― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்பந்தத்தை துறந்த மனம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

பந்தத்தை துறந்த மனம்: ஆச்சார்யாள் அருளமுதம்!

- Advertisement -

ரிஷப மகாராஜா மூத்த மகனான பரதனுக்கு முடிசூட்டு விட்டு தன்னிடம் இருந்த அனைத்து செல்வங்களையும் துறந்துவிட்டு தவம் புரிய சென்றார்.

பரதனுக்கும் அவனுடைய மனைவி பஞ்சஜனிக்கும் ஐந்து புத்திரர்கள் பிறந்தார்கள். நல்ல பாண்டித்தியம் தர்ம நெறிகளை கடைபிடிப்பதில் உறுதியோடும் விளங்கிய பரதன் நேர்மையோடு ஆட்சி புரிந்து வந்தார். தமது பிரஜைகளை அன்புடன் நேசித்தார். மக்களும் தங்கள் பங்கிற்கு தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றி அரசரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றி வந்தார்கள்.

தர்ஷபூர்ணமாசா போன்ற பல யாகங்களை பரதன் செய்ததோடு விஷ்ணுவையும் ஆழ்ந்த பக்தியுடன் ஆராதித்து வந்தார். நீண்டகாலம் அரசாட்சி செய்த பிறகு மற்ற உடமைகளையும் இராஜ்ஜியத்தையும் தமது புத்தரர்களிடம் ஒப்படைத்துவிட்டு கந்தகி நதிக்கரையில் அமைந்திருரந்த சாலிகிராமம் என்னும் ஒரு புண்ணிய ஸ்தலத்துக்கு பரதன் வந்து சேர்ந்தார்‌

அங்கே தனிமையில் துறவியைப் போல் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் மூன்று முறை நீராடி சந்தியாவந்தனம் நாள் தவறாமல் சிரத்தையுடன் செய்து பூஜையிலும் தியானத்திலும் செலவழித்தார். ஒருநாள் நீராடி விட்டு வரும் பொழுது சந்தியாவந்தனம் முடித்து விட்டு அமைதியுடன் அமர்ந்து இருந்த பொழுது கர்ப்பம் தாங்கிய பெண் மான் தனது தாகத்தை தீர்த்துக் கொள்வதாக நதியை நோக்கி வருவதைப் பார்த்தார். அது நீரை பேராவலுடன் குடித்துக் கொண்டிருக்கையில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது பயத்தினால் அம்மான் ஒரே பாய்ச்சலில் ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்து அப்பொழுது அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டி வெளியே ஆற்றில் விழுந்தது. சோர்வின் மிகுதியாலும் அகாலத்தில் குட்டியை ஈன்றதாலும் தாய் இறந்து விட்டது. உதவிக்கு ஒருவரும் இன்றி அனாதையாக கிடந்த மானிடத்தில் பரதனுக்கு எல்லையில்லாத கருணை இருந்தது. அதனை வளர்க்க வேண்டியது தனது கடமையாகக் கொண்ட அவர் குட்டியைக் காப்பாற்றிய வளர்த்து வந்தார். மான் மேல் அளவு கடந்த பாசம் உண்டாயிற்று. அதனை மிகவும் ஜாக்கிரதையாக பேணிக் காத்தார். மான் காட்டிற்குச் செல்லும் போதெல்லாம் துஷ்ட மிருகங்கள் அதனை ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கவலைப்பட்டார். ஆசிரமம் திரும்புவதற்கு சிறிது தாமதமானாலும் அதை நினைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்து விடுவார். மேலும் ஆசிரமத்திலேயே அது சுற்றி திரிந்த கொண்டிருந்தாலும் தமது சமய வழிபாடுகள் இடையில் அடிக்கடி எழுந்து சென்று அதன் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். காலச்சக்கரம் சுழன்றது கடைசியில் அவருடைய அந்திம காலம் நெருங்கியது. தான் இறந்து போய்விட்டால் மானின் கதி என்னவாகும் என்ற கவலையே அவர் மனதை முழுவதுமாக ஆட்கொண்டது. அந்த மிருகத்தினை காப்பாற்றுவதற்கு முன்னர் அவருடைய மனம் இறைவனிடத்திலே எப்பொழுதும் ஐக்கியமாய் இருந்தது. ஆனால் அவர் அந்த மானை நினைத்துக் கொண்டிருந்து உயிரை விட்டார். மான் மீது அவரது தீவிர பற்றினால் அவர் அடுத்த பிறவியில் மானாக பிறந்தார் அவருடைய அதிர்ஷ்டம் முற்பிறவி நினைவு அவரைவிட்டு விலகவில்லை மீண்டும் சாலிகிராமத்திற்கு வந்து சேர்ந்தார். ஜென்மா முடியும் தருவாயை எதிர்நோக்கி பொறுமையோடு காத்திருந்தார். இறந்த பின் நல்ல ஆச்சாரமும் பக்தியுடைய ஒரு பிராமணரின் இரண்டாவது பத்தினிக்கு ஒரே பிள்ளையாக பிறந்தார். முன் ஜென்மங்களின் ஞாபகங்கள் அவருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் உலகத்தின் மீது ஆசை வைப்பதற்கு பரதன் மிகவும் அச்சப்பட்டார். தீவிரமான வைராக்கியம் அவருக்கு ஏற்பட்டதால் உலக பற்றுதலை முழுமையாகத் துறந்து இறைவனிடத்தில் தன் மனதை நிலைநிறுத்தி பேருண்மையை உணர்ந்து ஜீவன் முக்த நிலையை அடைந்தார்.

ஆனால் ஒன்றும் தெரியாத ஒரு மூடனை போல் வாழ்ந்து வந்தார். அவருடைய தந்தை அவருக்கு உபநயனம் செய்வித்து சாத்திர ஞானத்தையும் போதித்தார். இருந்த போதிலும் அவருடைய மனம் சாஸ்திர விஷயங்களில் பிரவேசிக்க மறுத்தது. அவர் தந்தை அவரை படிக்க வைப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. சில ஆண்டுகள் கழித்து பரதனுடைய பெற்றோர்கள் இறந்து போனார்கள். அவருடைய மாற்றான் தாயின் பிள்ளைகள் அவரை ஒரு முட்டாள் என தீர்மானித்து அவரை படிக்க வைக்கும் எண்ணத்தை கைவிட்டனர். ஆன்மாவிலேயே எப்போதும் மனம் நிலைபெற்றிருக்கும் ஒரு ஜீவன் முக்தர் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அவருடைய இடுப்பை சுற்றியிருந்த ஒரு கிழிந்த துணியை தவிர ஆடை எதுவும் அவரிடம் இல்லை. வெறும் தரையில் படுத்து உறங்கினார். அவருடைய சகோதரர்கள் தங்கள் வயல்களில் அவரை வேலை செய்ய வைத்தார்கள். அவரும் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் தனக்கிட்ட வேலைகள் எதுவாகினும் அவற்றைப் பற்றற்று செய்து முடித்தார். தமது சகோதரர்கள் தனக்கு கொடுத்த உணவு நன்கு சமைத்ததாக இருந்தாலும் சமைக்கப்படாமல் இருந்தாலும் முகம் கோணாமல் அவற்றை உண்டார்.

ஒருநாள் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் தனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு காளிதேவிக்கு நரபலி கொடுப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அவனுடைய வேலையாட்கள் வெகு நேரம் தேடியும் நரபலிக்கு வேண்டிய ஆள் அவர்களுக்கு கிடைக்க வில்லை. அவர்கள் சோர்வடைந்த தருணத்தில் பரதன் கண்ணில் விழுந்தார் கட்டுமஸ்தான தேகத்தோடு விளங்கியவராகவும் கைகால்களில் குறை ஏதுமின்றி இருந்ததாலும் அவர்கள் அவரை கயிற்றால் கட்டி பலிபீடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு முணுமுணுப்பையும் எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அவர்களை பின்தொடர்ந்தார். அவரை குளிப்பாட்டி நெற்றியில் சந்தனம் குங்குமம் பூசி அலங்கரித்தார்கள். அவரை பலிபீடத்தில் நிற்க வைத்து கத்தியை எடுத்துக் கொல்லும் தருணத்தில் காளி அங்கு பிரசன்னமாகி பரதனை காப்பாற்றினாள் அவரைக் கொல்ல நினைத்தவர்களை எல்லாம் காளி கொன்று குவித்தாள்.

சிந்துசௌவீர மாகாணத்தை ஆண்டு வந்த அரசன் கபில முனிவரை தரிசிப்பதற்காக ஒரு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். பல்லக்கு தூக்கும் ஆட்களின் தலைவன் பரதரைப் பார்த்து ராஜாவின் பல்லக்கை தூக்க வருமாறு அழைத்தான். எவ்வித ஆட்சேபனையும் கூறாமல் பல்லக்கு தூக்க இசைந்தார் அவருடைய பார்வை முழுவதும் தரையிலேயே இருந்ததால் அவருடைய நடை மற்றவர்களுடைய நடையின் வேகத்தோடு ஒத்து போகவில்லை. அதனால் பல்லக்கு குலுங்க ஆரம்பித்தது. கோபம் கொண்ட அரசன் தனது ஆட்களை சீராக நடக்குமாறு கட்டளையிட்டான். இருப்பினும் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தது தான் நினைத்தவாறு தனது கட்டளையை சரிவர கடை பிடிக்க தவறியது பரதரே என தெரிந்து கொண்ட அரசன் அவரை கண்டித்தான். அரசன் பரதரைப் பார்த்து நீண்ட நேரம் தனியாக நீ ஒருவனை தூக்கி வருகிறாய் அல்லவா பாவம் மெலிந்த தேகத்துடன் வேறு இருக்கிறாய் வயதானதால் தள்ளாமையும் ஏற்பட்டு விட்டது போலிருக்கிறது என்று ஏளனமாக கூறினார் அரசன்.

அரசனிடத்தில் பரிதாபம் உண்டாயிற்று அவர் ஆத்ம தத்துவத்தை அரசனுக்கு உபதேசித்தார். பருமன் என்னும் குணம் இந்த தேகத்தை சார்ந்ததே தவிர என்னை அல்ல உன்னுடைய தேகம் பிருதிவியின் ஒரு மாறுபாடேயாகும். அதை தாங்கிக் கொண்டிருக்கும் பல்லக்கை தூக்குபவர்களின் அதே பிருதிவியினால் தான் செய்யப்பட்டுள்ளன. பல்லக்கை தாங்கும் தோள்களை முண்டமானது பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த முண்டம் தான் பல்லக்கின் பாரத்தை தோள்களிலிருந்து கால்களுக்கு செலுத்த உதவுகிறது. கால்களை தாங்கிக் கொண்டிருப்பது பூமியாகும். நிலைமை இப்படி இருக்கும்போது நான் பாரத்தை தாங்குகிறேன் என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை தூரத்தை கடப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சென்று அடைவது போன்ற செயல்களெல்லாம் உண்மை நிலையில் இருந்து பார்க்கையில் இல்லாதவைகளாகும் சைதன்யம் மட்டுமே உண்மையில் இருப்பது மற்றவை யாவும் ஒரு தோற்றம்தான் அவருடைய வார்த்தைகளை கேட்டதும் அரசன் தன் தவறை உணர்ந்தான்‌ அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினான். கருத்தாழமிக்க மகானின் போதனைகளை கேட்டு அரசன் மிகவும் பயன் அடைந்தான்.

ஆசைக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் தனது வாழ்க்கை முழுவதையும் நடத்திக் காட்டினார் பரதன் அவர் உடலை நீத்ததும் பிறவியற்ற நிலையான மோட்ச சாம்ராஜ்யத்தை அடைந்தார். பரதனுக்கு ஏற்பட்ட புணர் ஜென்மங்களுக்கு காரணமாக இருந்தது அவருடைய மனம் அதே சமயத்தில் உண்மையை உணர்ந்து ஜீவன் முக்தி நிலையை அடைவதற்கும் காரணமாயிருந்தது அதே மனம்தான். மைத்ரயாணி உபநிஷத்தில் சுத்தமானது அசுத்தமானது என இருவகைப்படும் ஆசையோடு சேர்ந்தால் மன அசுத்தம் ஆகிவிடுகிறது ஆசையற்றியிருக்கும் மனமே சுத்தமானது. உண்மையில் மனிதர்களின் பந்தத்திற்கும் மோட்சத்திற்கு காரணமாகியுள்ளது அவர்களுடைய மனமே ஆகும். புலன் விஷயங்களோடு தொடர்பு ஏற்படும்போது மனம் பந்தத்தை உண்டு பண்ணுகிறது. புலன் விஷயங்களைப் பற்றிய சிந்தனையே இல்லாத மனம் ஒருவனை மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. எப்படி எரிபொருள் தீர்ந்த உடன் அக்கினியானது தனது ஆதாரத்தை ஒடுங்கி விடுகிறதோ அதே போல் மனதில் எண்ணங்கள் நீங்கியதும் மனம் தன் மூலாதாரமான ஆத்மாவில் நிலைபெற்று விடுகிறது. மனம் நன்கு நாசமாகும் வரையில் அதை இருதயமாம் ஆத்மாவில் அடக்கி வைத்திருக்க வேண்டும். அசுத்தமெல்லாம் நீங்கப்பெற்று ஆத்மாவில் நிலைத்துவிட்ட மனதில் உண்டாகும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்று தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version