― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!

விநாயகர் சதுர்த்தி: கணேசனின் வடிவங்கள்..!

- Advertisement -

பாலகணபதி வேலூர் கோட்டையில் சிற்பக்கலை செறிந்த திருக்கல்யாண மண்டபத்தில் நவநீதகிருஷ்ணன் போல் அழகிய குழந்தை வடிவத்தில் விநாயகர் விளங்குகிறார்.

பஞ்சமுக விநாயகர்

திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் சிங்க வாகனத்துடன் ஐந்து தலைகளும் ஒரே வரிசையில் கொண்ட பஞ்சமுக விநாயகர் உள்ளார்.

நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோவிலில் சிங்க வாகனத்துடன் ஐந்து தலைகளும் நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.

16 படி பஞ்சமுகர்

சேலம் கந்தாஸ்ரமம் நான்கு திசைகள் நான்கு தலைகளும் மேலே ஒரு தலையுமாக பஞ்சமுக விநாயகர் பெரிய அளவில் 16 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சிங்க வாகனத்துடன் காட்சி தருகிறார்.

முக்குருணி விநாயகர்

மதுரை திருச்செந்தூர் சிதம்பரம் குமரக்கோட்டம் முதலிய திருத்தலங்களில் முக்குறுணி விநாயகர் மிகப்பெரிய திருவுருவமாக விளங்குகிறார்.

குழல் ஊதும்வினாயகர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் விநாயகரின் அழகிய திருவுருவம் கண்ணபிரானை போல வேய்ங்குழல் ஊதும் நிலையில் அமைந்திருக்கிறது.

வீணை நாதர் விநாயகர்

தமிழ்நாட்டில் பவானி என்னும் திருநணாவில் விநாயகரின் திருவுருவம் காணப்படுகின்றது.

ஒளி தரும் விநாயகர்

காஞ்சிபுரம் ஓணகாந்தன் தளி கருவறை மண்டபத்தின் நுழைவாயிலில் சுவரில் முகப்பில் விநாயகர் திருவுருவம் உள்ளது அருகில் சென்று நம் செவியை வைத்து நிற்பது ஒருவகை ஓங்கார ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும் பல்லாண்டு காலமாக பல்லாயிரம் மக்கள் கேட்டு மகிழ்ந்து வியந்த வண்ணம் உள்ளனர்

பாசம் அங்குசம் பரமன் திருப்பாதிரிபுலியூர் திருத்தலத்தில் விநாயகர் பாசம் அங்குசத்தற்கு பதிலாக பாரி மலர்களை இரு கரங்களிலும் ஏந்தியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் விநாயகர் பாச அங்குசங்களுக்குப் பதிலாக இரு கைகளிலும் சர்ப்பங்களை ஏந்தி சர்ப கணபதி திகழ்கிறார்.

தேன் அபிஷேக விநாயகர் திருப்புறம்பயம் திருத்தலத்தில் பிரளயம் காத்த விநாயகர் உள்ளார் .இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் அபிஷேகம் கிடையாது.

இரட்டை எலி வாகனம்

சுசீந்திரம் திருக்கோயிலில் இரட்டை எலிகளை வாகனமாகக் கொண்ட நீலகண்ட விநாயகர் எனும் பெயரில் விநாயகர் காட்சி தருகிறார்.

கள்ளப் பிள்ளையார் தி

ருக்கடையூரில் உள்ள விநாயகர் திருநாமம் கள்ளப்பிள்ளையார் . சோரவாரணப் பிள்ளையார் எனவும் வழங்கப்படுவார். பாற்கடலிலிருந்து அமுத கலசத்தைக் கொண்டுவந்து மறைவிடத்தில் வைத்தவர் இவர். கள்ளத்தனம் செய்தவர் ஆகையால் திருக்கோயிலில் விநாயகருக்குரிய யதாஸ்தானத்தில் இல்லாமல் ஓரிடத்தில் மறைவாக இருந்த அருளுகிறார்.

விநாயகரின் படைக்கலன்கள்; அங்குசம் சக்தி அம்பு வில்கேடயம் நாகபாசம் சூலம் மழு கோடாரி சங்கம் குந்தாலி

சவாரி செய்யும் விநாயகர்

கர்நாடக மாநிலத்தில் மைசூருக்கு அருகில் தலக்காடு எனும் திருத்தலம் காவிரி கரை ஓரமாக இருக்கும் இத்தலத்தின் ஈசனது திருக்கோயில்கள் பல மணல் மேட்டில் மூடிக் கிடக்கின்றன இந்த மணல் மேட்டிற்கு வெளியே ஈசன் வைத்திய நாதேஸ்வரராக எழுந்தருளியிருக்கிறார். இக்கோயிலின் வெளி மண்டபத்தில் அனைவரின் கவனத்தையும் கவரும் ஒரு சிறிய அழகான விநாயகர் சிற்பம் தூணில் காட்சி தருகிறது. பாசம் அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தி இரண்டு கைகளில் இடது கை விரல்களினால் கயிற்றை பிடித்துக் கொண்டு குதிரை போன்று இருக்கும் முஷிகத்தின் மீது குதிரை சவாரி செய்வது போல அமர்ந்து அழகாக காட்சி தருகிறார்.

ஜாவாவில் விநாயகரை ஆற்றங்கரைகளில் பார்க்கலாம். கலிபோர்னியாவில் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். சாயாவில்பெருச்சாளி வாகனத்துடன் காட்சி தருகிறார். பர்மாவில் புத்த பிரானைக் காக்கும் காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். சீனாவில் நான்கு கைகளுடன் பைஜாமா உடையில் முதுகில் திண்டுடன் விளங்குகிறார். அமெரிக்க பழங்குடி மக்கள் விநாயகரை அறுவடை கால தெய்வமாக வழிபடுகிறார்கள்.

தும்பிக்கை இல்லா விநாயகர்: மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பூந்தோட்டம் அருகே கும்பகோணம் சாலையில் அரிசிலாற்றின் கரையில் அமைந்துள்ள ஊர் திலதைப்பதி தேவாரப்பாடல் பெற்ற ஊர். மக்கள் வழக்கில் செதலபதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளியிருக்கும் முத்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரே உள்ள விநாயகர் சன்னதியில் உள்ள ஆதிவிநாயகர் தரிசிக்க வேண்டிய ஒரு விநாயகர் இந்த விநாயகருக்கு தும்பிக்கை இல்லை. வலக்கால் தொங்கவிட்டு இடக்கால் மடித்து இடது கையை இடது காலின் மீது வைத்து வலது கையை சற்று சாய்த்து அபய கரமாக விளங்க அதிசயமான அழகான கோலத்தில் காட்சி தருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version