― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா?

சபரிமலை பற்றி இத்தனை விஷயம் இருக்கா?

- Advertisement -

ஸ்ரீ தர்ம சாஸ்தா/மணிகண்டன்/ஐயப்பன்/ஆரிய கேரளவர்மன்/சபரிமலை ~ நாம் அறிந்த/அறியாத விஷயங்கள் :

001) சொரிமுத்தைய்யன் கோவில் ~ சாஸ்தாவின் மூலாதார சக்ர கோவில் {தமிழ்நாட்டில் உள்ள (ஒரே) கோவில்)}

002) அச்சன்கோவில் ~ சாஸ்தாவின் ஸ்வாதிஷ்டான சக்ர கோவில். { பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில்களில்., மூலவிக்ரஹம் பின்னப்படாமல்/மாற்றப்படாமல் இருக்கும் ஒரே கோவில் }

003) ஆரியங்காவு ~ சாஸ்தாவின் மணிபூரக சக்ர கோவில்.

004) குளத்துப்புழை ~ சாஸ்தாவின் அநாகத சக்ர கோவில்.

005) எருமேலி ~ சாஸ்தாவின் விசுக்தி சக்ர கோவில்.

006) சபரிமலை ~ சாஸ்தாவின் ஆக்ஞா சக்ர கோவில்.

007) காந்தமலை ( பொன்னம்பல மேடு ) ~ சாஸ்தாவின் ஸஹஸ்ரார ( பிரம்மாந்திரம் ) சக்ர கோவில்.

008) இருமுடிக்கட்டு ~ பாவ புண்ணியங்களை இருமுடிக்கட்டாக எடுத்து செல்லும் புனிதமான வழிபாடு.
முன் முடியில் ஐயனின் நைவேத்ய பொருட்களும்.,
பின் முடியில் வழித்தேவைக்கான பொருட்களும் இருக்கும்.

009) நெய்த்தேங்காய் (முத்தரைத்தேங்காய்) ~ ஐயனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் அடைத்து செல்லும் காய்.

010) புத்தன் வீடு ~ எருமேலியில் உள்ளது
மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி இளைப்பாறிய இடம். மகிஷியை வதம் செய்த ஐயப்பனின் வாள் இன்றும் புத்தன் வீட்டில் தரிசிக்கலாம்.

011) பேட்டைத் துள்ளல் ~ முதன்முறை சபரி செல்லும் கன்னிச்சாமிகள் உடல் முழுவதும் பல வண்ணங்களை பூசி ஆடும் ஆட்டம்.

012) பேரூர் தோடு ~ இரும்பொன்னி கரையில் உள்ள சிவன் கோவில் இங்கு குளத்தில் வசிக்கும் மீன்களுக்கு பொரி போட்டு பிரார்த்திக்கும் இடம்.

013) காளைகட்டி ஆசிரமம் ~ மகிஷி வதத்தை சிவபெருமான் பார்க்க வந்த பொழுது., காளையை இந்த இடத்தில் கட்டிய இடம்.

014) இஞ்சிப்பாறைக் கோட்டை ~ பெருவழியில் உள்ள ஒரு பாறையின் பெயர்.

015) இடைத்தாவளம் ~ இளைப்பாறும் இடம்.

016) அழுதா நதி ~ பம்பை நதியின் கிளை நதி. {கன்னி ஸ்வாமிமார்கள் அழுதாநதியில் முழ்கி (குளித்து) கல்லெடுத்து., கல்லிடுங்குன்றில் (மகிஷியை வதம் செய்த இடம்) இடுவார்கள்/வைப்பார்கள்.}

017) கல்லிடங்குன்று ~ கன்னி ஸ்வாமிகள் (முதல்முறை சபரிமலைக்கு வரும் சாமிமார்கள்) அழுதாநதியில் மூழ்கி கல் எடுத்து கல்லிடங்குன்றில் சேர்க்கும் பிரார்த்தனை செய்யும் இடம்.

018) கரிவலந்தோடு ~ பெருவழியில் உள்ள இடம்.

019) கரிமலை ~ பெருவழியில் உள்ள உயர்ந்த மலை.

020) உடும்பாறைக் கோட்டை ~ கரிமலை தொடக்கத்தில் உள்ள கோட்டை.

021) கரிமலை உச்சி ~ இங்கு ஸ்வாமிமார்கள் பகவதி பூஜையும்., பதினெட்டாம் படிக்காவலன் கருப்பு ஸ்வாமி பூஜையும் செய்து பயணத்தை தொடர்வது வழக்கம்.

022) பெரியானை வட்டம் ~ யானைகள் தங்குமிடம். சித்தபுருஷர்கள் வாழுமிடம். ஸ்வாமிமார்கள் இங்கு தங்கி அன்னதானம்., பூஜைகள் செய்வது வழக்கம்.

023) சிறியானை வட்டம் ~ யானைகள் தங்குமிடம். ஸ்வாமிமார்கள் இங்கும் தங்கி அன்னதானம்., பூஜைகள் செய்வது வழக்கம்.

024) பம்பா நதி ~ சபரிமலை அடிவாரத்தில் ஓடும் புண்ணிய நதி.

025) பம்பா சத்யா ~ பம்பைக்கரையில் நடத்தப்படும் பூஜைகள் மற்றும் அன்னதானம்.

026) அம்பலப்புழா ~ எருமேலி பேட்டை துள்ளலில் பங்கெடுக்கும் ஒரு முக்கிய குழு.

027) பந்தளம் ~ ஐயப்பன்/மணிகண்டன் வளர்ந்த இடம்.

028) ஆலங்காட்டு சங்கம் ~ எருமேலியில் பேட்டை துள்ளி மலையேறும் சங்கம். இச்சங்கம் ஆலங்காட்டு யோகம் என்றும் அழைக்கப்படுகிறது.

029) இரும்பூன்னிக்கர ~ பெருவழியில் உள்ள இடம்.

030) உதயணன் ~ உடும்பாறைக் கோட்டையில் வாழ்ந்து வந்த ஒரு கொள்ளைக்காரன்.

031) இலவந்தோடு ~ உடும்பாறைக் கோட்டைக்கு அடுத்த இடம்.

032) எலவந்தாவளம் ~ புதுச்சேரி ஆற்றின் ஓரம் அமைந்த இடம்.

033) ஐயப்பன் குரு கோவில் ~ ஐயப்பன் குருகுலவாசம் செய்த இடம். பந்தளத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

034) கன்னிச்சாமி ~ முதல்முறை சபரியாத்திரை செல்லும் பக்தர்.

035) குருசாமி ~ சபரியாத்திரைக்கு வழிநடத்தி செல்பவர்.

036) குருநாதன் முகடு ~ ஐயப்பனுக்கு ஆயுதபயிற்சி அளித்த குரு சமாதியடைந்த மலை.

037) சீரப்பஞ்சிரா மூக்கன் ~ ஐயப்பனுக்கு ஆயுதப்பயிற்சியும் மல்யுத்தமும் அளித்தவர்.

038) புலிக்குன்னு ~ தாயின் தலைவலிக்கு புலிப்பால் கொண்டு வரும் வழியில் ஐயப்பன் புலிகளோடு தங்கிய மலை.

039) பூரணை புஷ்களை ~ சாஸ்தாவின் இரு தேவியர்.

040) நீலிமலை ~ பம்பையை தாண்டியவுடன் ஏறும் முதல் மலை.

041) முக்கால் வட்டம் ~ சீரப்பஞ்சிராவிற்கு அருகில் உள்ள கோவில்.

042) முக்குழி ~ பகவதி கோவில் உள்ள இடம்.

043) வாபூரன் ~ சாஸ்தாவின் சிவகண தலைவன்.

044) வலியம்பலம் ~ பெரிய கோவில்.

045) வலியக்கோவில் கல் ~ பந்தளராஜா தான் வணங்குவதற்காக பந்தள அரண்மனைக்கு அடுத்து கட்டிய கோவில்.

046) ராஜசேகர பாண்டியன் ~ பந்தள ராஜா ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை.

047) அப்பாச்சி மேடு ~ நீலிமலைக்கு அடுத்த மலை.

048) அம்பலப்புழா வேலகழி ~ தாள லயத்துடன் கற்றுத்தரப்படும் ஆயுத பயிற்சி.

049) ஆறாட்டு ~ ஐயப்பன் பம்பை நதியில் நீராடி செல்லும் விழா.

050) சபரி பீடம் ~ பெண் துறவியான அன்னை சபரி வாழ்ந்த இடம்.

051) சரங்குத்தி ஆல் ~ எருமேலியில் இருந்து எடுத்து வந்த அம்பு சரங்களை சமர்ப்பிக்கும் இடம்.

052) காணிப்பொன் ~ ஐயப்பனுக்கு செலுத்தும் குருதட்சணை.

053) உஷபூஜை ~ காலை நேர பூஜை.

054) பம்பா விளக்கு ~ முதன்முறை சபரியாத்திரை செல்லும் கன்னிசாமிகள் பம்பையில் நடத்தும் வழிபாடு.

055) களபாபிஷேகம் ~ தைமாதம் 05ம்தேதி பந்தள மன்னர் முன்னிலையில் சாஸ்தாவுக்கு செய்யப்படும் சந்தனாபிஷேகம். (தற்பொழுது தினமும் நடக்கிறது)

056) திருவாபரண பெட்டகம் ~ சங்கராந்தி தினத்தன்று சாஸ்தாவிற்கு சாற்றப்படும் நகைகள் உள்ள பெட்டகம்.

057) சாஸ்தா மூல மந்திரம் ~ ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பதவி ஏற்கும் மேல்சாந்திக்கு தந்திரி சொல்லிக் கொடுக்கும் மந்திரம்.

058) கல்பாத்தி கோவில் ~ ஐயப்பனுக்கு தேரோட்டம் நடைபெறும் முக்கியமான கோவில்.

059) குருதிபூஜை ~ மாளிகைபுரத்தம்ன் சன்னிதியில் மகர கடைசி நாளன்று நடத்தப்படும் பூஜை.

060) கொச்சுக் கடுத்தன் ~ ஐயப்பனின் போர்வீரன்.

061) கொச்சம்பலம் ~ சிறிய கோவில்.

062) கோப்தா ~ சாஸ்தாவின் பரிவார தேவதை

063) பூங்காவனம் ~ சபரிமலை கோவிலையும் அதை சுற்றியுள்ள இடத்தையும் அழைக்கும் சொல்.

064) கோட்டைப்படி ~ தர்மசாஸ்தாவின் பூங்காவன நுழைவாயில்.

065) நந்தவனம் ~ சபரிமலை ஐயப்பனின் பூங்காவனம்.

066) கொச்சுவேலன் ~ ஐயப்பனுடன் வனப்பயணத்தில் உடன் சென்றவர்.

067) சரப்ப்பாட்டு ~ பக்தர்களின் சர்ப்பதோஷம் நீங்க மாளிகைபுரத்தம்மன் சன்னதியில் பாடும் பாட்டு

068) சஹஸ்ர கலசாபிஷேகம் ~ 1008 கலசங்கள் வைத்து பூஜித்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யும் வழிபாடு. (தற்பொழுது மாத நடைதிறப்பின் கடைசி நாளன்று நடைபெறுகிறது

069) சரணம் ஐயப்பா ~ பொதுவாக ஸ்வாமிமார்கள் ஐயப்பனை வழிபடும் மந்திரம்.

070) ஸ்வாமி சரணம் ~ எதிர்ப்படும் ஐயப்பமார்களை ஐயப்பனாக கருதி வழிபடும் சரணம்.

071) சாஸ்தா பாட்டு ~ ஐயப்பனின் அருட்சரித்ரம்
மலையாளத்தில் ஏழு பாகங்களாக உள்ளது.

072) சிரம்பிக்கல் மாளிகை ~ பந்தளத்தில் ஐயப்பனின் திருவாபரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அரண்மனை.

073) சின்முத்திரை ~ ஐயப்பனின் வலதுகரம் காட்டுவது. இரண்டு விரல்களை ( ஆட்காட்டி விரலை பெருவிரலோடு சேர்த்து ) மடக்கி மூன்று விரல்களை
(சுண்டுவிரல்., மோதிரவிரல்., நடுவிரல்) நிமிர்த்தி காட்டும் முத்திரை
( ஆணவம்., கண்மம்., மாயை அகற்றி ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது )

074) சீனித்தாவளம் ~ பெருவழியில் இரண்டு பெரிய சீனிமரங்கள் உள்ள இடம்.

075) சீவேலி ~ சன்னதியை சுற்றி வரும் ஸ்வாமியின் ஊர்வலம்.

076) சுக்குப்பாலம் ~ பெருவழியில் உள்ள ஒரு பாலத்தின் பெயர்.

077) தலப்பாற மலா ~ பெருவழியில் உள்ள கோவில். இதற்கு அரசு முடிக்கோட்டை என்ற பெயரும் உண்டு.

078) தாழமண் குடும்பம் ~ ஐயப்பனுக்கு செய்யும் பூஜைகளுக்கு தலைமை பொறுப்பேற்கும் நபரின் குடும்பம்.

079) திரிவேணி சங்கமம் ~ பம்பையில் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்.

080) வண்டிப்பெரியாறு – புல்மேடு பாதை ~ பெரிய பாதை/பெருவழி மகரத்தின் போது மட்டுமே திறந்திருந்த காலத்தில்., இரண்டு மாதத்திற்கு (முதல் மாதத்தின் கடைசி நாளிலும்., அடுத்த மாதத்தின் முதல் நாளிலும்) ஒருமுறை திருநடை திறந்து பூஜை செய்து கொண்டிருந்த காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட வழி. இப்பொழுதும் இவ்வழி பயன் படுத்தப்படுகின்றது

081) பறைக்கொட்டி பாட்டு ~ பக்தர்களின் தோஷம் விலக மாளிகைபுரத்தம்மன் சன்னதியில் செய்யப்படும் வழிபாடு

082) பாண்டித்தாவளம் ~ மாளிகைபுரம் சன்னதி அருகே மதுரை நாட்டில் இருந்து வரும் பக்தர்கள் தங்கும் இடம்.

083) பஸ்மக்குளம் ~ சபரிமலை சந்நிதானத்தில் (பின்புறம்) இருக்கும் புண்ய தீர்த்த குளம்.

084) உரக்குழி தீர்த்தம் ~ சன்னிதானத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் கும்பளம் தோட்டில் உள்ள அருவி.

085) திருநடை ~ ஐயனின் சன்னிதானம்

086) பிரதிஷ்டை தினம் ~ வைகாசி மாதத்தில் ஹஸ்த நக்ஷத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஐதீகம்
அன்று ஒருநாள் மட்டும் நடை திறக்கப்பட்டு தரிசனம் கிடைக்கும்

087) பெரிய கருப்பர் ~ ஐயப்பனின் பாதுகாவலர்.

088) பெருநாடு சாஸ்தா கோவில் ~ பத்தனந்திட்டாவில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் மடத்துக்குழி என்ற இடத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சாஸ்தா கோவில்
இங்கு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்யலாம். சபரிமலை திருவாபரணம் மகரம் நடை மூடிய அடுத்த தினம் பெண்களும் தரிசிக்க வேண்டி இங்கு அணிவிக்கப்படுகிறது.

089) பொன்னம்பல மேடு ~ தை (மகர) சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தரும் மகரஜோதி தெரியும் மலை.

090) நாயாட்டு விளி ~ பதினெட்டாம்படியின் கீழ் நடத்தப்படும் சாஸ்தாவின் கதையை பாடும் ஒரு சடங்கு.

091) மகரஜோதி ~ ஐயப்ப தரிசனத்தின் சிகர நிகழ்ச்சி
பொன்னம்பல மேட்டில் தெரியும் ஜோதி.

092) உத்ர நக்ஷத்திரம் ~ மகர ஜோதிக்கு சில நிமிடத்திற்கு முன்பு வானில் தெரியும் நக்ஷத்திரம்.

093) கிருஷ்ண பருந்து ~ சாஸ்தாவின் ஆபரணபெட்டியோடு சேர்ந்து வானில் வட்டமிட்டு பறந்து வரும் கருடன்.

094) மகர சங்கரம பூஜை ~ தைமாதம் முதல் தேதி சூரியபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் நடத்தப்படும் பூஜை

095) மகாகாளன்., பீமரூபன் ~ சாஸ்தாவின் முக்கிய பரிவாரங்கள்.

096) மேல்சாந்தி ~ முக்கிய அர்ச்சகர்
புறப்படா சாந்தி என்ற பெயரும் இவருக்கு உண்டு
பதவி ஏற்றதில் இருந்து ஒரு வருடம் முழுவதும்., வீட்டிற்கு செல்லாமல் சபரிமலையில் இருப்பதால் இவருக்கு இந்த பெயர்.

097) மண்டல காலம் ~ கார்த்திகை முதல் தேதி முதல் மார்கழி 11ம்தேதி வரை உள்ள நாட்கள்.

098) மரக்கூட்டம் ~ சபரிபீடத்திற்கு அடுத்த இடம்.

099) சுப்ரபாதம் ~ ஐயப்பனின் திருப்பள்ளியெழுச்சி பாடல்.

100) ஹோமகுண்டம் ( அக்னிகுண்டம் ) ~ நெய்யபிஷேகம் செய்த பிறகு தேங்காய் மூடிகளை அர்ப்பணம் செய்யும் ஆழி.

101) நெய்யபிஷேகம் ~ ஐயப்பனுக்கு செய்யப்படும் முக்கிய அபிஷேகம்.

102) நெரபுத்திரி ~ அறுவடைத் திருநாள் பூஜை.

103) விஷூ., விஷூ கைநீட்டம் ~ மலையாள வருடப்பிறப்பு. ஆண்டுதோறும் அல்லது தமிழ்நாட்டில் வருடப்பிறப்பு அன்று ஐயப்பன் (கடவுளின்) பாதத்தில் வைத்து பூஜித்த காசுகளை அர்ச்சகர் (தந்திரி/மேல்சாந்தி/பெரியவர்கள்) கையால் பெறும் சடங்கு.

104) அஷ்டாபிஷேகம் ~ ஐயப்பனுக்கு செய்யும் எட்டு வகை அபிஷேகங்கள்.

104) படி பூஜை ~ சபரிமலையில் உள்ள சத்யமான பொன்னு பதினெட்டு படிகளுக்கு நடத்தப்படும் பூஜை

105) ஸ்ரீபூதநாத சரிதம் ~ ஸ்ரீ கூ.மு. முத்துஸ்வாமி சாஸ்திரிகள் எழுதிய சாஸ்தாவைப் பற்றிய சமஸ்க்ருத நூல்.

106) அத்தாழ பூஜை ~ அர்த்தஜாம பூஜைக்கு முன் செய்யப்படும் பூஜை. பானகமும்., அப்பமும் நைவேத்தியம்.

107) ஹரிஹராத்மஜா ஷ்டகம் (அல்லது) ஹரிவராஸனம் ~ அர்த்தஜாம பூஜைக்கு முன் நடைசாத்தும் முன் பாடப்படும் ஸ்லோகம்/பாட்டு.

108) மணிமண்டபம் ~
இரண்டு விதமான செவிவழிக்கதைகள் உண்டு…..
ஒன்று ~ ஸ்ரீ பரசுராமரரால்., பூர்ணா., புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ தர்ம சாஸ்தா., ஸ்ரீசக்ரத்தில் (இன்றும் ஸ்ரீசக்ர பீடம் உள்ளது) பிரதிஷ்டை செய்ததாக ஒரு வரலாறு.
இரண்டு ~ ஐயப்பனுடன் தொடர்புடைய ஆரிய கேரள வர்மன் என்பவரின் ஜீவசமாதி என்றும் ஒரு வரலாறு.
மணிமண்டபம் சாஸ்தாவின்/மணிகண்டனின்/ஐயப்பனின் ஒரு முக்கியமான/சாஸ்வதமான இடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version