ஆன்மிகம் "கலெக்டர் கேட்ட கையெழுத்து."-(மைனர்) பெரியவாளிடம்

“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”-(மைனர்) பெரியவாளிடம்

-

- Advertisment -

சினிமா:

கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

ஆடையில் புரட்சி காட்டிய மீராமிதுன்! கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்!

படு ஆபாசமாக இருக்கும் ஒரு படத்தையும் லேட்டஸ்ட்டாக வெளியிட்டு, நெட்டிசன் களின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்

நிறைய கற்றுக் கொடுத்த ஜானுவுக்கு நன்றி! சமந்தா!

பாக்ஸ் ஆபீஸ் வெற்றி குறித்தெல்லாம் பேசாமல், இந்தப் படத்தை பற்றி மட்டும் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தில் நடித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி தான்.

பாவம்… அடிமை வாழ்க்கை… சாப்பாடு இல்ல… டிரைவர் வேலை! நடிகர் நகுல் இப்படி ஆய்ட்டாரே!

பாவம் நடிகர் நகுல் இப்போ டிரைவர் வேலை பாக்குறாராம். சாப்பாடு இல்லே… சம்பளம் இல்லே… என்னா அடிமைத்தனம்!? ரொம்பவே பாவம் தான்!
-Advertisement-

யே ஹை.. தாஜ்… மும்தாஜ்… மெஹல்! டீக் ஹை!?

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பார்ப்பதற்கு 1000 க்கும் மேற்பட்ட அதிசய இடங்கள் இந்தியாவில் இருந்தும் வரும்போதே தாஜ்மஹாலைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது

70 நாள் நாசமாக்கினவங்களை பேசவில்லை! ஒரே ஒரு நாள் எதிர்த்தவனை குற்றம் சாட்டுகிறார்கள்!

ஆனால்… சிஏஏ ஆர்ப்பாட்டங்கள் என்ற பெயரில் சாலைகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை எதிர்த்து நின்ற 'கபில் மிஸ்ரா'வை அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரு சமூகப் போராளிக்கு… வீடு கூடவா இந்த சமூகம் தராது..? நல்லா இருக்குது நியாயம்?

சமூக ஆர்வலர் என்பவர் சமூகத்திற்கு நல்லது செய்பவர்.. சமூகத்தால் நன்மதிப்பைப் பெற்றவர் .. சமூகத்தால் மரியாதையுடன் பாராட்டி கௌரவிக்கப்படுகின்ற நபர்.. அப்படி ஒருவருக்கு ஒரு வீட்டை வாடகைக்கு தர இந்த சமுதாயத்தில் ஆள் இல்லையா?

வக்கீல்னா ஏன் வீடு கொடுக்க மாட்டேன்றாங்க தெரியுமா?! இதைப் படியுங்க..!

இது ஒட்டுமொத்த நீதித்துறை கோளாறு: வழக்கறிஞர் என்ற ஒரே காரணத்திற்காக வாடகை வீட்டின் உரிமையாளரை கோர்ட்டுக்கு அழைத்து அலைய வைக்காதீர்கள் என்று உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..

தினமலர் ஆர்.ஆர். கோபால்ஜியின் தாயார் சுப்புலட்சுமி ராகவன் காலமானார்!

தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் எடிட்டர் முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோரின் தாயாரான சுப்புலட்சுமி, இன்று மாலை 4.30 மணிக்கு திருச்சியில் காலமானார்.

புத்தியுள்ள மனிதரெல்லாம்.. அடடா.. ஆடிக் கொண்டே பாடி.. அசத்திய சிறுவன்! வைரலாகும் வீடியோஸ்!

இப்படி பலரும் கருத்துகளைப் பகிரவே, இன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. கண்ணான கண்ணே என்று இந்தச் சிறுவன் பாடும் பாடல் மயக்கும் விதமாய் இருக்கிறது என்று கருத்துகள் தொடர்ந்தன.

தில்லி ஷாகீன் பாக் வன்முறைகள்; நிர்வாகம், போலீஸுக்கு மட்டுமில்லை… நீதிமன்றத்துக்கும் பெரும் பொறுப்பு உண்டு!

அரசு நிர்வாகம், நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருமே தங்கள் கடமையாற்றலில் இருந்து மெத்தனமாகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் விலகிச் செல்கின்ற நேரத்தில், அப்பாவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைப்பு காட்டுவது தவிர்க்க முடியாதது.

குடிநீர் கேன் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்! சென்னையில் தண்ணீர்த் தட்டுப்பாடு அபாயம்!

அனுமதியின்றி நிலத்தடி நீர் எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு மார்ச் 3க்கு தள்ளிவைக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், கடலூரில் ஓரே நாளில் 13 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

யே ஹை.. தாஜ்… மும்தாஜ்… மெஹல்! டீக் ஹை!?

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பார்ப்பதற்கு 1000 க்கும் மேற்பட்ட அதிசய இடங்கள் இந்தியாவில் இருந்தும் வரும்போதே தாஜ்மஹாலைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே உங்கள் எண்ணமாக உள்ளது நாங்கள் என்ன செய்வது

கமல், ஷங்கருக்கும் பங்கு உண்டு! லைகாவின் லைட்டான கடிதம்!

இந்தியன் 2 விபத்து தொடர்பாக கமல் ஹாஸன் கடந்த 22ம் தேதி எழுதிய கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளார். கமல் மற்றும் ஷங்கர் மேற்பார்வையில் தான் படப்பிடிப்பு நடந்தது என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.

பணியிட மாற்றத்தால் பழி தீர்க்க… பாஜக., பிரமுகரை டார்கெட் செய்தாரா..?!

பாஜக பிரமுகருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிட்டதால் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கம்யூனிஸப் பின்னணி காங்கிரஸின் அதிகார பூர்வ...

சபாஷ்… வாங்க ரஜினி.. ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோம்.! அழைக்கிறார் கமல்!

சபாஷ் நண்பர் @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள். .. என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கமல்ஹாசன்.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: மார்ச் 27ல் தொடங்குது.!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திமுக., அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு!

திமுக.,வின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
- Advertisement -


“கலெக்டர் கேட்ட கையெழுத்து.”

(மைனர்) பெரியவாளிடம்

(வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!”- கலெக்டர்)
.
கட்டுரையாளர்;ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை நிழலில்
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாபெரியவர் பட்டத்துக்கு வந்துவிட்டாரே தவிர, அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருந்தன. இதோ,அதில் மிகவும் முக்கியமான பிரச்சனை….இன்னும் மகானுக்கு பதினெட்டு வயது ஆகி,அவர் மேஜர் ஆகவில்லை.அதனால், மடத்து தஸ்தாவேஜுகளில் யார் கையெழுத்துப் போடுவது என்பதில் சிக்கல்.ஒரு மைனர் ரிக்கார்டுகளில் கையெழுத்து இட முடியாதே!

அப்போது நடப்பது ஆங்கில சர்க்கார் .மகானிடம் இதுபற்றிப் பேச, அப்போது இருந்த கலெக்டர் மடத்துக்கு வந்தார். அவரை வரவேற்று எதிரில் அமர வைத்தார் மகான்.

அவரிடம் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன், ஒரு பழுத்த பழமான அடியவர் மகானைத் தரிசிக்க வந்து,தட்டுத்தடுமாறி அவருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார். இது அவர் மடத்துப் பீடாதிபதிக்குக் கொடுக்கும் மரியாதை! பீடாதிபதி எந்த வயதினராக இருந்தால் என்ன? அவர்தானே பீடாதிபதி! அவருக்குத்தான் முதியவர் மரியாதை செலுத்துகிறார்.

கலெக்டர் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார் மகான்.

“பெரியவா இன்னமும் மேஜராகவில்லை .அதனால் மடத்து ரிக்கார்டுகளில் எப்படிக் கையெழுத்திட முடியும் என்பதை விசாரிக்கத்தான் வந்தேன்!” என்றார் கலெக்டர்.

அந்தச் சிறுவயது பெரியவா மெதுவாகத் தன் பேச்சை ஆரம்பிக்கிறார்.

“இந்த ஊருக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆயிற்று?”

“பதினைந்து வருடங்களுக்கு மேலாயிற்று .இப்போது இங்கே கலெக்டராக இருக்கிறேன்!”

“இத்தனை வருடங்கள் ஆனபின், உங்களுக்கு எங்கள் மடத்துச் சம்பிரதாயங்கள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமே! எங்கள் சம்பிரதாயத்தில் வயதானவர்கள் சிறியவர்களை நமஸ்காரம் செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“இல்லை! எங்கள் வழக்கப்படி சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்….” என்றார் கலெக்டர்.

“அப்படியா! சரி..வீட்டில் அண்ணன்,அண்ணி இவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நமது மரபுதானே?”

“ஆமாம்!”

“அதாவது, அண்ணி நம்மைவிட வயதில் இளையவராக இருந்தாலும், அந்த ஸ்தானத்துக்கு நாம் மரியாதை செலுத்துகிறோமா, இல்லையா?”

“ஆமாம்!”

“இந்த இடத்தில் வயது வித்தியாசம் எங்கே வருகிறது?”

கலெக்டர் யோசித்தார்.

மகான் தொடர்ந்தார்.

“இப்போது உங்களுக்கு எதிரில்தானே ஒருவர் எனக்கு நமஸ்காரம் செய்தார்.அவருக்கு என்ன வயது இருக்கும்?”

“எண்பதுக்கும் மேலே இருக்கலாம். அவரை இருவர் பிடித்துக் கொண்டல்லவா வந்தார்கள்?” என கலெக்டர் பதில் சொன்னார்.

“எனக்கென்ன வயது?”

“பதினைந்து வயது!”

“என் வயதென்ன,அவரது வயதென்ன? எனக்கேன் அவர் நமஸ்காரம் செய்கிறார்? என் வயதுக்கு அவர் மரியாதை தரவில்லை நான் இருக்கும் இடத்துக்கு! அதாவது, மடாதிபதி ஸ்தானத்துக்கு!. ஆக, இங்கே மடாதிபதியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள்தான் கையெழுத்துப் போட வேண்டுமே தவிர, அவர் இன்ன வயதில் இருக்க வேண்டும் என்கிற சம்பிரதாயம் இங்கே பொருந்தாது. தெரிகிறதா?”

“வயதை வைத்துக் கையெழுத்து இல்லை. ஸ்தானத்தை வைத்துத்தான் கையெழுத்து என்பதை நீங்கள் விளக்கிய பிறகு நன்றாகப் புரிந்து கொண்டேன்!” என்றார் கலெக்டர். மகான் லேசாகப் புன்னகை புரிந்தார் .கலெக்டர் தொடர்ந்தார்..

“நான் புரிந்துகொண்டதை எங்கள் மேலிடத்துக்கு எழுதி விளங்க வைத்து, பிரிவி கவுன்சிலின் அனுமதியை வாங்கி விடுகிறேன்!” என்று கலெக்டர் சொல்ல .பெரியவா அவரிடம் உத்தரவு கேட்பது போல் பேச ஆரம்பிக்கிறார்.

“இங்கே காஞ்சியில் உள்ள தெய்வமான சந்திரமௌலீஸ்வரரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தெய்வம். அவருக்கு வயதே கிடையாது. அவரை நான் தினமும் பூஜித்து வருகிறேன்,இல்லையா? எனக்கு வயது பதினெட்டு ஆகும்போதும் இதே தெய்வம் அப்போதும் இங்கேதான் இருப்பார். இல்லையா?.

அதனால், எனக்குப் பதினெட்டு வயதாகும்வரை அந்தத் தெய்வத்தின் பெயரால் கையெழுத்திடுவதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன். நீங்கள் லண்டனுக்கு எழுதி, அவர்கள் புரிந்து கொள்ளாமல் கேள்விமேல் கேள்வி கேட்டு உங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க, இது ஒன்றுதான் வழி. எனக்குப் பதினெட்டு வயது ஆன பிறகு, நான் என் பெயரில் கையெழுத்திடுகிறேன்..” என்று சொல்லி அந்தக் கையெழுத்து விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதற்கு மேல் பேசுவதற்கு கலெக்டருக்கு விஷயம் இருக்கவில்லை.

“இது ஒரு நல்ல ஏற்பாடு” என்றுதான் அவரும் முடிவு செய்தார்.

இதைவிட விளக்கமாக மகானைத் தவிர வேறு யார் சொல்ல முடியும்.

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,973FansLike
217FollowersFollow
776FollowersFollow
16,300SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆறு மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு! என்ன தெரியுமா?

வாழைப்பழ துண்டுகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கிண்ணத்தில் ஊற்றவும்.

குழந்தைகளுக்கு பச்சரிசி பாசி லாடு!

பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாக இருக்கும்போதே சிறிதளவு நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

கேரள சமையல்: பலாப்பழ பாயாசம்!

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைத்துக்கொள்ளவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |