படி? இதெல்லாம் அவருக்கு மட்டுமே தெரிஞ்ச அற்புதம்,அதிசயம்,மஹா ரஹஸ்யம்)

  கட்டுரையாளர்- பி. ராமகிருஷ்ணன்
  நன்றி-குமுதம் பக்தி 03-10-2019 தேதியிட்டது
  (ஓரு பகுதி மட்டும்)(இரண்டு நாள் முன்பு வந்தது)

  சென்னையில மகாபெரியவா மேல பக்தி உள்ள குடும்பம் ஒண்ணு இருந்தது.அந்த அகத்துப் பெண்ணுக்கு கல்யாணம் ஆச்சு.ஆத்துக்காரரோட வெளியூருக்குப் போனவ ஆறே மாசத்துல திரும்பி வந்தா,வயத்துல குழந்தையை சுமந்துண்டு. என்னதான் புகுந்த அகத்துல சீராட்டினாலும், கர்ப்பகாலத்துலயும்,பேறு காலத்துலயும் தாயார்தான் உடன் இருக்கணும்னு பொம்மனாட்டிகள் ஆசைப்படுவா.அப்படித்தான் அந்தப் பொண்ணும் வந்திருந்தா!.

  வயிறு பெருக்கப் பெருக்க பிரசவத்தை நினைச்சு பயமும் பெரிசாகிண்டே இருந்தது அந்தப் பெண்ணோட மனசுல. அந்த சமயத்துல ஒரு நாள் அவளுக்கு நல்லபடியா குழந்தை பிறக்கறதாகவும், அந்த சமயத்துல எதுக்காகவோ மகாபெரியவா அவா அகத்து வழியே வந்திருக்கறாதாகவும் கனவு வந்தது. அவளுக்கு தன்னோட குழந்தையை மகாபெரியவா கிட்டே காட்டறதுக்காக அவ தூக்கிண்டு போகறதாகவும், மூணு மாசம் முடிஞ்சதும் ஒரு சாயங்கால வேளையில அங்கே கூட்டிண்டு வான்னு சொல்லிட்டு அவர் குழந்தையைப் பார்க்காமலே போயிடறதாகவும் கனவு தொடர்ந்தது.சட்டுனு முழிச்சுண்ட அவ தாயார்கிட்டே விவரத்தைச் சொன்னா.

  “கனவுல மகான் வந்தது நல்ல சகுனம்தான்.நல்லதே நடக்கும்”னு சொன்னா அவ அம்மா.அப்படியே சுகப்பிரசவத்துல பெண் குழந்தை லக்ஷ்மிகரமா பொறந்தது.

  மூணாவது மாசம் முடிஞ்சுது. தன் கனவுல மகாபெரியவா வந்த விஷயத்தை ஏற்கனவே அகத்துக்காரர்கிட்டே சொல்லியிருந்தா அவ. அதனால ரெண்டு பேரும் குழந்தையைத் தூக்கிண்டு ஸ்ரீமடத்துக்குப் போனா.

  அவா அங்கே போன நேரம் கார்த்தால ஆறு ஆறரை மணி இருக்கும். அன்னிக்கு ஏதோ விசேஷம்கறதால மகானை தரிசிக்க அப்பவே கூட்டம் நிறைய வந்திருந்தது.வரிசைல போய் நின்னா அந்தத் தம்பதி.மெதுவா நகர்ந்து அவாளோட முறை வர்றதுக்குள்ளே, மகா பெரியவா தரிசன நேரம் முடிஞ்சு உள்ளே எழுந்து போய்விட்டார்.

  கைக்குழந்தையோட ஏற்கனவே நாலஞ்சு மணி நேரம் காத்துண்டு இருந்தாச்சு. இன்னும் எத்தனை நேரம் ஆகுமோன்னு அந்தப்பொண்ணோட அகத்துக்காரருக்குத் தோணித்து.

  “பொதுவா மகான் கனவுல வந்து சொன்னா, அது நேர்லயே சொல்றதுக்கு சமம்னு சொல்வா.அவரே வரச்சொன்னார்னா, அவரே கூப்ட்டு அனுகிரஹம் பண்ணுவார்னும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா உன் கனவுல வந்தவர் இன்னும் ஏன் காக்க வைக்கறார்னு தெரியலையே” மெதுவா மனைவியிடம் கேட்டார்.

  “எனக்கும் ஏன்னு தெரியலை.ஆனா அவரை தரிசிச்சுட்டுதான் இங்கேர்ந்து போகணும்ணு மட்டும் தோணறது” சொன்னா அவ.

  காத்துண்டு இருந்தா ரெண்டுபேரும். ரெண்டு மூணு மணி நேரம் ஆச்சு.மறுபடியும் தரிசனம் தர்றதுக்காக வந்து உட்கார்ந்தார் மகான். அப்பவும் இவாளைக் கூப்பிடலை.

  மனசுக்குள்ள லேசா சலிப்பு வந்த சமயம். “உங்களைப் பெரியவா கூப்ட்றார்” அணுக்கத் தொண்டர் ஒருத்தர் வந்து சொல்ல அவசர அவசரமா மகான்கிட்டே போனா.

  “என்ன குழந்தையை என்கிட்டே காட்டறதுக்குக் கொண்டு வந்தியா?” கேட்ட மகான்,யாருமே எதிர்பார்க்காத வகையில, தன் முன்னால இருந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைச்சுண்டார்

  குழந்தையைப் பெத்தவாளுக்கு அப்படியே சிலிர்த்துப் போச்சு.

  “குழந்தைக்குப் பேர் வைச்சாச்சோ…”? அடுத்த கேள்வி மகானிடமிருந்து பிறந்தது.

  “இல்லே ..பெரியவா..உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டப்புறம் வைக்கலாம்னு..!:” முடிக்காம நிறுத்தினா அந்தப் பெண்மணி.

  “நல்லாதாப்போச்சு…இவளுக்கு நானே நாமகரணம் பண்ணிடறேன்….சொன்ன பெரியவா பக்கத்தில் இருந்த சாஸ்திரிகள் ஒருத்தரைப் பார்த்து “இப்ப நேரம் நன்னா இருக்கோ” அப்படின்னு கேட்டார்.

  பெரியவா உங்களுக்குத் தெரியாததில்லை. இன்னிக்கு கார்த்தாலேர்ந்து நல்ல நேரமே இல்லை. இப்போதான் அரை நாழிகைக்கு முன்னால திதியும் நட்சத்திர பாதமும் மாறி நல்ல நேரம் பிறந்திருக்கு” ]” சொன்னார் சாஸ்திரிகள்.

  அதைக் கேட்டு புன்னகைச்ச மகான், “இவளுக்கு. காமாக்ஷின்னு பேர் வைக்கறேன்

  .”காமாக்ஷி,காமாக்ஷி,காமாக்ஷி” உரக்கச் சொன்ன மகாபெரியவா குழந்தையை பெத்தவாகிட்டே குடுத்துட்டு, ஆசிர்வாதம் பண்ணி கல்கண்டு,குங்குமம்,கொய்யாப் பழம் கொடுத்து அனுகிரஹம் பண்ணினார்.

  கனவுல மூணு மாசம் கழிச்சு வான்னு சொன்ன மகான் சாயங்காலமா வான்னு சொன்னதை இவா மறந்திருந்தாலும் மகான் மறக்கலை. அதோட இவா அங்கே வரக்கூடிய தினத்துல சாயங்கால வேளைலதான் நல்ல நேரம் அமையும்னு முன்கூட்டியே அவர் தெரிஞ்சுண்டது எப்படி? இதெல்லாம் அவருக்கு மட்டுமே தெரிஞ்ச அற்புதம்,அதிசயம்,மஹா ரஹஸ்யம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,802FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-