Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

sankara 8 2

பக்தியில் உறுதி தேவை சங்கத்தில் வரக்கூடிய ஒரு சம்பவம் சிவகுரு ஆர்யாம்பாள் தங்களுக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்று ஏங்கி பரமேஸ்வரனை நீண்டகாலம் ஆராதித்து வந்த போதிலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

சிவ குருவிற்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என இதை நாம் இவ்வளவு பிரார்த்தனை செய்தும் ஒன்றும் கிட்டவில்லை என்று அவர் தன்னுடைய பத்தினியிடம் குறைபட்டுக் கொண்டார்.

sringeri

ஆனால் ஆர்யாம்பாள் சொன்னது முற்றிலும் வேறாக இருந்தது. பாரபட்சம் பார்க்கும் குணம் பகவானிடத்தில் என்றுமே இல்லை என்பது சாஸ்திர வாக்கு அது என்றுமே பொய்யாகாது ஆகவே நம்முடைய விஷயத்தை பக்தியில் தான் எங்கோ ஏதோ குறை இருக்கிறது.

எனவே இன்றிலிருந்து இன்னும் அதிக சிரத்தை பக்தியுடன் நாம் தொடர்ந்து பிரார்த்திப்போம் என்று கூறினார்கள் சிவகுருவுக்கும் இதனால் ஒரு தெம்பு வந்தது பிறகு இருவரும் ஆழ்ந்த பக்தியுடன் பகவானைப் பிரார்த்திக்க தொடங்கினார்கள் விரைவிலேயே இறைவனின் அருளும் கிடைத்து இறைவனை அடையும் பாக்கியத்தை அவர்கள் அடைந்தார்கள்

bharathi theerthar

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டுயதும் அதுவே நாம் செய்யும் கர்மபலன்களை கொண்டே நம் வாழ்வு அமைகிறது. இதில் தெய்வத்தை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை மேலும் நாம் ஒன்றை தெய்வத்திடம் ப்ரார்த்தனை செய்தோமேயானால் அது கிடைப்பதற்கும் தாமதத்திற்கும் நாமே தன் காரணம். நம் பக்தியில் வழிபாட்டில் ச்ரத்தையில் உள்ள குறைபாடு தான் காரணம் என்பதும் தெளிவாகிறது.

சாஸ்திரங்கள் உருவாக்கும் என்றுமே பொய்யாகாது நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் ஏற்படவில்லை என்றால் நம்முடைய சிரத்தை பக்தி அதிகப்படுத்தி நம் காரியங்களை செய்ய வேண்டுமே தவிர சாதனங்களையோ குரு பகவானையோ குற்றம் கூறக் கூடாது என்பதே இதன் மூலம் தெளிவாகும். என்று ஸ்ரீசிருங்கேரி மகாசன்னிதானம் ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் அருளூரை வழங்குகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version