“ஆகம விதிகளில் சட்டம் நுழையலாமா?” இதோ பதில்
(ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது.)
4வது ஷரத்தில் மட்டுமே ” In accordanca With law” என்று இருக்கிறது. முதல் மூன்று ஷரத்துகளுக்கும் “In accordance with law”வை எடுத்து விடச் செய்தவர் காஞ்சி முனிவர்.
“மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்”.
தொகுத்தவர்-ரா. வேங்கடசாமி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(மிக நீண்ட கட்டுரையில் ஒரு பகுதி)
எந்த நாட்டிலும் மதத்திற்குள் அரசாங்கம் நுழையலாம். ஆனால் இங்கே அரசாங்கம் மதத்தில் நுழைய முடியாது.
இப்படி ஒரு காரியத்தை வக்கீல்கள் உதவியோடும் ஒரு வைஷ்ணவப் பெரியார் அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரியார் என்கிற பிராமணர் உதவியுடனும் மகான் அரசியல் சாசனம் எழுதி முடிக்கும் முன்பே செய்து முடித்தார். ஆஸ்திகப் பெருமக்களோடு பழக்க வழக்கங்களில் அரசாங்கம் தலையிட முடியாதபடி செய்த மகான்தான், நமது காஞ்சி மாமுனிவர்.
சைனாவில்,ரஷ்யாவில்,அமெரிக்காவில் இதைப் போன்ற ஒரு சட்டம் இல்லை இந்தியாவில் தான் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்திய காண்ஸ்டிடியூஷனில் 26வது ஷரத்தாக மகானின் எண்ணம் இடம் பெற்றது. இந்த தீர்மானத்திற்கு என்ன காரணம்? பிற்காலத்தில் மதவிஷயங்களில் அரசாங்கம் எப்போதுமே தலையிடக்கூடாது என்று மகான் நினைத்தது தான்.
ஒரு மதத்தைச் சேர்ந்தவன், இன்னொரு மதத்தைச் சேர்ந்தவனுக்கு அறிவுரை வழங்கத் தேவை இல்லை. அதே போல் யார் மதத்திலும் தலையிடக் கூடாது.
4வது ஷரத்தில் மட்டுமே ” In accordanca With law” என்று இருக்கிறது. முதல் மூன்று ஷரத்துகளுக்கும் “In accordance with law”வை எடுத்து விடச் செய்தவர் காஞ்சி முனிவர்.
இதனால் இந்து மற்றும் மற்ற மதங்களும்,சர்க்கார் தலையீடு இன்றி காப்பாற்றப்பட்டன.
ARTICLE No; 26
Every Religions denomination or any section there
Of shall have the right..
(a) To Establish and maintain institution for religions
and charitable purposes.
(b) To manage its own affairs in Matters of religion.
(c) To own and and enquire movable & immovable property and
(d) To administrater such property in accordance with law.
இதுதான் அந்த 26வது ஷரத்து.
“இந்திய கான்ஸ்டிடிஷயூனில் இருக்கிறது. இதை வடிவமைத்துக் கொடுத்தவர் காஞ்சி மகான் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்.? “any section there of” என்னும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? எல்லா ஜாதியினரும் இதில் அடங்குகிறார்கள் என்பது தான்.
இப்படி ஒரு சட்டத்தை பெரியவா வடிவமைத்துக் கொடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் யாருமே அக்கறை கொண்டு இருக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்கிறார், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தனது சரிதையில்.
“ஒரு கையில் தண்டத்துடனும், இன்னொரு கையில் கமண்டலத்துடனும்,காலில் மரத்தால் ஆன பாதக் குறடுகள் அணிந்து மகான் கம்பீரமாக நடந்து வரும்போது தர்மமே நடந்து வருவது போலிருக்கும்” என்கிறார் அக்னிஹோத்ரம்.
மதங்களைக் காப்பாற்றிக் கொடுத்த அந்த மகானுக்கு நாம் நன்றி செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.