“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”

“ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ உன்னை எப்போதும் காப்பாத்துவா”

(பிரதோஷம் மாமாவின் வழி காட்டுதலும் மற்றும் பெரியவா அருளால் தரிசிக்க வழியும் தெரிந்த கொண்ட ஒரு வாலிபன்)

தகவல் உதவி-தில்லை நாதன்
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தில்லை நாதன் தான் நேரில் கண்ட இன்னொரு அனுபவத்தையும் சொல்கிறார்.15-0-1980 அன்று இஸ்லாம்பூர் என்ற ஊருக்கு அஸ்தமனம் ஆகும் சமயம் விஜயம் செய்தருளினார்.அப்போது இவ் வாலிப பக்தரும் உடன் இருந்தார்

கண்களில் நீர் பொங்கி வழிய முகத்தில் ஆனந்தம் ஜொலிக்க ஒரு வாலிபன் ஸ்ரீமகா பெரியவாளைத் தரிசிக்க நின்றான்.அவனைப் ப்பார்க்கும் போது மிகவும் களைப்பாய் தெரிந்தான். ஸ்ரீபெரியவாள் தரிசனம் கிட்டியதே என்கிற ஏக்கம் நீங்கியது போல் அவனது முகபாவம் தெரிந்தது அவன் சொன்ன தகவல்தான் மிகவும் ருசிகரமானது என்கிறார் தில்லைநாதன்.

இவன் பிரதோஷம்  மாமாவை பார்க்க,ஒரு தடவை சென்றபோது மாமா இவனிடம் சொன்னார் “ஸ்ரீ பெரியவாளை நன்னா பிடிச்சுக்கோ. உன்னை  எப்பவும் காப்பாத்துவா!”ன்னு சொல்லி அவனை தரிசனம் பண்ண அனுப்பி வைத்தார். அப்போது ஸ்ரீபெரியவா ‘மீரஜ் என்ற இடத்தில் முகாமிட்டு இருந்தார்.”அங்கே போய் தரிசனம் பண்ணிட்டு வா” என்று பிரதோஷம் மாமா அவனிடம் கண்டிப்பாக சொல்லி அனுப்பினார்.

வாலிபன் சொல்கிறான்..”எனக்கு மெட்ராஸ்  தவிர இந்த ஊரெல்லாம் புதுசு.எனக்கு எந்த இடமும் தெரியாது. குறிப்பிட்ட ரயிலிலே ஏறி ‘மீரஜ்’ வந்தவுடன் கேட்டுக்கொண்டு இறங்கி விட்டேன். ஊருக்குள்ளே போய்ப் பார்த்தேன்.அந்த ஊர்லே மகாபெரியவா இருக்கிற சுவடே தெரியலே தமிழ் பேசறவா யாராவது தென்பட்டா கேட்கலாம்னு பார்த்தா, ஒருத்தரும் அப்படி எனக்குக் கிடைக்கல்லே.கன்னட பாஷையும் எனக்குத் தெரியாது.

ஒருவழியா எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்லே கேட்டுப் பார்த்தேன்.அப்போ எனக்குக் கிடைச்ச தகவல் என்ன தெரியுமா? ஸ்ரீபெரியவா அந்த ஊரை விட்டு கிளம்பிட்டார் என்கிற தகவல் மட்டும் தெரிஞ்சுது. ஆனா அவர் எந்த ஊருக்குப் போனார் என்பதே தெரியல்லே!

அப்படி தெரிஞ்சுண்டாலும் அந்த ஊருக்கு எப்படிப் போவதுன்னு தயக்கம். ஒரு விபரமும் தெரியாத இடத்தில் எப்படித் தேட முடியும் என்று நம்பிக்கையில்லாமே மறுபடியும் ரெயில்வே ஸ்டேஷனுக்கே வந்து சேர்ந்தேன்.

திரும்பவும் நான் ஸ்டேஷனுக்கு வந்த நேரம் விடியற்காலை. அப்போதிருந்து மாலை 3 மணி வரை ஸ்டேஷனிலேயே இருந்தேன். ஸ்ரீபெரியவாளை இத்தனை தூரம் வந்தும் தரிசிக்க இயலாத அபாக்யசாலி ஆனேனே! ஸ்ரீபெரியவா கைவிடமாட்டார்.எப்பவும் காப்பாத்துவார்னு ஸ்ரீபிரதோஷம் மாமா சொன்னாரே! அது பொய்யாகிப் போச்சே..இதுதான் எனது வாஸ்தவமான நிலையோ என்றெல்லாம்  அத்தனை நேரமும் ஒரே விதமா நினைச்சு நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததாலே துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீர் வடிக்கும் நிலையுமானது.

மாலை மணி மூன்று.இனி சென்னைக்குத் திரும்ப வேண்டியதுதான்னு  முடிவு செஞ்சி, சென்னைக்கு டிக்கெட் எடுக்க  மனசில் வேதனையோடு க்யூவில் நின்னேன்.தூக்கத்தில் சோர்ந்து போய் நின்றவனுக்கு செவியில் தேனாக அப்போது அங்கே தமிழ் குரல் கேட்டது .அதைக் கேட்டபின் மனசிலே தெம்பு தானாக வந்தது. ‘க்யூ’ வை விட்டு நகர்ந்து இவர்களிடம் போய் தமிழில் விசாரித்து ஸ்ரீபெரியவா போய் கொண்டிருக்கும் இடத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு மனதில் தோன்றியது.

அவர்களிடம் சென்று மெதுவால ஸ்ரீபெரியவாளைப் பற்றி விசாரித்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி அங்கே காத்துக் கொண்டு இருந்தது.

“அடடா பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுத்தானே நாங்களும் வர்றோம்.எங்களோட வந்தவர் ஒருவர், மெட்ராஸ் போறார். அவரை வண்டி ஏத்த நாங்கள் இங்கே வந்தோம்.திரும்பவும் நாங்க ரெண்டுபேர் மட்டும் பெரியவா இப்போ இருக்கிற இடத்துக்குத்தான் போறோம்.நீங்களும் எங்களோடேயே காரில் வரலாம்.நாங்க பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்தோம்.இப்போ பெரியவா இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்திற்குப் போய் இருப்பார்.”வாங்க போகலாம்” ன்னு அவர்கள் சொன்னார்கள்.

அப்போதுதான் ஸ்ரீபிரதோஷம் மாமாவின் வாக்கு எவ்வளவு சத்யமானது என்று எனக்குப் புரிந்தது. ஸ்ரீபெரியவா தன்னோட பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்கிரகம் செய்கிறார்னு நினைச்சபோது எனக்கு மெய்சிலிர்த்தது. தன்னை அழைத்துப் போக தயாராக இருந்தவர்களிடம் இதை அந்த வாலிபர் சொன்னபோது அந்த பக்தர்களுக்கும் ஸ்ரீமகாபெரியவாளின் பெருங்கருணை வெளிப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Latest Posts

spot_imgspot_img

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
0FollowersFollow
2,853FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-