Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோத்ஸவம்!

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு வளையல் மஹோற்சவம்.

சகல சுகங்களையும் அருளும் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் கொலு வீற்றிருக்கும் இந்த்ரகீலாத்ரி மலை வளையல் உற்சவத்திற்கு தயாராகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கனக துர்க்கை அம்மனை மட்டுமின்றி ஆலய வளாகத்தையும் வளையல்களால் அழகாக அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

இந்த மாதம் 29 ஆம் தேதி வளையல் உற்சவத்தை மிக வைபவமாக நடத்துவதற்கு ஆலய கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.

இந்திரகீலாத்ரி மலைமேல் கோயில் கொண்டுள்ள ஶ்ரீதுர்கா மல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் இந்த மாதம் 29 ஆம் தேதி நடக்கவிருக்கும் வளையல் திருவிழாவில் அம்மனின் மூல விக்கிரகத்தை பலநிற வளையல்களால் அலங்காரம் செய்வார்கள்.

கனகதுர்காவின் சன்னிதியை மட்டுமின்றி ஆலயம் முழுவதும் வண்ண வண்ண வளையல்களால் கண்ணைக் கவரும் வகையில் அலங்கரித்து ஆனந்தம் அடைவர்.

2016 முதல் தொடங்கப்பட்ட இந்த விசேஷ பூஜை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முதல் ஆண்டு ஐந்து லட்சம் வளையல்களோடு தொடங்கிய இந்த வளையல் திருவிழா இந்த வருடம் ஒரு கோடி வளையல்களைக் கொண்டு கொண்டாடப்படுகிறது.

தேவஸ்தானம் வளையல்களை வாங்குவதோடு பக்தர்களும் மிக அதிக அளவில் அம்மனுக்கு வளையல்களை வாங்கி சமர்ப்பிப்பார்கள்.

அதற்கென்று தேவஸ்தானம் தனி கொண்டர் திறந்துள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

விஜயநகர அரசர்கள் தங்க ஆபரணங்களோடு வளையல்களையும் சிறப்பாக அம்மனுக்கு சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

உற்சவம் நிறைவடைந்த பின்னர் அம்மனை அலங்கரித்த வளையல்களை பக்தர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version