ஆன்மிகம் "கலெக்டர் கேட்ட கையெழுத்து."-(மைனர்) பெரியவாளிடம்

“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்

-

- Advertisment -

சினிமா:

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

ரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்?!

எனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்!

சுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா

லக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா?

"கனா காதல்', "என் இனிய பொன் நிலாவே', "தோட்டாக்கள் பூவாச்சு', "ஏனோ வானிலை மாறுதே', "இவள் அழகு', "கூடல்', "ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
-Advertisement-

நானும் அவளும்..!

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி... - என் செல்போனில் ரிங்டோன் அடித்த போது, சுற்றியிருந்த நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள்.

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

நினைவிருக்கட்டும், இது 1971 அல்ல, 2020!

அதிமுக அரசு தொடர்ந்து நாடகம் ஆடினால், மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக வேண்டும்.

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா?

மோடியின் பியூட்டி டிப்ஸ்… அந்த ரகசியத்தை வெளியிட்ட பிரதமர்!

" ஒவ்வொருவரும் வியர்வை சிந்த உழைக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை வியர்வை வழிய கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்" என்றார்.

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவு!

புதிய வாக்காளர் பட்டியல் ரெடி செய்து தேர்தலை நடத்த உத்தரவு . *நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை தற்போதைய சிறப்பு அதிகாரியே பணியில் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த கும்பளே!

தனக்கு சிறப்பான கௌரவமளித்த பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர்கள் எப்படிப்பட்ட அழுத்தமும் இன்றி தேர்வுகளை திறமையாக எதிர்கொள்ள...

தினமணி ஆசிரியர் ஏஎன்எஸ்., துக்ளக்குக்கு ஆதரவளித்தது ஏன்?

முன்னாள் ஆசிரியர்திரு ஏ.என்.சிவராமன்(என் தாத்தா உறவு முறைக் காரர்) அரசின் வரம்பு மீறிய துக்ளக் தர்பார் என்றுதான் துக்ளக் 1971 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

1971 நிகழ்வை மூடிமறைக்க திமுக., துடிப்பது ஏன்?

நிச்சயம் இந்த நிகழ்வை திமுக மூடி மறைக்க விரும்புவதன் நோக்கமே இப்போதுதான் புரிகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு… முறைகேடு நடந்தது எப்படி?

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தேனி எம்பி., காரை தாக்கிய பயங்கரவாதிகளை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை!

தேனி எம் பி ரவீந்திரநாத் குமார் கார் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

ரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்!

பெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது!

கரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்!

கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.

ரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்! அர்ஜுன் சம்பத் கண்டனம்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
- Advertisement -
- Advertisement -


“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”

(மைனர்) பெரியவாளிடம்

(வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!”- கலெக்டர்)
.
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ,அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை….இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி,அவர் மேஜர் ஆகவில்லை.அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல்.ஒரு மைனர் ரிக்கார்டுகளில் கையெழுத்து இட முடியாதே!

அப்போது நடப்பது ஆங்கில சர்க்கார் .மகானிடம் இதுபற்றிப் பேச, அப்போது இருந்த கலெக்டர் மடத்துக்கு வந்தார். அவரை வரவேற்று எதிரில் அமர வைத்தார் மகான்.

அவரிடம் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன், ஒரு பழுத்த பழமான அடியவர் மகானைத் தரிசிக்க வந்து,தட்டுத்தடுமாறி அவருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இது அவர் மடத்துப் பீடாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதை! பீடாதிபதி எந்த வயதினராக இருந்தால் என்ன? அவர்தானே பீடாதிபதி! அவருக்குத்தான் முதியவர் மரியாதை செலுத்துகிறார்.

கலெக்டர் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் மகான்.

“பெரியவா இன்னமும் மேஜராகவில்லை .அதனால் மடத்து ரிக்கார்டுகளில் எப்படிக் கையெழுத்திட முடியும் என்பதை விசாரிக்கத்தான் வந்தேன்!” என்றார் கலெக்டர்.

அந்தச் சிறுவயது பெரியவா மெதுவாகத் தன் பேச்சை ஆரம்பிக்கிறார்.

“இந்த ஊருக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று?”

“பதினைந்து வருடங்களுக்கு மேலாயிற்று .இப்போது இங்கே கலெக்டராக இருக்கிறேன்!”

“இத்தனை வருடங்கள் ஆனபின், உங்களுக்கு எங்கள் மடத்துச் சம்பிரதாயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமே! எங்கள் சம்பிரதாயத்தில் வயதானவர்கள் சிறியவர்களை நமஸ்காரம் செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை! எங்கள் வழக்கப்படி சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்….” என்றார் கலெக்டர்.

“அப்படியா! சரி..வீட்டில் அண்ணன்,அண்ணி இவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நமது மரபுதானே?”

“ஆமாம்!”

“அதாவது, அண்ணி நம்மைவிட வயதில் இளையவராக இருந்தாலும், அந்த ஸ்தானத்துக்கு நாம் மரியாதை செலுத்துகிறோமா, இல்லையா?”

“ஆமாம்!”

“இந்த இடத்தில் வயது வித்தியாசம் எங்கே வருகிறது?”

கலெக்டர் யோசித்தார்.

மகான் தொடர்ந்தார்.

“இப்போது உங்களுக்கு எதிரில்தானே ஒருவர் எனக்கு நமஸ்காரம் செய்தார்.அவருக்கு என்ன வயது இருக்கும்?”

“எண்பதுக்கும் மேலே இருக்கலாம். அவரை இருவர் பிடித்துக் கொண்டல்லவா வந்தார்கள்?” என கலெக்டர் பதில் சொன்னார்.

“எனக்கென்ன வயது?”

“பதினைந்து வயது!”

“என் வயதென்ன,அவரது வயதென்ன? எனக்கேன் அவர் நமஸ்காரம் செய்கிறார்? என் வயதுக்கு அவர் மரியாதை தரவில்லை நான் இருக்கும் இடத்துக்கு! அதாவது, மடாதிபதி ஸ்தானத்துக்கு!. ஆக, இங்கே மடாதிபதியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கையெழுத்துப் போட வேண்டுமே தவிர, அவர் இன்ன வயதில் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் இங்கே பொருந்தாது. தெரிகிறதா?”

“வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!” என்றார் கலெக்டர். மகான் லேசாகப் புன்னகை புரிந்தார் .கலெக்டர் தொடர்ந்தார்..

“நான் புரிந்துகொண்டதை எங்கள் மேலிடத்துக்கு எழுதி விளங்க வைத்து, பிரிவி கவுன்சிலின் அனுமதியை வாங்கி விடுகிறேன்!” என்று கலெக்டர் சொல்ல .பெரியவா அவரிடம் உத்தரவு கேட்பது போல் பேச ஆரம்பிக்கிறார்.

“இங்கே காஞ்சியில் உள்ள தெய்வமான சந்திரமௌலீஸ்வரரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தெய்வம். அவருக்கு வயதே கிடையாது. அவரை நான் தினமும் பூஜித்து வருகிறேன்,இல்லையா? எனக்கு வயது பதினெட்டு ஆகும்போதும் இதே தெய்வம் அப்போதும் இங்கேதான் இருப்பார். இல்லையா?.

அதனால், எனக்குப் பதினெட்டு வயதாகும்வரை அந்தத் தெய்வத்தின் பெயரால் கையெழுத்திடுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் லண்டனுக்கு எழுதி, அவர்கள் புரிந்து கொள்ளாமல் கேள்விமேல் கேள்வி கேட்டு உங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க, இது ஒன்றுதான் வழி. எனக்குப் பதினெட்டு வயது ஆன பிறகு, நான் என் பெயரில் கையெழுத்திடுகிறேன்..” என்று சொல்லி அந்தக் கையெழுத்து விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு மேல் பேசுவதற்கு கலெக்டருக்கு விஷயம் இருக்கவில்லை.

“இது ஒரு நல்ல ஏற்பாடு” என்றுதான் அவரும் முடிவு செய்தார்.

இதைவிட விளக்கமாக மகானைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,910FansLike
199FollowersFollow
749FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!

சிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!

கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை

உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |