November 27, 2021, 5:16 am
More

  `தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் …….. தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

  `தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ……..
  தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’

  தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கிய மகாபுருஷர் மகா பெரியவா. திருக்குறள் பற்றிய அன்னாரின் எண்ண ஓட்டங் களைக் கொஞ்சம் பார்ப்போம்
  .
  நன்றி-சக்தி விகடன்.

  ‘`தமிழ் மறை என்று சொல்கிற குறள் முழுக்க முழுக்க வைதிகமானதே என்பது என் அபிப்பிரா யம், வைதிக சமயத்தில் பித்ருக்களுக்குத் தான் முதலிடம். அப்புறம்தான் வேத யக்ஞம், பித்ருக்களைக் குறித்த தர்ப்பணமும் திவஸமும் செய்தபின்தான் வேத பூஜை செய்யவேண்டும். இதே வரிசையில் திருவள்ளுவரும் சொல்கிறார்.

  `தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
  தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’

  பித்ருக்கள், தெய்வம், அதிதி, சுற்றத்தார்கள், தான் என்று ஐந்து பேரையும் போஷிக்கவேண்டும் என்கிறார். முதலில் பித்ருக்களான தென்புலத் தாரைச் சொல்லி அப்புறம் தெய்வத்தைச் சொல் கிறார். யமனுடைய திக்கான தெற்கில் பித்ருக்கள் இருப்பதாக- வைதிக நம்பிக்கையிலேயே, ‘மூதாதைகளை’ தென்புலத்தார் என்கிறார்.
  வைதிகமும், வள்ளுவரும் விதிக்கிற இந்தத் தர்மத்தைவிட பெரிய சோசலிஸம் எதுவும் இல்லை. தனக்கென்று மட்டும் வாழாமல் லோகோபகாரமாக வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற தியாகம்தான் வைதிக மதத்தின் அஸ்திவாரம். தமிழ் மறையான குறளும் சரி, மற்ற தமிழ் நீதி நூல்களும் சரி, மறையின் மரபில் வந்தவைதான்.

  திருவள்ளுவர் வைதிகத்தைத்தான் சொன்னார். ஒளவையார் ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பதாக உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே, வேதாத்யயனம் ஒருநாள்கூட நடைபெறாமல் இருக்கக்கூடாது என்கிறாள். ஆழ்வாராதிகளும் சைவத் திருமுறைக்காரர்களும் எங்கே பார்த்தா லும், ‘வேதியா! வேத கீதா! சந்தோகம் காண், பௌழியன் காண்’ என்று வேதங்களையும், அவற்றின் சாகைகளையும் சொல்லியே பகவா னைத் துதிக்கிறார்கள். இந்தத் தமிழ் நாட்டில் வேதப் பாடசாலைகளைவைத்து நடத்துவதில் பிராமணர் அல்லாதார் செய்திருக்கிற கைங்கர்யம் கொஞ்சம் நஞ்சமல்ல. நிலமாகவும், பணமாகவும் வாரிக் கொடுத்து இந்தப் பெரிய தர்மத்துக்குப் பரமோபகாரம் செய்திருக்கிறார்கள்.

  இப்போதும்கூட, ஏதோ அரசியல் காரணங் களுக்காக அவைதிகமான, நாஸ்திகமான அபிப்பிராயங்கள் கொஞ்சம் தலைதூக்கியிருந் தாலும், மொத்தத்தில் தமிழ் ஜனங்களுக்கு உள்ளூர வைதிக சிரத்தையும், பழைய சாஸ்திர ஏற்பாடுகளில் பக்தி விசுவாசமும் போகவேயில்லை என்பதுதான் என் அபிப்பிராயம்.

  அவர்களது அன்புக்குப் பாத்திரராகிற மாதிரி பிராமணர்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் ஆசார அனுஷ்டான சீலர்களாகிவிட்டால், இங்கே வேதரக்ஷணம் திரும்பவும் நன்றாக நடந்து விடும் என்பதே என் நம்பிக்கை.’’

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,110FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,736FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-