
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது! இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாளை ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது
டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4.45க்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது!
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்!
நிகழ்ச்சி நிரல்படி…
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்… வருகிற 06.11.2019 புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
வருகிற 25.12.2019 அன்று திருநெடுந்தாண்டகமும்,
26.12.2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழாவும்,
முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் 05.01.2020 அன்றும்,
06.01.2020 அன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பும்,
12.01.2020 அன்று திருக்கைத்தல சேவையும்,
13.01.2020 வேடுபரி வைபவமும்
15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரியும் 16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு வருகிற 06.11.2019 அன்று வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் காலை 10.00 – 11.00 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெறும்…என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.