
‘விசாகன்’ எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே ‘விசாகம்’ என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக் கருதப்படுகின்றது. விசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒரு நுழை வாயிலைப் போலத் தெரிகின்றது. ‘வைகாசி’யில் பதினான்காம் நாள் அன்று தோன்றும் அந்த நட்சத்திரத்தன்று சூரியன் பூமத்திய ரேகையைக் கடப்பதினால் அந்த மாதம் முழுவதும் அதிக வெட்பமாக உள்ளது.
வைகாசி விசாக தினம் ‘சைவ’, ‘வைஷ்ணவ’, மற்றும் புத்த மதத்தினருக்கும் முக்கியமானது. சைவர்களைப் பொறுத்தவரை ‘வைகாசி விசாகம்’ என்பது ‘முருகன் அவதரித்த தினம்’. முருகன் பிறப்பை ஷண்முக அவதாரம் என்கின்றனர். ‘சூரபத்மன்’, ‘சிங்கமுகன்’ போன்றவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, ‘சூரபத்மன்’, ‘சிங்கமுகன்’ மற்றும் ‘தாரகன்’ என்ற மூன்று அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலை நாட்ட முருகன் அவதரித்த தினம் அது. அந்த மூன்று அரக்கர்களும் பல்வேறு வரன்களைப் பெற்றிருந்து பலம் பெற்று இருந்ததினால் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். அதனால் தேவர்கள் சிவபெருமானை வேண்டி துதித்து வேண்ட சிவபெருமான் ஆறுமுகனைப் படைத்தார்.
‘குமாரகுருபரர்’ கூறியதைக் கேளுங்கள்:
ஐந்து முகத்தோடோடு முகமும்
தந்து திருமுகங்கள் ஆறாக்கி
திருமூலர் ஆயிரம் ஆண்டுகள் முன் எழுதிய தன்னுடைய திருமந்திரத்தில் அந்த செய்தியை இப்படியாக எழுதினார்:
எம்பிரான் முகமைந்தோடு மருயா
எமே பிறனுக் கதோமுகமருல
தன்னுடைய நெற்றிக் கண்ணில் இருந்து சிவபெருமான் ஆறு நெருப்புத் துளிகளை வெளியேற்ற, அது ஜொலித்தவாறு உலகில் வெளி வந்தது. அந்த பொறிகளை ‘வாயு’வும் ‘அக்னி’யும் கொண்டு போய் ‘கங்கை’யில் தள்ள, அது அவற்றை ‘சரவணப் பொய்கை’யில் தாமரை மலர்களும் கோரைப் புற்களும் இருந்த இடத்தில் வெளித் தள்ளியது. தாமரையை நல்ல இதயம் போலவும் நாணல் புதரை உடலின் நரம்புகள் போலவும் தத்துவார்த்தமாகக் கருத வேண்டும். அந்த நதி தெய்வீக உருவமாக இருந்ததினால் ‘தாமரை’யும் மற்றும் ‘நாணல் புதர்’ என அனைத்தும் ஒன்றுடன் ஒண்றிணைந்து உள்ள தத்துவம் விளங்கும்.
ஒருவனின் ஆறு குணங்களான உடல், மூச்சு, மனம், உணர்வு, விவேகம் மற்றும் அகம்பாவங்களைக் குறிப்பவையே முருகனின் ஆறு முகங்கள்.

ஏரியில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளா மாறி விட, அவற்றை ஆறு கிருத்திகைகள் எடுத்து வளர்த்தன. அந்த ஆறு குழந்தைகளையும் சக்தி தேவி எடுத்து அணைக்க, அந்த ஆறு குழந்தைகளும் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தைகயாக மாறின. அதுவே வைகாசி மாத பூர்ணிமாவில் தெய்வீகம் பொருந்திய ஷண்முக அவதாரம் எனக் கூறப்பட்டது.
‘காசியப்ப சிவாச்சாரியார்’ எனும் துறவி அது குறித்துக் கூறினார் ” உலகத்திற்கு விமோசனம் தருவதெற்கென்று முருகன் ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்டவராகவும், ஆரம்பம் அற்றவராகவும், உருவம் இல்லாத உருவத்துடனும் ஒளி வெள்ளம் போன்ற பிரும்மனாக அவதரித்தார்.”
அருவமும் உருவுமாகி அனாதியாய் பலவாய் ஒன்றை
பிரம்மமாய் நின்ற ஜோதி பிளம்பதோர் மேனியாக
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டு கொண்டே
ஒரு திருமுருகன் வந்திங்கு உதித்தனன் உலகம் உய்ய.
மனதாலும், எண்ணங்களினாலும் விவரிக்க முடியாத, ஏன் வேதங்களினாலும் கூட விவரிக்க இயலாத எங்கும் நிறைந்துள்ள சிவம் ஆறு குழந்தைகளாக எழுந்து ஆறு தாமரை இலைகளில் சரவணப் பொய்கையில் மலர்ந்தது என்று கூறினார். முருகனை ‘ஷண்முகன்’, ‘கார்த்திகேயன்’, ‘குஹன்’, ‘சரவணப்பன்’ மற்றும் ‘ஆறுமுகன்’ என்றப பெயர்களில் அழைக்கின்றனர். அவர் இயற்கையிலேயே அழகானவர் என்றும், சுப்ரமணியனாக இருப்பவர் என்றும் கூறுவார்கள்.
அவர் சுப்ரமணியனாக அதாவது ‘சு–ப்ரமண்யா‘ அதாவது எதில் இருந்து அனைத்தும் வெளிவந்து முடிவில் அடங்குமோ அந்த பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பவர், எங்கும் நிறைந்து இருப்பவர், மயில் மீது அமர்ந்து இருக்கும் சேனாதிபதி, கையில் ஒரு வேலினை வைத்திருந்தபடி தேவயானை மற்றும் வள்ளியுடன் தோன்றுபவர், அதர்மத்தை நிலை நிறுத்த ஷண்முகனாக வந்தார் என்று கூற வேண்டும்.
அவர் கார்த்திகை பெண்களினால் வளர்ந்ததால் கார்த்திகேயனாகவும், ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகனாகவும், சரவணை பொய்கையில் இருந்து வந்ததினால் சரவணபவனாகவும், ஆறுமுகங்களைக் கொண்டவராக இருந்ததினால் ஆறுமுகனாகவும் ஆனார்.

முருகனை சிவப்பானவர் என்ற அர்த்தத்தில் சீயோன் என கூறினாலும் தத்துவ நீதியில் அவர் நீல நிறமானவர் என்றே கூறப்பட்டு உள்ளது. சில நேரங்களில் அவர் இரண்டு மனைவிகளான வள்ளி மற்றும் தெய்வயானை மயிலின் பக்கத்தில் நின்றிருக்க, மயில் தன் அலகில் ஒரு பாம்பை கவ்விக் கொண்டு இருப்பது போன்ற காட்சி சிலவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் உள்ள அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ஆகாயம், மற்றும் பூமியைப் போல எல்லையற்ற நிலையைக் குறிப்பதே நீலநிறம்.
அனைவரின் இருதயக் குகைகளிலும் வசிப்பவன் குகன் என்ற உண்மையை பிரதிபலிக்கும் தன்மையை குறிக்கும் நிலையை காட்ட அவரவர்களின் உள்ளத்தில் உள்ள ஐம்புலன்களுடன் கூடிய ஆறு (ஷண்) முகமாக காட்சி தருகிறார்.
மயில் ‘அழகையும் செருக்கையும்’ குறிக்கின்றது. பாம்பு ‘தான்’ எனும் அகம்பாவத்தை குறிக்கும். ஓவ் ஒரு மனிதனும் உலகத்தில் உள்ள சிற்றின்ப ஆசைகளைத் தேடி ஓடுகின்றனர். ‘தான்’ என்ற அகம்பாவத்தின் காரணம் ‘அறியாமை’ என்கின்ற ‘அவைத்தியா’. அதை அடக்கி வெற்றி கொண்டு உண்மையைத் தேடிப் போக வேண்டும். அந்த தத்துவத்தைத்தான் பாம்பை தன் அலகில் கௌவிக் கொண்டு உள்ள மயில் உருவம் எடுத்துக் காட்டுகின்றது. தீய எண்ணங்களையும், இயலாமையையும் அழித்து விடுவது வேல் என்பதினால் அது விவேகத்தைக் குறிக்கும். விடா முயற்சி, இச்சா சக்தி மற்றும் தூய்மையான அன்பை எடுத்துக் காட்டும் விதமாக வள்ளி காட்சி தர , இறவாமை, கிரியா சக்தி மற்றும் செயல் திறமையையும் வெளிப்படுத்துபவளாக தேவயானை இருக்கின்றாள். ஆக அந்த மூன்று சக்திகளும் ஒண்றிணைந்து அகம்பாவத்தை அழிக்கின்றன

பழனியில் வைகாசி விசாகத் தேர் திருவிழா
அசுரர்களினால் தோன்றிய அதர்மத்தை அழிக்கவும், அந்த குணங்களைக் கொண்ட அசுரர்களை அழிக்கவும் பிறந்த முருகனுடைய நிலையே எடுத்துக் காட்டுவதே கந்தர் சஷ்டி விரதம். தர்மம் அதர்மத்தை வென்றது போல, உண்மை பொய்யை அழித்தது போன்றது ஷண்முகனின் அவதாரம். அதர்மங்களை அழிக்க முயல்பவர்கள் முருகனுடைய உண்மையான பக்தர்கள். அவர்கள் ஷண்முக அம்சத்தைக் கொண்டவர்கள்.
அதனால்தான் என்றும் இளமையானவர், அழகானவர் எனப்படும் முருகன் அந்த செயலை செய்து முடிக்க விசேஷ தினமான வைசாகி விசாகத்தில் அவதரித்தார். அவர் ஒவ்ஒரு பக்தருடைய மனதிலும் நிலையாக இருந்து கொண்டே இருக்கிறார். அதனால்தான் அருணகிரிநாதர் கூறினார்:- இந்த உண்மைகளை எல்லாம் மனதில் ஏந்திக் கொண்டு ஆத்ம பலம் பெற்றிட ஒவ்ஒருவரும் குறைந்தது அரை நிமிடமாவது அனுதினமும் அவரை தியானித்து வந்தால் நிச்சயமாக அவர் அருளைப் பெற முடியும்.’
ஒவ்வொரு வருடமும் வைகாசி பௌர்ணமியில் சந்திரன் மேகத்தில் அழகாக உலா வருகின்றது. அந்த நன்நாளில் நம்மால் முடிந்த அளவு அனைவரிடமும் அன்பு செலுத்தி முருகனின் அருளைப் பெறுவோம்.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் ஆலயம், கந்த கோட்டம் முருகன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு சாப்பிடலாம். மற்ற இரண்டு நேரங்களில் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம்.
எதிரிகளால் ஏற்படும் ஆபத்துக்கள் நீங்கும். கந்த சஷ்டி கவசம் விசாகம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் முருகப்பெருமான் படத்தின் முன்பு ஐந்து முக விளக்கேற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை பூக்கள், பழங்களை சமர்பித்து கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தையும் வைத்து கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். திருப்புகழை படிக்க வேண்டும். ஆறெழுத்து மந்திரங்களான ஓம் சரவணபவா என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும்

வைகாசி விசாகம் நாளில் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும் பச்சரிசி மாவில் அபிஷேகம் செய்தால் பட்ட கடன்கள் தீரும் நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் நடைபெறும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் காரிய வெற்றி கிடைக்கும். சந்தன அபிஷேகம் செய்தால் சரும நோய்கள் நீங்கும். பன்னீர் அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் பார் போற்றும் செல்வம் சேரும்.
தம்பதி சமேதராக விசாகம் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பிள்ளை பாக்கியம் தேடி வரும். ஒருவருக்கு தீராத மன துயரத்தை தருவது கடன், நோய், எதிர்கள் பிரச்சினைதான். இந்த மூன்றும் இருந்தால் வாழ்நாளிலேயே சாகும் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும் தீராத மன உளைச்சலை தரும். வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும், எதிரிகள் தொல்லை அகலும், கடன் பிரச்சினைகள் தீரும்.