“காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்”.
(ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன் கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டு வஸ்திரமும் காணிக்கையாக அனுப்பிய -பெரியவா)
(பொருத்தம் காட்டிய பெரியவாள்)
கட்டுரையாளர்;ரா.கணபதி.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
“பெரியவாள் இறைவனாக இருந்து பிரஸாதம் வழங்குவது ஓர் அழகு எனில்,இறைவனுக்கு அவர் காணிக்கை செலுத்துவதோ அதனினும்அழகு.ஒரு கோவிலுள்ள மூர்த்தி எனில் அந்த ஸ்தல ஐதீஹயத்துக்குச் சிறப்புறப் பொருந்தும்படி காணிக்கை செலுத்துவார்.
ஸ்ரீகாளஹஸ்தி கும்பாபிஷேகத்துக்கு இப்படித்தான் காணிக்கை அனுப்பினார்.
ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன் கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டு வஸ்திரமும் அனுப்பியதை சாதரண வழக்காகவே நாம் எண்ணக்கூடும். ஆனால் அவரோ பொருத்தம் பார்த்தே அனுப்பினார்.
“கண்ணப்பரின் எச்சிலைப் ப்ரீதியோடு ஏற்றவர் காளத்திநாதர். அதனால் அவருக்கு எல்லாம் எச்சில் காணிக்கையாகத்தான் இருக்க வேண்டும்”
பால் எச்சிலானது.; கன்று தாய் மடியில் வாய் வைத்து எச்சிலாக்கினாலொழியப் பால் கிடைக்காது.
தேனிக்கள் வாயாலேயே எடுத்துச் சேர்க்கும் தேனும் எச்சில்.
கங்காதி தீர்த்தங்களில் மீன்கள் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டு ஜலத்தைக் கொப்பளித்துக் கொண்டே போகும்.அதனால் கங்கையும் எச்சில்.
பட்டுப்பூச்சி வாயால் நூற்பதுதானே பட்டிழை? அதனால் பட்டு வஸ்திரமும் எச்சில்.
“அதனால் காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சிலா அனுப்பியிருக்கேன்” என்றார்.
ஆனால் அவரோ பொருத்தம் பார்த்தே இவற்றை அனுப்பினார்.