
சென்னம்பாளையம் எமதர்மர் சுவாமிக்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு
சிறுமுகை அருகேயுள்ள சென்னம்பாளையம் கிராமத்தில் எமதர்மர் திருக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மூலவராக எமதர்மர் தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். இக்கோயில் வளாகத்தில் இன்பவிநாயகர், காலகாலேஸ்வரர் அருள் பாலிக்கின்றனர்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்ப விநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த வழிபாட்டின் போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
சிறப்பு பூஜை முடிந்தப் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்: எஸ்.வி.பி.சரண்