07/07/2020 1:13 PM
29 C
Chennai

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

சற்றுமுன்...

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.

கொரோனா: ஒரு லட்சம் பரிசோதனை கருவிகள்! தென்கொரியாவிலிருந்து வாங்கிய தமிழக அரசு!

புதிதாக கருவிகள் வந்திருப்பதால் பரிசோதனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;

பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து பெரியவாளின் கருத்து)

சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்) இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும் பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய நிலையில் இருந்தன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு பணியாளர் இருந்தார். ராஜகோபால அய்யங்கார் என்று பெயர். கோயிலில் அவருடைய பணி – இரவில் ரங்கநாதப் பெருமாள் பள்ளியறைக்குச் செல்லும்போது, சாம வேதத்தின் இந்தப் பகுதிகளை ஓதுவதுதான். குடும்பம் நடத்துவதற்குப் போதிய  வருமானம் இல்லாததால், பகல் நேரத்தில், ஒரு விறகுக் கடையில் கணக்கு எழுதும் வேலையையும் செய்துவந்தார்.

ஜைமினிய சாகைக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால்,ராஜகோபால அய்யங்காரைக் காப்பாற்றியாக வேண்டும்!

அவரையே ஆசிரியராக்கி, போதுமான சம்பளம் கொடுத்து, 1963-ல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் அவருடைய சிஷ்யர் ஸ்ரீ மகரபூஷணம் அவர்களை ஆசிரியராகக்கொண்டு பாடசாலை நடந்து வருகிறது. இதுவரை (2007-கட்டுரை) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்ல முறையில் பயின்று தேர்ச்சி பெற்று வித்வான்களாகி இருக்கிறார்கள்.

ஸ்ரீ மகரபூஷணத்துக்கு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. ஜைமினீய சாகையை நாடாப்பதிவு செய்துகொள்ள வேண்டுமாம்.

ஸ்ரீ மகரபூஷணம், பெரியவாளிடம் வந்தார்.

“நான் என்ன செய்யணும்னு உத்தரவாகணும்….”

“உன் அபிப்ராயம் என்னன்னு சொல்லு….”-பெரியவா

“டேப் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. ஆனா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாலே பெரியவாளிடம் தெரியப்படுத்தினேன்.

வேதத்தை நாடாப்பதிவு செய்வதை பெரியவாள் ஏற்றுக்கொண்டதேயில்லை. நாடாப்பதிவு செய்வதால் ஏற்படும் தீமைகளை மகரபூஷணத்திடம் விளக்கினார்கள்.

மகரபூஷணத்துக்கு பெரியவாள் வாக்கு, பெருமாள் வாக்கு.

அவருடைய வேதக்குரல் நாடாவில் பதிவாகவில்லை. ‘அரங்கன் கேட்டு மகிழ்ந்தாலே போதும்’என்ற முதிர்ச்சி.

இதே மகரபூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும் அழைப்பு வந்தது. போனால் ‘சில லகாரங்களுடன் வரலாம்; பல விகாரங்களுடனும் வரலாம்’.

“நான் போகப்போவதில்லை…” என்று சொல்லி தெண்டன் சமர்ப்பித்தார் மகரபூஷணம்.;

“ரொம்ப சரி,பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;…………………….பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad "பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்..."

பின் தொடர்க

17,870FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

செய்திகள்... மேலும் ...