Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!

அடுத்தவர் துயரத்தில் சந்தோஷம் காண்பவர்..: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

இரண்டு நண்பர்கள் ஒரு பொருட்காட்சி நிலையத்திற்கு சென்றார்கள். வரும்போது அவர்கள் ஒரு ஆஞ்சநேயர் சிலையை கண்டார்கள் நண்பர்களில் ஒருவன் அந்த ஆஞ்சநேயரின் வால் சாதாரணமாக இருப்பதை காட்டிலும் சற்று நீளமாக உள்ளதை கவனித்தான்.

அருகில் சென்று அவன் அந்த வாலின் நுனியில் ஒரு மணி கட்டி இருப்பதை பார்த்தான் ஆவல் மிகுதியால் தனது கையை மணியின் உள்ளே நுழைத்தான். அடுத்த வினாடியே அவன் ஆ என்று அலறிக்கொண்டே தனது கையை எடுத்துக் கொண்டான். எதற்கு என்ன காரணம் என்று நண்பன் கேட்டபோது நான் சந்தோஷத்தில் அப்படி அலறினேன். நீயும் மணியின் உள்ளே கையை வைத்து பார் உனக்கே புரியும். அது எவ்வளவு சுகமான ஒரு அனுபவம் என்று கூறினான்.

இரண்டாவது இளைஞனும் தனது கையை மணியின் உள்ளே விட்டு ஆராய்ந்தான். அவனும் அலறிக் கொண்டே வேகமாக கையை வெளியே இழுத்துக் கொண்டான். அந்த மணியின் உள்ள தேள் ஒன்று இருந்தது. அது அவர்களை கொட்டியதால் தான் அவர்கள் அலறிக்கொண்டே தங்கள் கைகளை வேகமாக வெளியில் இழுத்து கொண்டார்கள்.

முதல் பையன் வேண்டும் என்றே தான் பட்ட கஷ்டத்தை தனது நண்பனும் அனுபவிக்குமாறு செய்தான். நண்பனின் கஷ்டத்தைப் பார்த்து அவன் சந்தோஷமடைந்தான். அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணக்கூடிய இப்படிப்பட்ட இழிவான மக்களின் செயல் வெறுக்கத் தக்கதாகும். மாறாக உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் துயரத்தை களைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் இருக்க செய்ய முற்படுவார்கள்.

பிறருக்கு நன்மை புரிவதற்காக அவர்கள் எவ்வளவு பெரிய துயரங்களையும் பொறுத்துக் கொள்ள தயாராக இருப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version