― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்குரு கடிந்து கொள்வதும் கண்டிப்பதும் ஏன்?ஆச்சார்யாள் அருளமுதம்!

குரு கடிந்து கொள்வதும் கண்டிப்பதும் ஏன்?ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -

தேவதத்தன் என்னும் சிறுவன் மிக்க புலமை வாய்ந்த ஒரு பெரும் துறவியின் ஆசிரமத்தில் தங்கி வேதங்களையும் சாஸ்திரங்களையும் அத்யயனம் செய்து கொண்டு வந்தான் அவன் சிறந்த அறிவாளியாகவும் திறமைசாலியாகவும் மேலும் நான்கு பிரம்மச்சாரிகள் அவனுடன் சேர்ந்து படித்து வந்தார்கள் குரு மிகவும் கண்டிப்பாக இருந்தார்.

பிரம்மச்சாரிகள் தினமும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எல்லா மாணவர்களும் தவறாமல் அனுசரிக்க வேண்டும் என்று குரு மிகவும் வற்புறுத்துவார்.அதனால் மாணவர்களுக்கு குருவின் இடத்தில் மரியாதையோடு பயமும் இருந்தது. ஒரு நாள் வகுப்பு ஆரம்பித்த உடனேயே குரு ஒரு மாணவனிடம் முந்தின நாள் நடத்தின படத்திலிருந்து கேள்வியைக் கேட்டார். சுமாரான மாணவன் இருந்தாலும் கேட்கப்பட்ட கேள்வி சுலபமாக இருந்ததால் சரியான பதிலை சொல்லி விட்டான். சரி என்று தலையசைத்தார் குரு.

குரு மீண்டும் முந்தையப் பாடத்திலிருந்து மிகுந்த கடினமான கேள்வியை கேட்டார் அம்மாணவன் சந்தேகத்துடன் யோசித்துவிட்டு முற்றிலும் தவறான பதிலை கூறினான்.அவர் அதற்கு சரியான பதிலை கூறி அப்படியே திரும்பி சொல்லுமாறு கூறி அவன் பதில் கூறியதும் நாளையிலிருந்து நீ இன்னும் நன்றாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். சொல்வது ஏதாவது உனக்கு சரியாக புரியவில்லை என்றால் என்னிடம் தைரியமாக கேள் உனக்கு மீண்டும் சொல்லித் தருகிறேன் என்று சொன்னார்.

தேவதத்தனை நோக்கி ஒரு மாதத்திற்கு முன்பு நடத்திய பாடத்திலிருந்து கடினமான கேள்வியைக கேட்டார். கேள்வியை சிந்தித்து பார்த்து விட்டு பதிலை சொல்ல தொடங்கி சரியாக சொல்லிக் கொண்டு வந்த போதிலும் குறிப்பிட்ட பாதிக்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் நிறுத்தினான்.

சிறிதுநேரம் பொறுத்திருந்து பார்த்த குரு முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு நீ சொல்வது எனக்கு திருப்திகரமாக இல்லை. நீ இங்கே படிக்க வந்து இருக்கிறாயா இல்லை நேரத்தைக் கழிப்பதற்காகவா இந்த வகுப்பு முடிந்ததும் சரியான பதிலை சொல்லும் வரையில் என் முகத்தில் விழிக்காதே என்று கோபத்தில் கூச்சலிட்டார்.

நேற்று நடத்திய பாடத்திலிருந்து கேட்ட சுலபமான கேள்விக்கு சினேகிதன் சரியான பதிலை கூறவில்லை. ஆனால் குரு அவனிடம் மென்மையாக நடந்து கொண்டார் மிகவும் கடினமான கேள்விக்கு நான் பாதிக்குமேல் சரியான பதிலைக் கூறி விட்டேன் இருந்தாலும் குருநாதர் என்னை கடுமையாக கோபித்து கொண்டு விட்டார்.

இப்படிப்பட்ட சொற்களை இனிமேல் நான் கேட்காமல் இருக்க வேண்டுமானால் எனது பாடத்தை இன்னும் நன்றாக கவனித்து படிக்க வேண்டும் என்று தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான்.

வகுப்பு முடிந்ததும் மற்ற மாணவர்களைப் போல் தேவதத்தன் உடனே எழுந்து வெளியே போகாமல் அதே அறையில் உட்கார்ந்து கொண்டு தன் பாதங்களை ஊன்றி படிக்கத் தொடங்கினான். சில மணி நேரம் கழித்து அவன் குருவைப் பார்க்க சென்றான் குரு சரியான பதிலை சொல்லும் வரையில் என்னைப் பார்க்க கூடாது என்று தான் சொன்னதை மறந்து விட்டாயா? இப்பொழுது உன்னால் சரியான பதிலை சொல்ல முடியுமா என்று கேட்டார் .

சொல்ல முடியும் என்று கூறிவிட்டு தேவதத்தன் முழுவதும் தவறு இன்றி சொல்லி முடித்தான் அவனுடைய பதிலைக் கேட்டு குரு சரி என்று சொல்லாமல் தவறும் என்று சொல்லாமல் மேலும் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் கூறிக் கொண்டே வந்தான். குரு லேசாக தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பின்னர் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை சொல்லாமல் இருந்ததே இல்லை மதிய வேளையில் குருவின் குடிலில் தேவதத்தன் குருவிற்கு விசிறியால் விசிறிக் கொண்டிருந்தான் அப்பொழுது குருவிடம் ஓடி வந்த ஒரு பிரம்மச்சாரி புகழ்பெற்ற பெரிய வித்வானாக காட்சியளிக்கும் ஒருவர் தங்கள் ஆசிரமத்திற்கு வந்து இருப்பதாக தெரிவித்தான்

வித்வானுக்கு தகுந்த மரியாதைகள் செய்து அவரை தன் குடிலுக்கு அழைத்து வருமாறு குரு அவனை பணிந்தார். அந்த பையனும் அவ்வாறே நடந்துகொண்டான்

பிறகு அங்கே அந்த பண்டிதரும் குருவும் தங்கள் குசலங்களை விசாரித்து கொண்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதன்பின் வித்வான் தான் ஒரு சாஸ்திர விஷயத்தைப் பற்றி கலந்துரையாட வந்திருப்பதாகக் கூறினார். குறிப்பிட்ட சில சாஸ்திர கருத்துக்களை அவர் விவரித்துவிட்டு தானே ஒரு கேள்வியை கடைசியில் கேட்டுக்கொண்டார்.‌

எதிர்பாராதவிதமாக குருதேவர் இவன் பக்கம் திருப்பி நீ இந்த கேள்விகளுக்கு பதில் சொல் என்று கூறவே அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். அக்கேள்வி குருவிடம் கேட்கப்பட்ட கேள்வியாக இருப்பதால் அவன் அதற்கு பதில் சொல்வது சரியாக இருக்குமா என்று சிறிது நேரம் யோசித்தான்.

இருந்தபோதிலும் குருவின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியவனாய் கேள்விக்கு தகுந்த பதிலை எடுத்துக்கூற தொடங்கினான்.

வித்வான் மற்றொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை சிறிது நேரம் விவாதித்து விட்டு அதிலும் ஒரு கேள்வியைக் கேட்டார். மீண்டும் தேவதத்தன் சரியாக பதில் சொல்லவே சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களே ஆழ்ந்த சாஸ்திர விவாதம் நடைபெற தொடங்கியது.

ஒரு மணி நேர உரையாடலுக்குப் பின் மிகவும் சிக்கலான கேள்வியை வித்வான் கேட்டார் ஒரு விஷயத்தை ஒட்டி நடத்தையும் தான் சொந்தமாக படித்ததையும் அவசரமாக நினைவுக்கு கொண்டுவர முயற்சித்தான். ஆனால் கேள்விக்கான பதிலை அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியாததாக இருந்ததால் மௌனமாக இருந்து விட்டான் என்னை கவனித்துக் கொண்டிருந்த குரு கேள்விக்கான சரியான பதிலை எடுத்துரைத்தார். மிகவும் திருப்திகரமாக இருந்தது.

பிறகு குரு தேவத்தனை நோக்கி வெட்கக்கேடு புத்தகத்தில் இருப்பதை தாண்டி உன்னால் சிறிதளவு கூட யோசித்து பார்க்க முடியவில்லையா? உனக்கு எல்லாவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாராயா புத்தகத்தில் உள்ளதையும் நான் சொல்லி தந்தையும் மட்டும்தான் அப்படியே திரும்ப சொல்ல முடியும் என்றால் பிறகு உனக்கும் கிளிக்கும் என்ன வித்தியாசம் அதற்கு ஒரு கிளியே உனக்கு பதில் இங்கே வைத்துக்கொண்டு நான் பாடம் நடத்தலாம் என்று சொல்லி கோபித்துக்கொண்டார்.

தேவதத்தன் கடிந்து கொள்ளும்போது அதை பார்த்து வந்திருந்தவர் சிரித்தார் இன்னும் அதிகமாக அவமானத்துக்கு உள்ளான தேவதத்தன் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு யோசிக்கலானான்.பிரபல வித்வானின் முன்னிலையில் ஏன் என்குரு என்னை இப்படி அவமதிக்கிறார்கள். இப்படி ஒரு நீண்ட விவாதம் நடக்க போகிறது என்று முன்கூட்டியே நான் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும் விவாதத்தை பெரும்பாலும் நன்றாகவே தான் செய்தேன் என் சக மாணவர்களை காட்டிலும் நான் எவ்வளவு நன்றாக பாடங்களை புரிந்து கொள்கிறேன். இப்படி இருந்தும் என்னை பற்றி குரு மிகக் குறைவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை அவருக்கு என்னை கண்டால் பிடிக்காமல் இருக்கலாம். ஒரு சிறிதும் மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்க விரும்பாத அவன் எவ்வளவு வேண்டுமானாலும் நான் என்னை வருத்திக் கொண்டு படிக்கத் தயார்.இந்த வசை சொற்களையும் அவமானங்களையும் ஒரு பொருட்டாக நான் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாத்திரங்களை மேலும் தீவிரமாக படித்து என் குருவை என்னை மெச்சும்படி புலமை அடையாமல் ஓயமாட்டேன் என்று பரதிக்ஞை செய்தான்.

அப்பொழுது முதல் தேவதத்தன் தனக்குச் சொல்லிக் கொடுத்ததை மட்டும் படிக்காமல் கருத்துக்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆலோசித்து பார்க்கத் தொடங்கினான் புத்தகத்தில் சொல்லப்படாத சில ஆட்சேபனைகளை இவனாகவே கற்பித்துக்கொண்டு அவற்றிற்குத் தக்க உறுதியான பதில்களை யோசித்தான்.

ஒரு நாள் சாஸ்திர வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது தேவதத்தனுக்கு மயக்கமும் வயிறு கமட்டலும் ஏற்பட்டது பாடங்களை இழந்துவிடக் கூடாது என்று எண்ணி அவன் தன் உபாதைகளை பொறுத்துக் கொண்டான்

அவன் கஷ்டப்படுவதை குரு கவனித்துவிட்டு மிக்க பரிவோடு உனக்கு உடம்பு சரியில்லை இதற்குமேல் உன்னை வருத்திக் கொள்ளாதே உன் குடிலுக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள் என்று கூறினார். அவர் குரலில் தெரிந்த அபரிதமான மென்மை கண்டு ஆச்சரியப்பட்டான் தேவதத்தன்.

சுதாரித்துக் கொண்டு மெதுவாக எழுந்த தேவதத்தன் மயக்கத்தினால் நிலைகுலைந்து கீழே விழப்போனான் அதற்குள் கையை நீட்டி அவனை கீழே விழாமல் தாங்கி கொண்டார் குரு. பிறகு அவனை அப்படியே தன் இரு கைகளாலும் தூக்கி கொண்டு சென்று அவனுடைய குடிலில் இருந்த வைக்கோல் படுக்கையில் அவனை படுக்க வைத்தார். உடனே ஆயுர்வேத கஷாயத்தை தயார் செய்து கொடுத்தார்.அப்பொழுது அங்கு வந்த மற்ற பிரம்மச்சாரிகளிடம் குரு அன்றைய வகுப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

பிரம்மச்சாரி ஒருவனை குரு அழைத்து தேவதத்தனை கவனித்துக் கொள்ளுமாறு கூறி விட்டு மற்றொரு சிஷ்யனுடன் ஆசிரமத்தை விட்டு கிளம்பிச் சென்றார். சில மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். குருவின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு அவற்றில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதை கண்டு திடுக்கிட்ட தேவதத்தன் என்ன நடந்தது என்று குருவிடம் கேட்டான். அதற்கு குரு என்னைப் பற்றி இப்பொழுது பேச வேண்டாம் என்று கூறிவிட்டுத் தான் கொண்டு வந்திருந்த மூலிகைகளை வைத்து விசேஷமான கஷாயத்தை தயாரித்து அதில் ஒரு சிறிய அளவை குடிக்கச்செய்தார். அன்று இரவு முழுவதும் உறங்காமல் தேவதத்தன் அருகிலேயே அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மணி நேரமும் சிறிது சிறிதாக கஷாயத்தை கொடுத்துக்கொண்டே இருந்தார் தன்மேல் குரு வைத்திருந்த அன்பை கண்டு தேவதத்தனின் மனம் உருகியது‌

மறுநாள் காலையில் அவனுடைய உடல் நிலை நன்கு தெளிந்தது அவன் குளிக்கச் செல்லும் போது அவனுடைய சக மாணவன் அவனுடைய அறைக்கு வந்தான். அவன் அவனிடம் குருவின் உடம்பில் ஏற்பட்ட காயங்களை பற்றி கேட்டாய் அல்லவா ஆனால் பதில் ஏதும் உனக்கு அவர் கூறவில்லை என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் என்று கூறினான்‌

குரு என்னை அழைத்துக்கொண்டு ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றார். காட்டுப் பகுதிக்குள் சென்ற அவர் அங்கிருந்த சில செய்திகளை சேகரித்துக் கொண்டு அவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு நான் திரும்பி வரும் வரை என்ற மரத்தின் மீதேறி நீ பாதுகாப்போடு இரு ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீ எனக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டாம் அதற்குள் நான் திரும்பி வரவில்லை என்றால் நீ இந்த மூலிகைகளை ஆசிரமத்திற்கு கொண்டு சென்று கஷாயத்தை தயாரித்து உனக்கு கொடு என்று சொன்னார். கஷாயத்தை தயாரிக்கும் செயல்முறையும் விரிவாக எனக்கு அவர் விளக்கினார்‌

அவர் மட்டும் தனியாக காட்டில் உட்பகுதிக்கு நடக்கத் தொடங்கினார். நான் அவரை ஒரு மரத்தின் மீது ஏறிப் பார்த்தேன். அங்கிருந்து வேகமாக நடந்து செல்வது என்னால் பார்க்க முடிந்தது. முட்கள் நிறைந்த அடர்ந்த புதர் ஒன்று அவருடைய பாதையின் குறுக்கே வந்தது அதை கடந்து செல்வதற்கு புதரின் உள்ளே குனிந்து செல்ல வேண்டி இருந்தது அப்பொழுது அவர் உடம்பில் ஏற்பட்ட காயங்களில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது ஆனால் அவர் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை எழுந்து நின்று மீண்டும் நடக்க ஆரம்பித்தார். அங்கிருந்த குகையை நோக்கி அவர் நடக்கிறார் என்பதை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது குகையின் வாசலில் ஒரு பெண் புலி தனது குட்டிகளுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நான் பயந்து போனேன் அப்போது புலிக் குட்டிகளுக்கு பால் கொடுத்துடக் கொண்டிருந்தது சாதாரணமாக புலி மனிதர்களை ஒன்றும் செய்யாது என்றும் அப்படி ஒருவேளை நாம் காட்டில் நடந்து செல்கையில் அதை சந்திக்க நேர்ந்தால் அது நம்மை கடந்து செல்லும் வரையில் நாம் ஓடாமல் ஒரே இடத்தில் சிலைபோல் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றும் குரு நமக்குச் சொல்லிக் கொடுத்தது என் நினைவிற்கு வந்தது.

குட்டிகளுக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண் புலியிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்றும் அவர் சொல்லியிருந்தார் ஏனெனில் நம்மிடம் இருந்து ஏதாவது ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று பயதிலேயே அது நம்மை கடித்து குதறிவிடும் என்னால் ஒன்றும் செய்யமுடியாமல் குரு குகையை நோக்கி நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தேன்‌ அவரை எச்சரிக்கை படுத்துவதற்காக நான் கூச்சல் போடலாம் என்று நினைத்தேன் ஆனால் குரு அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார் எனக் கருதி சும்மா இருந்து விட்டேன். ஆகையால் பயந்துகொண்டே குரு சொன்ன இடத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அவருடைய வருகையை தெரிந்து கொண்ட புலி உரும ஆரம்பித்தது அவர் அதை சட்டை செய்யவே இல்லை தமது நடையின் வேகத்தை குறைக்கவில்லை அப்பெண் புலி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு குட்டிகளுக்கு பால் கொடுப்பதை தொடர்ந்தது குகையின் வாயிலை அடைந்த குரு சில மூலிகைகளை அவசரமாக சேகரிக்க ஆரம்பித்தார் மிக அபூர்வமான மருத்துவ சக்தி கொண்ட மூலிகைகள் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் கிடைக்கும் என நான் உணர்ந்து கொண்டேன். மூலிகைகளை எடுத்துக் கொண்டு அவர் திரும்பி வர தொடங்கினார். மீண்டும் வழியில் அதே முட்புதருக்குள் நுழைந்து வருகையில் அவர் மேலும் அடிபட்டு கொண்டார். நான் இருக்கும் வரை அவர் வந்ததும் நான் மரத்திலிருந்து கீழே இறங்கினேன். அவருடைய ரணங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் ஒன்றுமில்லை வா போகலாம் என்று சொல்லி ஆசிரமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அதன்பிறகு நான் காத்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து சேகரித்த மூலிகையையும் குகையில் இருந்து சேகரித்து வந்த மூலிகைகளையும் சேர்த்து அவரை மருந்து தயார் செய்து உனக்கு கொடுத்தார்‌ உனக்காக அவர் தம் உயிரையே பணயம் வைத்து அந்த மூலிகைகளை கொண்டு வந்தார்.

இதைக் கேட்டதும் கண்களில் நீர் மல்கியது நான் பெரிய தவறை செய்துவிட்டேன் என்னை அவருக்கு பிடிக்கவில்லை என நினைத்துக்கொண்டேன் உண்மையிலேயே அவர் என்னை மிகவும் நேசிக்கிறார் என்று உணர்ச்சிவசப்பட்டான் தேவதத்தன் தன் குருவின் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது இரண்டு பேர் குருவைப் பார்க்க வந்திருப்பதாக பிரம்மச்சாரி ஓடிவந்து கூறினான் அவர்களை தம்மிடம் அழைத்துவருமாறு அந்த பிரம்மச்சாரியிடம் சொன்னார் குரு. அப்பொழுது தேவதத்தன் குருவின் அறையை விட்டு வெளியே செல்ல இருந்தான் ஆனால் குரு அவனை தடுத்து தன் காரியத்தை தொடரச் சொன்னார் வந்தவர்களில் ஒருவர் பெரிய பண்டிதர் என்று பார்த்ததுமே தெரிந்துகொள்ள முடிந்தது மற்றொருவர் அமைதியாக பணிவுடன் இருந்ததால் அவர் பண்டிதரின் உதவியாளர் போல் காணப்பட்டார் குரு அவர்களை ஆசனத்தில் அமரச் சொன்னார். பொதுவான சில விஷயங்களை அவர்கள் சில நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் விவாதத்திற்கு வந்திருப்பதாக பண்டிதர் தெரிவித்தார்.

விவாதத்தையும் தொடங்கிவைத்தார். தேவதத்தனைக் கூப்பிட்டு விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார் அவனும் அவ்வாறே செய்தான் மிக விரைவிலேயே விவாதம் சூடு பிடிக்க ஆரம்பித்தது ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் பதில்களும் சுவாரஸ்யமாக இருந்தன. இப்படியே விவாதம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது வந்திருந்த பண்டிதரால் தேவதத்தனை சிறிதளவும் வெற்றி பெற முடியவில்லை. பிறகு பண்டிதர் தமது கருத்துக்கு அனுகூலமாக உடைக்கவே முடியாதது போல் தோன்றிய ஒரு வாதத்தை வைத்தார். இருந்தாலும் அந்த வாதத்தை தகர்த்தெறிந்தான் தேவதத்தன்.

வேறுவழியின்றி கடைசியில் மௌனம் காத்தார். இதனால் தான் இருப்பினும் அவர் சந்தோஷமாகவே காணப்பட்டார் குருதேவர் தேவதத்தறன் பக்கம் திரும்பி நீ இப்பொழுது போகலாம் என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். பண்டிதரும் அவருடைய உதவியாளரும் குருவோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு அந்நாட்டு அரசன் ஆசிரமத்திற்கு வருகை புரிந்து குருவை சந்தித்தார் குருவினுடைய அழைப்பின் பேரில் அங்கு வந்திருந்த தேவதத்தன் குருவை வணங்கி விட்டு சிறிது தூரம் தள்ளிப்போய் மிக்க மரியாதையுடன் நின்று கொண்டான். குரு அவனை உட்காரச் சொன்னார் அவன் குருவின் கட்டளைக்கு கீழ்படிந்தான். அரசன் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டு தன்னை நோக்கி மிக்க மரியாதையுடன் தலை நகரை ஒட்டியுள்ள காட்டில் நான் பெரிய ஆசிரமத்தை கட்டியிருக்கிறேன் இதை எனது சிறிய காணிக்கையாக தாங்கள் தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும் மத சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தாங்கள் எனக்கு ஆலோசகராக இருந்தால் நான் மிகவும் பெருமை கொள்பவன் ஆவேன் மேலும் அரசவைக்கு வருகை தரும் பண்டிதர்களின் புலமையை சரியானபடி தாங்கள் மதிப்பீட்டு கூறினால் அவர்களுக்கு தக்கபடி சன்மானம் செய்து கௌரவிக்க எனக்கு ஏதுவாக இருக்கும் இவ்விரு காரியங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்ட நடத்தி கொடுத்தால் நான் தங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவன் ஆயிருப்பேன் எனது வேண்டுகோளை நன்கு யோசித்துப் பார்த்துவிட்டு முடிவை கூறுங்கள். நிச்சயம் இதற்கு சம்பாதிப்பீர்கள் நான் முழுமனதோடு ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

அரசர் கூறியதைக் கேட்டு குழப்பம் அடைந்தார் என்னைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நீங்கள் எனக்கு கொடுப்பதன் நோக்கத்தை நான் அறிய விரும்புகிறேன் என்று அரசனைப் பார்த்து கேட்டான். அதற்கு அரசன் நான் உங்களைப் பற்றி நன்கு அறிவேன். உங்களைப் பற்றி நிறைய விஷயங்களை உங்கள் குரு என்னிடம் கூறியிருக்கிறார். உங்களைப் போன்ற ஒரு நல்ல சிஷ்யனை அடைந்ததில் அவர் பெருமிதத்துடன் இருக்கிறார். சந்தேகத்திற்கிடமின்றி நீங்கள் நல்ல ஒழுக்கமுள்ள திறமையான பண்டிதர் என்று அவரே ஊர்ஜிதப்படுத்தி இருக்கிறார். என்று சொன்னார் .

குருவா இப்படி சொன்னார் என்று ஆச்சரியப்பட்ட தேவதத்தன். குரு உன்னைக் கண்டு நான் மிகவும் பெருமை கொண்டிருக்கிறேன் உன்னை கோபித்துக் கொண்டிருந்தால் உன்னை பற்றி உயர்வான எண்ணம் எனக்கு இல்லை என்றும் உனக்கு பிடிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டாய் முன்பிருந்த தன் மனநிலையை மிகவும் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பதை நினைத்து அவன் வெட்கப்பட்டான் மேலும் தொடர்ந்தார் முன்பு ஒரு சமயம் வகுப்பில் நீ கடினமான கேள்வியைக் கேட்க உனக்கு ஞாபகத்தில் இருக்கலாம்

ஆனால் சரியான பதில் கூறிக் கொண்டு வந்து பாதியிலே நிறுத்தி விட்டாய் அப்பொழுது உன்னை கோபித்துக் கொண்டேன் நீ ஒரு விலைமதிப்பற்ற வைரம் என்பது அப்போதே உன்னை பற்றி தெரிந்து கொண்டு விட்டேன் இந்த வைரத்திற்கு மேலும் பட்டை தீட்டி மெருகேற்றி இதை வைத்திருப்பவர் உடைய கண்களைக் கூசும் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று உணர்ந்தேன் பிரம்மச்சாரிகள் காட்டிலும் நீ மேல்நிலையில் இருந்தாலும் உன்னை இன்னும் உயர்த்த வேண்டுமென்று உனது பாடங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

அதற்காக உன்னை மேலும் அதிகமாக முயற்சி எடுக்க செய்யவே உன்னை கோபித்துக் கொண்டு வந்தேன் என்னுடைய கடுமையான வார்த்தைகளும் நல்ல பலன் கிடைத்திருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு விரிவான விவாதம் பிரிந்தது உனக்கு நினைவிருக்கலாம் வித்வான் கேட்டது கஷ்டமான கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியாமல் போயிற்று. அந்த விவாதம் செய்த அந்த வித்துவான் என்னுடைய நன்றாகப் படித்தவர் நீ மட்டும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து இங்கே வரவழைத்தது நான்தான் மேலும் உன்னை திணறடித்த அந்த கேள்வியை கேட்க சொல்லி அவரிடம் கூறினேன் எனவே சொல்லி வைத்திருந்ததும் நான் தான் நீ அந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் விழித்த பொழுது உன்னை அன்று மிகக் கடுமையாகக் கோபித்துக் கொண்டு விட்டேன் கடுஞ் சொற்களைக் கேட்டு உன்னைக் காட்டிலும் நானே அதிக மனம் வருந்தினேன். இருந்தபோதிலும் நான் உன்னிடம் அவ்வளவு கண்டிப்பாக நடந்து கொண்டதற்கு காரணம் உன்னை தூண்டி உன்னில் ஒளிந்து கிடக்கும் திறமை முழுவதையும் வெளிக் கொணரச் செய்து உன்னை ஒரு மாபெரும் பண்டிதராக உருவாக்க வேண்டும் என நினைத்து நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீண் போகவில்லை .அதை நன்கு பதிலளித்தனர் என்பதில் பெருமகிழ்ச்சி இதுநாள் வரையில் உன்னை நான் பாராட்டாமல் இருந்தே ஏனெனில் நீ மயங்கி அதனால் படிப்பில் கவனம் குறைந்து உனக்கு அலட்சியப் போக்கு ஏற்பட்டு விடுமோ என பயந்து தான் பாராட்டுதல்களை எல்லாம் தவிர்த்து என்னுடைய பாராட்டுதல் சிஷ்யனுடைய அகந்தை எனும் நெருப்பைத் தூண்டிவிடக்கூடிய நெய் போல் இருக்கக்கூடாது இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இப்பொழுது உன்னுடைய பாடங்கள் எல்லாம் முடிவடைந்து விட்டதால் நான் மனம் திறந்து உன்னுடன் பேசலாம் என்னுடைய அத்தனை சிஷ்யர்களிலும் நீயே தலை சிறந்து விளங்குகிறாய் நீ முதன் முதலில் என்னை பார்க்க வந்த பொழுதே நீ என் உள்ளம் கவர்ந்த சிஷ்யன் ஆகிவிட்டாய் தேவதத்தன் தன் இரு கரங்களைக் குவித்து குருவந்தனம் செய்தவாறே உங்களை நான் மிகவும் தவறாக நினைத்துவிட்டேன் நான் ஒரு முழு மூடன் என்னை மன்னித்து விடுங்கள் என்று தழுதழுக்க கூறினான் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை கவலையை விடு என்று தட்டிக் கொடுத்தார் குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடந்த சம்பாஷனை கேட்டுக்கொண்டிருந்த அரசனை நோக்கி சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் வாதம் செய்ய இங்கு வந்திருந்த பண்டிதரும் உங்கள் குருவும் ஒன்றாக படித்த சக மாணவர்கள் அவர்களுடைய பரம குருவின் ஆசிரமத்தில் படித்தவர்கள் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு அந்த பண்டிதர் இந்நாள் வரையில் ஆலோசனைகளை எழுப்பி வந்தார் வழங்கி வந்தார் ஆனால் இப்பொழுது அவர் இமய மலைக்குச் செல்ல இருக்கிறார்.அன்று அவருடன் வந்திருந்த உதவியாளர் வேறு யாருமல்ல நானேதான் மாறுவேடத்தில் உங்களை பார்க்க வந்தேன் உங்களுடைய அற்புதமான வாதத் திறமையையும் உயர்ந்த பாண்டித்தியம் நேரில் கண்டு களிப்பதற்காக குரு எங்களை ஆசிரமத்திற்கு அழைத்து இருந்தார் .

அன்று நாங்கள் அடைந்த ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது உங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் உங்களிடத்தில் நான் வேண்டுகோள் வைக்கவில்லை என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று அரசன் கூறினான் குருவின் உத்தரவை பெற்றுக்கொண்டு அரசின் வேண்டுகோளுக்கு இணங்கினான்

ஒரு மகாத்மா ஒருவரை கண்டிக்கிறார் என்றால் அவரால் தன் நாவை அடக்க முடியவில்லை என்றோ அல்லது வேறு ஏதாவது தீய எண்ணத்தால் அல்லது பிறரை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஆசையினால் அல்லது இந்த நிர்பந்ததிலிருந்து ஒரு அல்ப சுகத்தை பெறலாம் என்று அல்ல. மனிதனை திருத்துவதற்கு கைதூக்கி விடவும் அவர் அவ்வாறு நடந்து கொள்கிறார் எனவே தான் குருவிடம் கடுமையான சொற்களைக் கேட்டவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு மகாத்மா செய்யும் நிந்தனை என்பது உண்மையிலேயே ஒரு மறைமுகமாய் அவருக்கு அளிக்கும் அனுகிரகம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version