“உன் மதத்திலேயே இரு”
(
எல்லா மதமும் நல்லதைத்தான் சொல்கிறது .ஒரு ஊரை அடைய நாலு வழி இருப்பது போல்,ஆண்டவனை அடைய வேறு வேறுமார்க்கமுண்டு.அவ்வளவுதான்!)
(வெள்ளக்கார அம்மாவுக்கு உபதேசம்).
கட்டுரையாளர்-எஸ்.கணேச சர்மா
தட்டச்சு- வரகூரான் நாராயணன்
ஒரு வெள்ளக்கார அம்மா-பால் பிராண்டனின் சிஷ்யை- பெரியவாளிடம்,இந்து மதப் பெருமையையும் பெரியவா கீர்த்தியையும் கேட்டு, இந்து மதத்தின் மீது காதலாகி,
“எனக்கு இந்து மதத்தில் சேர்ந்துவிட விருப்பம் அதிகமாக இருக்கிறது.பெரியவா அனுக்கிரகம் செய்து உத்தரவு தர வேண்டும்!” என்று பெரியாவாளிடம் கேட்டாள்.
பெரியவா அழுத்தம் திருத்தமாக “இதோ பார்! எல்லா மதமும் நல்லதைத்தான் சொல்கிறது .ஒரு ஊரை அடைய நாலு வழி இருப்பது போல்,ஆண்டவனை அடைய வேறு வேறுமார்க்கமுண்டு.அவ்வளவுதான்!
இந்து மதத்துக்கு வந்தால்தான் மேன்மை பெற முடியுமென்பதில்லை.உன் மதத்திலும் கடைத்தேறும் வழிதான் காட்டப்படுகிறது .ஆனால் வேறொரு விதத்தில் சொல்லியிருக்கு .அவ்வளவுதான்.
அதனால் நீ நம்பிக்கையோடு உன் மதத்திலேயே இரு. ஈஸ்வர சங்கல்பத்தால் நமக்குக் கிடைத்திருக்கும் மதத்தை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது.அதற்கு உத்தரவு தர மாட்டேன்!” என்று அனுப்பிவிட்டார்.