Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே, ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்—1

வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,
பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2

ஜாதவேத -அக்னியே ,
அஹம் -நான் ,
ஹிரண்யம் -பொன்னையும் ,
காம் -பசுக்களையும் ,
அஸ்வ -குதிரைகளையும் ,
புருஷான் -உறவினரையும் ,
விந்தேயம் -பெறுவேனோ ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,
யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்… .2

அக்னி தேவனே,,
யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ,
அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.
அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.

அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும் ,
ரத மத்யாம் -நடுவில் ரதங்களும் ,
ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான ,
ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை , உபஹ்வையே -அழைக்கிறேன் .

ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே ,
மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .

முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .
திருமகளே !
நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||….4

ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும் ,
ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,
ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும் ,
ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும் ,
த்ருப்தாம் -மன நிறைவுடயளும் ,
தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,
பத்மே -தாமரையில் ,
ஸ்திதாம் -நிலை பெற்றவளும் ,
பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,
காம் -யாரோ ,
தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை, திருமகளை,
இஹ -இங்கே,
உபஹ்வையே–வேண்டுகின்றேன்.

குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் , கருணை நிறைந்து ததும்புவளும், ஒளி நிறைந்தவளும் ,
மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

லோகே -உலக வாழ் உயிர்களுக்கு ,
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் ,
பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும் ,
யசஸா -தன மகிமையால்,
ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும் ,
தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,
உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும் ,
பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,
ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும்,
ஆன,
தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை ,
அஹம் -நான் ,
சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .
த்வாம் -உன்னை ,
வ்ருணே -வேண்டுகிறேன்.
மே -என்னிடமிருந்து ,
அலக்ஷ்மி -வறுமை,
நச்யதாம் – அழியட்டும் .

நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப் படுபவளும் கருணை மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷ்மியை நான் சரணடைகிறேன்.

தேவியே!
என் வறுமை விலகி அழிய அருள்வாய் .

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீ ||

ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே ,
தவ-உனது ,
தபசக -தவத்தால் ,
வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய ,
பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம் ,
அதிஜாதக -உண்டாயிற்று .
அத -அதே போல் ,
தபஸா -தவத்தால்,
தஸ்ய -அதன்,
பலானி -பலத்தால், விளைவாக, பழங்கள் ,
மாயா -அறியாமை ஆகிய ,-
அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும் ,
அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .
பாஹ்யா -புறத்தடயையும்,
நுதந்து -அழிக்கட்டும்.

கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .
அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும், அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||
7

தேவஸகஃ’குபேரனும் ,
கீர்திச்ச -புகழின் தேவனும் ,
மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .
அஸ்மின் -இந்த ,
ராஷ்ட்ரே‌-நாட்டில் ,
ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .
மே -எனக்கு ,
கீர்த்திம்- பெருமையும் ,
ரிதிம் -செல்வமும் ,
ததாது வழங்குவாய் .

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.
உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .
நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் || 8

க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,
ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,
அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,
அஹம் -நான் ,
மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து
நாசயாமி -விலக்குகிறேன் .
சர்வாம் -எல்லா ,
அபூதிம் -ஏழ்மையையும் ,
அசம்ருத்திம் ச -வறுமையையும் ,
நிர்ணுத -அகற்றி அருளுக .
பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .
எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9

கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,
துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும் ,
நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும் ,
கரீஷிணீம் அனைத்தும் நிறைந்தவளும் ,
சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும் ,
ஈஸ்வரீம் -தலைவியும் ஆன ,
தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை ,
இஹ -இங்கே ,
உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .
நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,
அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.

ஸ்ரீ -திருமகளே !,
மனசஹ -மனத்தில் எழும் ,
காமம் -ஆசைகளையும் ,
ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும், மகிழ்ச்சிகளையும் ,
வாக்-வாக்கில் ,
சத்யம் -உணமையையும் ,
பசூனாம் -பசுக்களாலும் ,
அன்னச்ய -உணவினாலும் ,
அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .
மயி -எனக்கு ,
கீர்த்தி -பெருமை ,
ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .
திருமகளே !
தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும், மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும்,
பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .
எனக்கு புகழ் உண்டாகட்டும் .

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11

கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),
கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )
பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,
மயி -எனக்கு ,என்னிடம்,
சம்பவ -தோன்ற வேண்டும் .
பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,
ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான ,
மாதாம் -அன்னையும்
மே -என் ,
குலே- என் குலத்தில் ,
வாசய -தங்கச் செய்ய வேண்டும் .
கர்த்தமரே !
உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .
தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )|
ஆபஹ -தண்ணீர் ,
ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை ,.
ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .
மே -எனது ,
க்ருஹே -எனது இல்லத்தில் ,
வசஹ -வசிக்க வேண்டும் .
ச -மேலும் ,
தேவீம் -தேவியும் ,
மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன ,
ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை ,
மே -என் .
குலே -குலத்தில் ,
நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !
நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .
நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .
தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
…13.

ஜாத வேத -அக்னியே !,
ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,
புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,
புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,
பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,
சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !

கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் , உலகை ஊட்டி வளர்ப்பவளும்,
குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை ,
என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14

ஜாத வேத -அக்னியே !,
ய-யார் ,
ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,
யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,
சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,
ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,
சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும் ,
ஆன ,
லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை ,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !

கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் , நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.

ஜாத வேத -அக்னியே !,
யஸ்யாம் -யாரால் ,
பிரபூதம் -அளவிட முடியா ,
ஹிரண்யம் -பொன்னும் ,
காவஹ -பசுக்களும் ,
தாஸ்ய -பணிப் பெண்டிரும் ,
அஸ்வான் -குதிரைகளும் ,
புருஷான் -பணியாட்களும் ,
அஹம் -நான் ,
விந்தேயம்-பெறுவேனோ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -திருமகளை ,
மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு ,
ஆவஹ -செய்தருள வேண்டும் .
அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,
திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,
அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .
ய சுசி ..
..
இதனின்று பலஸ்ருதி ,
ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||
அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version