spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்உன்னை அந்த இறைவன் என்றுமே கைவிடுவதில்லை: ஆச்சார்யாள் அருளமுதம்!

உன்னை அந்த இறைவன் என்றுமே கைவிடுவதில்லை: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -
abinav vidhya theerthar

ஹிரண்யகசிபு என்ற அரக்கன் அவனது மகன் பிரகலாதன். இறைவனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டு இருந்தால் இதை விரும்பாத ஹிரண்யகசிபு பக்தியை கைவிட்டால் பலவித இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தினார்.

தந்தையின் மிரட்டலுக்கு சிறிதும் பயப்படாத பிரகலாதன் இறைவனின் மேல் தான் வைத்திருந்த பூரண அன்பையும் விசுவாசத்தையும் மேலும் தொடர்ந்தான். இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு அவனது உயிரைப் பறிக்க முயன்றான்.

ஆனால் இறைவனின் தலையீட்டால் அம்முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. ஆத்திரமடைந்த கசிபு தன் மகனைப் பார்த்து இறைவன் சர்வ வல்லவர் என்று சொல்லித் திரிகிறாய் ஜம்பம் அடித்துக் கொள்ளும் அந்த இறைவன் எங்கே இருக்கிறான் என்று கர்ஜனையுடன் கேட்டான் அவர் எங்கும் இருக்கிறார் என்று அமைதியுடன் பதிலளித்தான் பிரகலாதன்.

narsimar

இந்த தூணில் உன்னுடைய இறைவன் இருக்கிறானா? என்று அருகிலிருந்த தூணை காட்டினான் இரணியகசிபு. இருக்கிறார் என்று பதிலளித்தான் பிரகலாதன். இருப்பது உண்மையானால் வெளியே வந்து உன்னைக் காப்பாற்றிகிறானா என்று பார்த்து விடுகிறேன் என்று சொல்லி தூணை பிளந்தான். அட்டகாச சிரிப்புடன் தூண் இரண்டாகப் பிளந்து அதனுள் இருந்த நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டார்.

நரசிம்மர் கர்வம் கொண்ட அந்த அரக்கனைக் கொன்று பிரகலாதனைக் காப்பாற்றினார். பக்தர்களின் நலனில் மிகவும் அக்கறையுடன் இருப்பவர் தம்மை விரும்புவர்களுக்கு உதவிபுரிய அவர் எதையும் செய்ய தயாராக இருக்கிறார். இளம் பக்தனான பிரகலாதனின் வாக்கை நிரூபிப்பதற்காக அன்றோ இறைவன் நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார்

ஆதிசங்கரர் சிவானந்த லஹரியில் பக்தியின் நிலைகளைப் பற்றி உதாரணங்களோடு அழகாக விவரிக்கிறார். பக்தன் பிரயத்தனப்பட்டு தன் மனதை இறைவன் பக்கம் திருப்பி அவருடைய பாதங்களில் வைக்கிறான்.

narasimmar-1

ஒரு பக்தன் அம்பிகை இடத்தில் பவானித் தாயே தங்களின் கருணையான கடைக்கண் பார்வையை காட்டியருள வேண்டும் என்று பிரார்த்திக்க நினைத்தார்.

அம்பிகையிடம் கூறுவதற்காக பவானித்வம் என்ற சொற்களைப் பிரித்து பிரார்த்தனை ஆரம்பித்தார் பக்தனுக்கு தம் அருளே வழங்கிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. த்வம் என்றால் வடமொழியில் நீ என்று பொருள் பக்தனின் பிரார்த்தனை முடிந்து விட்டது என்று நினைத்து அம்பிகை ஆவல் மிகுதியால் அவர்களிடையே இருந்த இடைவெளியை கவனிக்காமல் பவானித்வம் என்று அதைப் புரிந்துகொண்டால் பவானித்வம் என்றால் பவானி அம்பிகையின் இயற்கை நிலையில் தான் கேட்கிறான் என்று எண்ணி அவனுக்கு அம்பிகை தமது நிலையை அருளினாள்

பக்தனின் பிரார்த்தனையை இவ்வளவு துரிதமாக நிறைவேற்றுவார் என்று ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe